Mdmk Priyakumar: தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மறைவு! வைகோ இரங்கல் by Sekar Reporter · January 4, 2020 [1/4, 11:59] Mdmk Priyakumar: தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் மறைவு! வைகோ இரங்கல் தமிழ்நாடு சட்டப் பேரவை முன்னாள் தலைவர் வழக்கறிஞர் அன்புச் சகோதரர் பி.எச்.பாண்டியன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த வழக்கறிஞர், சட்டப் பேரவைத் தலைவராக இருந்து அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தார். அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து புன்முறுவல் தவழும் முகத்துடன் அனைவரிடமும் பேசிப் பழகும் பண்பாளர். என்னிடத்தில் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். நாடாளுமன்ற மக்கள் அவையில் மிகச் சிறப்பாக அவர் பணியாற்றினார். இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டியவர். இப்படி திடீரென இயற்கை எய்தியது அறிந்து மிக மிக வேதனைப்படுகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வைகோ பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை – 8 04.01.2020 [1/4, 12:00] Sekarreporter: .
மதுரைவீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என விளக்கமளிக்க, புத்தக ஆசிரியர் குழந்தை ராயப்பன் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. November 17, 2023 by Sekar Reporter · Published November 17, 2023
Thiruvbathi amman Temple order WP No.21769 of 2023 and WP No.19128 of 2023 and WMP Nos.21115 of 2023 and 18385 of 2023N.ANAND VENKATESH, J., March 19, 2024 by Sekar Reporter · Published March 19, 2024
The Tamil Nadu government has constituted a one-man committee headed by retired Madras High Court judge K. Chandru to recommend measures for effective administration of the homes functioning as per the Juvenile Justice (Care and Protection of Children) Act of 2015. April 13, 2023 by Sekar Reporter · Published April 13, 2023