Madras high court sept 9 th today news

W.P.Nos.10666 of 2019 etc.
W.P.Nos.10666 of 2019 and 2127 of 2021
THE HON’BLE CHIEF JUSTICE
and
P.D.AUDIKESAVALU,J.
(Order of the Court was made by the Hon’ble Chief Justice)
The matter had been adjourned for two months by the
previous order of July 7, 2021 upon the State’s representation that
action could not be taken against the encroachers during the period
of lockdown following the second surge of the pandemic. The order
dated July 7, 2021 noticed that the restrictions imposed under the
lockdown had been eased and required appropriate action to be
taken in accordance with law under the Tamil Nadu Protection of
Tanks and Eviction of Encroachment Act, 2007 upon due notice to
the perceived encroachers.
2. No status report has been forthcoming. Instead, it is
submitted by Mr.Muthukumar, learned Government Pleader, that
there was a previous petition of the year 2010 in which the
encroachers were directed to be removed, whereupon 403
encroachers were discovered and despite the State attempting to
__________
Page 1 of 6
https://www.mhc.tn.gov.in/judis/

[9/8, 12:19] Sekarreporter: பொது இடங்களில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், கடந்த 30ஆம் தேதி தமிழக அரசு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி,அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்..விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு,
விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்சம் ஐந்து பேராவது அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,மத உரிமைகளை பின்பற்ற வாழ்வாதர உரிமை முக்கியமானது என்றும், பொதுநலன் கருதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசுபிறப்பித்துள்ள தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
[9/8, 12:19] Sekarreporter: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல்.
கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், தற்போது யாரும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
[9/8, 12:25] Sekarreporter: தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல்நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையாகும். இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல்நிலையத்துக்கு தடை விதித்து நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் 2 பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, நியமிக்கப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் சவுமேந்திரர் ஆகியோர் அடங்கிய குழு ஏரி பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையில், செம்மஞ்சேரி காவல் நிலையம் ஏரி ஆக்கிரமிப்பு இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை மட்டும் இடித்துவிட்டால் பெரிய மாற்றம் ஏற்படாது என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து ஐஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை.

ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.
நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும்.
சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் இருந்தன. ஆனால், அவை பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
[9/8, 13:45] Sekarreporter: பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்து புகைப்படம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 இந்த புகாரின் அடிப்படையில், அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து,சிறையிலடைத்தனர்.
 இதனையடுத்து,அவரது ஜாமீன் மனுவை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து ராஜகோபால் மீது புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தநிலையில் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர்.சுதா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆட்கொணர்வு வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று ஆசிரியர் ராஜகோபாலன் மனைவி சுதா உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது கணவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், எனவே கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் எனவே வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது ..வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
[9/8, 14:09] Sekarreporter: யு.பி.எஸ்.சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக்கோரும் மனுவை,
8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டுமெனவும் இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்காததால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது,
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவதால், இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் இத்தேர்வுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாக எடுத்துரைத்தார்

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம் என்பதால், அலுவல் மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படுவதாக எடுத்துரைத்தார்

தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மனுதாரர் புதிதாக கோரிக்கை மனு அளிக்குமாறும்,
அதனை 8 வாரத்திற்குள் பரீசிலித்து
உரிய உத்தரவு பிறப்பிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
[9/8, 15:00] Sekarreporter: திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுக எம்.பி. தான் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சி சின்னராஜ் ஆகியோர் திமுக’வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில்
தேசிய மக்கள் சக்தி கட்சி, தலைவர் எம். எல். ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர பொது நல வழக்கு தொடர முடியாது என்பதால் தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி, தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுக’வில் இருந்து விலகி திமுக’வில் சேர்ந்து விட்டதாக பதில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[9/8, 16:26] Sekarreporter: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டதையடுத்து, தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த கிராந்தி கன்ஷ்ட்ரக்சன் மற்றும் ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்கள் கட்டிடங்களை இடிப்பது மற்றும் இடர்பாடுகளை அகற்றுவதற்கு பயன்படுத்தும் வாகனங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தனர்.

இறக்குமதி செய்யபட்ட இந்த வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க தடைக்கோரி கடந்த 2008ம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், நுழைவு வரி செலுத்தக்கூடிய நிலையில் இல்லை என தெரிவித்ததையடுத்து, கிராந்தி கன்ஷ்ட்ரக்சன் மற்றும் ஸ்ரீ முருகன் எர்த் மூவர்ஸ் என்ற 2 தனியார் நிறுவனங்களின் இயக்குனர்களையும் செப்டம்பர் 6ம் தேதி ஆஜர்படுத்தும் வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறக்குமதி செய்யபட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தி விட்டதாக தெரிவிக்கபட்டதையடுத்து, 2 தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, இரு தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார்.
[9/8, 18:05] Sekarreporter: வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை விதித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையகாரனூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியிடம், கூடுதல் சொத்து வரி செலுத்தும்படி, தட்டான்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி வர்த்தக ரீதியில் செயல்படும் கட்டிடங்களுக்கு கூடுதல் சொத்து வரி விதிக்க கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள், சொத்து வரி செலுத்தாமல் ஏய்த்து வருவதாகவும், இதனால் பல கிராமங்களுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதிக கட்டணம் வசூலித்து, வணிக நோக்கில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், வரி செலுத்த தயங்குவதாக வேதனை தெரிவித்த

கிராம மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வில்லை எனவும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இன்னும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நிலவுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்..

சொத்து வரி மதிப்பீடு, வரி வசூல் போன்ற நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு, ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வக்கீல் கே துரைசாமி, பொதுநல வழக்கில் தான் இதுபோல ஒரு உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும்,ரிட் வழக்கில் இதுபோல் உத்தரவு பிறப்பிக்கமுடியாது என்றும் எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

You may also like...