Madras high cout april 8 th orders

[4/8, 10:35] Sekarreporter: அதிமுக வழக்கு விசாரித்த நீதிபதி ஸ்ரீதேவி இன்று விடுமுறை எனவே வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது வழக்கு சசிகலா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை நீதிபதி விடுமுறை என்பதால் வேறு தேதிக்கு ஒத்திவைப்பு
[4/8, 11:09] Sekarreporter: சிதம்பரம் நடராஜர் ஆலய கனக சபை மண்டபத்திற்குள் அனுமதிக்கக்கோரி போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதி கோரி ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தீட்சிதர்களை விரும்பாத ஒரு குழுவினர், தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதாகவும், கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக, கனகசபை மண்டபத்தை திறக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை வற்புறுத்துவதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போரட்டம் நடத்த அனுமதிக்கூடாது என மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மேலும் கோவில் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பொது தீட்சிதர் செயலாளருக்கும், விருத்தாச்சலத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கும் உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[4/8, 11:25] Sekarreporter: சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தவிர்க்க முடியாத காரணத்தால் விடுப்பில் சென்றதால், அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக நிர்வாகிகளின் நிராகரிப்பு மனுக்கள் மீதான உத்தரவு வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பொது செயலாளர் மூலமாக இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது..

இருவரின் வழக்குகளையும் வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகவும்,
சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்கிறபோது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து,வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது
எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில்.மனுத்தாகல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சியில் பொது செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்த நிலையில், அவரது வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிராகரிப்பு மனுக்களில் சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி இன்று உத்தரவிடுவதற்காக பட்டியலிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நீதிபதி ஸ்ரீதேவி விடுப்பில் சென்றதால் அவரிடம் பட்டியலிடப்பட்ட வழக்குகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதன்படி இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் மனுக்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
[4/8, 11:59] Sekarreporter: புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 21 புறப்பாட்டு தலன்களை 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இதில் சென்னை நீக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சேர்க்க கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், இது அவர்களுக்கு பெருத்த அசவுகர்யத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது எனவும், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொள்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதை பரிசீலித்து வருவதாகவும் இந்திய ஹஜ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[4/8, 12:00] Sekarreporter: அதிமுக-விற்கு உரிமை கோரிய வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்கள் மீதான உத்தரவை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது
[4/8, 13:11] Sekarreporter: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்
எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக பார்வேர்ட் செயத்தாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறி மனு தாக்கல் செய்யபட்டது. விசாரணைக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது குறித்த நடிகர் எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளிலும் தனித்தனி பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[4/8, 13:47] Sekarreporter: புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதை உறுதி செய்யும்படி, நகர் ஊரமைப்பு இயக்குனரகத்துக்கு (DTCP) தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை நீர் வழித்தடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு ஆக்கிரமிப்புகளால், அரசன்கழனி, வேடந்தாங்கல் நகர், நேதாஜி நகர், போலினெனி மலை பகுதி, பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் DLF பகுதி உள்ளிட்ட இடங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதி துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், இனி வரும் காலங்களில், விவசாய நிலத்தை விவசாயம் தவிர்த்த மற்ற பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கும் போது அனைத்து விதிகளும் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, புதிய வீட்டு மனைகளை உருவாக்கும் போது மழை நீர் வெளியேற்ற முறையான வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் எனவும், விதிகளை முறையாக பின்பற்றாத கட்டுமானங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்குனரகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளநீர், நீர்நிலைகளுக்கு செல்ல ஏதுவாக போதுமான வடிகால் கால்வாயினை நீர்வள ஆதார அமைப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், வடிகால் கால்வாயினை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் அபராத தொகையை வசூலிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விதிகளை மீறி ஆக்கிரமித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வள ஆதார அமைப்பின் கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், வெள்ளம் தடுப்பு திட்டம் மற்றும் பணிகள் குறித்து நீர்வள ஆதார அமைப்பின் ஆறு மாதத்திற்கு ஒருமுறை திட்டம் நிறைவடையும் வரை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையான வெள்ள தடுப்பு பணி திட்டத்தினை தமிழ்நாடு தலைமை செயலாளர் கவனம் செலுத்தி உரிய நிதியை குறுகிய காலத்தில் ஒதுக்கி, பருவமழைக்குள் இந்த பகுதியில் வெள்ளம் பாதிப்பு ஏற்படாது வாறு திட்டத்தை முடிக்க வலியுறுத்திய தீர்ப்பாயம், வழக்கை முடித்து வைத்தது.
[4/8, 13:51] Sekarreporter: அதிமுக முன்னாள் எம்.பி.குமார் குறித்து அவதூறாக பேசியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், திருச்சி தொகுதியின் எம்.பி குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகாரளித்தார்.

அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதால் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இதனையடுத்து தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[4/8, 15:24] Sekarreporter: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியதற்காக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய இளங்கோவன், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்றும், ஜெயலலிதா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதற்கு அமைச்சர் வழக்கு தொடர முடியாது என இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதி, காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[4/8, 16:24] Sekarreporter: திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வில் இருந்து திமுக-வில் இணைந்த சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன், கடந்த 3ம் தேதி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள பிராட்வே பேருந்து நிலையத்தில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான காவல்துறையின் முதற்கட்ட
விசாரணையில், போஸ்டர்கள் ஒட்டுவதில் அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே விரோதம் இருந்ததாக கூறப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் கணேசன், தினேஷ், கார்த்தி, குமரேசன், இன்பா ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஏப்ரல் 4ம் தேதி சரணடைந்தனர்.

நீதிமன்றத்தில் சரண்டைந்த 5 பேரையும் விசாரணைக்கு அனுமதிக்க கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் எஸ்பிளனேட் காவல்துறையினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், அதிமுக பிரமுகர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்பிளனேட் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
[4/8, 16:58] Sekarreporter: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திமுக சார்பில் ஐ.பெரியசாமி தலைமையில் ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் காவல்துறையை விமர்சித்து ஐ. பெரியசாமி பேசியதாக நிலக்கோட்டை காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியல் உள்நோக்கத்துடன் பதியபட்டுள்ள வழக்கு என்பதால், அதை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

இதனை ஏற்ற நீதிபதி, பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...