Mhc news

[11/30, 12:29]: நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது சில ((ஊழல்)) குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறி பேட்டி அளித்திருந்தார்.

இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக அரசு ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசியல் கட்சியினர் மீது பதிவான அவதூறு வழக்குகளை திரும்பப்பெறுவது என முடிவெடுத்துள்ளதாக கூறி அதற்கான அரசாணைகளை தமிழக அரசு தாக்கல் செய்தது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்து தீர்ப்பளிllReporter: திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே, தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் விமானம் உரசி சென்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்தது.

விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல், சம்பந்தப்பட்ட விமானி கணேஷ்பாபுவின் உரிமத்தை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, விமானி கணேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விமானி தரப்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தி கிஸ்தி ஆஜராகி, 2018ம் ஆண்டு வரை 4,270 மணிநேரம் விபத்தில்லாமல் விமானம் ஓட்டியதாகவும். தன் மீது எந்த குறைகளும் இல்லை என்றும்,
விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்தாக தெரிவித்திருந்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து கழகம் சார்பில், விமானம் டேக் ஆஃப்பின் போது என்ஜின் உந்துதலைக் கண்காணிக்கத் தவறியதாகவும், சுற்றுச் சுவரைத் தொடர்ந்து, கனரக போக்குவரத்து வாகனங்கள் இயங்கும் மாநில நெடுஞ்சாலை உள்ளதால், கனரக வாகனத்தில் மோதியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. விமானம் சேதம் அடைந்த போதிலும், விமானத்தை திருச்சியிலேயே மீண்டும் தரையிறக்காமல், தொடர்ந்து பறக்கவிட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர். மகாதேவன் விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் நான்கு வாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[11/30, 14:26] Anand Polimer Tv Reporter: திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் காரணமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரியும், தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மரக்காணம் ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 22 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அர்ஜூனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு தானும், விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானின் ஆதரவு பெற்ற தயாளன் என்பவரும் போட்டியிட்ட நிலையில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தான் 14 ஓட்டுகளும்,தயாளன் 12 ஓட்டுகளும் பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

14 வாக்குகள் பெற்ற தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 12 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த தயாளன் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கு தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டதாகமும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலை பற்றி தேர்தல் முடிந்த மறுநாள் (23.11.21) வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் அலைபேசியில் கேட்ட போது, தனது 35 ஆண்டு கால அரசு பணியில் இது போன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை. எனவும், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லையென அவர் மனக்குமுறலை வெளிப்படுத்தியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி ஏற்கவும் பணி செய்யவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ள அவர், தேர்தலின் போது பதிவான சிசிடிவி மற்றும் வீடியோ பதிவுகளை அழிக்க வாய்ப்புள்ளதால், அவற்றை உயர் நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

தயாளன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவித்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தன்னை அறிவிக்க வேண்டுமெனவும், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்v Reporter: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 5ம் தேதி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது, அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் பின் தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாகவும், இந்த ஆணையம் நியமனம் குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்க அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால், அதுகுறித்து விளக்கமளிக்க மனுதாரர்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

You may also like...