Mafras high court temple case order admk centempt case order june 29

[6/28, 12:29] Sekarreporter: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ..

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர் .இதையடுத்து இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வருகிற ஒன்றாம் தேதி அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையென்றால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று பேர் சார்பிலும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி, ஜனநாயக ரீதியிலான போராட்டம் தான் என்றும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றும் வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் மூன்று பேர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[6/28, 13:09] Sekarreporter: கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சீனிவாசன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பான கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள்,
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இதை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவில் நிலங்களில் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடரப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத்துறை அதிகாரி என்னதான் செய்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவு போட்டதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் செயல்படுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார்.

வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

50 ஆண்டுகாலமாக உள்ள அக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

கோவில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்கு பயன் என்பதால் தான், கோவில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.
[6/28, 13:43] Sekarreporter: அதிமுக பொதுக்குழு : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு

உயர் நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது…

நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்தது…

ஒற்றை தலைமை வேண்டும் என்று கையெழுத்திட்டு ஒப்படைத்தது..

ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு என அறிவிக்கப்பட்டது….

ஆகியவை உயர் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என மனு…

அதிமுக பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுத்தாக்கல்

விரைவில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது….
[6/28, 17:27] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருச்சியில் தங்கியிருந்து இரு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும், அதன்பின்னர் சென்னையில் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கியது.

அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வந்தநிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென நிபந்தனையை தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் அந்த நிபந்தனையையும் தளர்த்தக்கோரி ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார். தான் ஆஜராகும்போது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் கூடுவதால், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு விதிக்கபட்ட நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி உத்தரவிட்டார்.
[6/28, 17:43] Sekarreporter: அதிமுக பொதுக் குழு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில்,

உயர் நீதிமன்ற உத்தாவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும் என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
[6/28, 17:50] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முற்றிலும் தளர்வு….

சென்னை உயர் நீதிமன்றம்

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்றம்

தமது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்

நீதிபதி சதீஷ்குமார்
[6/28, 17:50] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினையில், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி, நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில் கைதான ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருச்சியில் தங்கியிருந்து இரு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும், அதன்பின்னர் சென்னையில் திங்கட்கிழமைதோறும் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கியது.

அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி வந்தநிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வார திங்கட்கிழமைகளில் ஆஜராக வேண்டுமென நிபந்தனையை தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் அந்த நிபந்தனையையும் தளர்த்தக்கோரி ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார். தான் ஆஜராகும்போது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் கூடுவதால், தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு விதிக்கபட்ட நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி உத்தரவிட்டார்.
[6/28, 19:39] Sekarreporter: சிறையில் செல்போன் வைத்திருந்ததாக, ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு திடீர் சோதனை நடத்திய போது, அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார், முருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முருகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சிறைக்குள் செல்போன் வைத்திருப்பது சிறை குற்றம் என்பதால் அதில் சிறை கண்காணிப்பாளர் தான் தண்டனையை முடிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், தனக்கு முன்று மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி மனைவி நளினி உள்ளிட்ட உறவினர்களை சந்திக்க முடியாது என்ற தண்டனையை அனுபவித்து விட்டதால், வேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன் தரப்பில் ஒரு குற்றத்திற்காக இரு முறை தண்டனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி, முருகனுக்கு எதிராக பாகாயம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[6/28, 20:30] Sekarreporter: மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து, என்பவர், 2016ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, முத்துவை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக், முத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...