Madras high court sep 22 orders

[9/23, 13:23] Sekarreporter9445430817: அதிமுகவைச் சேர்ந்த மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,

தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதியோ, ரேஷன் கடை கட்டிடமோ சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசு கட்டிடங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல், பொறியியல் கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம், மற்றும் தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாகவும் மனுவில், குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால் அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலங்களை அரசின் நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழகம் தரப்பில் தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் (((மனுதரார் மற்றும் தம்பிதுரையின் பல்கலைக்கழகம்))) உரிய நோட்டீஸ் வழங்கி சர்வே முழுமையான நடத்தப்பட வேண்டும். இந்த சர்வே நிகழ்வை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, சர்வே செய்தது தொடர்பான அறிக்கையை மூன்று வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை முன்று வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
[9/23, 13:23] Sekarreporter9445430817: கிரிமினல் அவதூறு வழக்கு வழக்கு நிலையில் இருந்ததால் நடிகை லீனா மணிமேகலைக்கு பாஸ்போர்ட் பெற அதிகாரிகள் மறுத்தனர் இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி மகாதேவன் விசாரித்து பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்
[9/23, 13:25] Sekarreporter9445430817: Honble Mr. Justice Mahadevan has sought for a reply from the Regional Passport Office on the basis on which filmmaker Leena Manimekalai’s passport has been impounded by the Regional Passport Officer without following due process of law. The case has been Posted after two weeks.

Appearance: Mr. Abudu Kunmar Rajaratnam for Mr. V.S. Senthilkumar
[9/23, 14:52] Sekarreporter9445430817: காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து,வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ 
யானையை வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, யானையின் நடமாட்டம், உணவு அருந்துவது குறித்த வீடியோ பதிவு வனத்துறை சார்பிலும், மனுதாரர் சார்பில் இந்தியாடுடே தொலைகாட்சி பதிவு செய்த காட்சியும் காண்பிக்கப்பட்டது…

இதையடுத்து,ரிவால்டோ யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு மற்றும் 200 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் ஆனால் தும்பிக்கைப்பாதிக்க பட்டுள்ளதால் அதனால் உணவை முழுமையாக சாப்ப்பிட முடியாமல் பாதி உணவு  மற்றும் தண்ணீர் கீழே விழுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிவால்டோ யானை ஆரோக்கியமாக இருப்பதால் மீண்டும் காட்டில்  விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது..

காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்த தலைமை வன பாதுகாவலர்,ரிவால்டோ யானையை 5 மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் யானை காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாகவும், ரிவால்டோ காட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்..

இதையடுத்து,தும்பிக்கையில் குறை இருந்தாலும்,ரிவால்டோவால் சாப்பிட முடிவதாக தெரிவித்த நீதிபதிகள், விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கருத்து தெரிவித்து  காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும்,யானைகள் வழிதடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டதற்கு,யானைகள் வழிதடத்தில் மனித தலையீடு இல்லமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்….
[9/23, 15:11] Sekarreporter9445430817: பாஸ்போர்ட்டை முடக்கிய உத்தரவை எதிர்த்து கவிஞர் லீனா மணிமேகலை தாக்கல் செய்த மனுவுக்கு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் சுசி கணேஷன் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக, இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கு சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், லீனா மணி மேகலையின் பாஸ்போர்ட்டை முடக்கி செப்டம்பர் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மண்டல பாஸ்போர்ட் அலுவலர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்ததவிட்டார்
[9/23, 15:15] Sekarreporter9445430817: சாலை விரிவாக்க பணிகளுக்காக வி.கே.சசிகலாவின் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் சசிகலாவுக்கு சொந்தமாக தோப்பு மற்றும் பழத்தோட்டம் உள்ளது. இப்பகுதியில் நிலத்தின் ஒரு பகுதியை 784 சதுர மீட்டர் அளவு நிலத்தை சாலை விரிவாக்க திட்டத்திற்காக கையகப்படுத்த கடந்த 2010 ம் ஆண்டு சிறப்பு வட்டாட்சியர் நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதை எதிர்த்து கடந்த 2011ம் ம் ஆண்டு சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் சாலை விரிவாக்க திட்டத்திற்கு அந்த நிலம் அவசியமானது என்றும், வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக நிலம் கையகப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

சசிகலா தரப்பில் நில இழப்பீடு வழங்குவது தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் தனக்கு வரவில்லை என்றும் ,அது தொடர்பான கூட்டத்தில் தானோ தனது பிரதிநிதியோ பங்கேற்கவில்லை என்றும் எனவே நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி இளத்திரையன், சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவின் நிலத்தின் ஒருபகுதியை கையகப்படுத்தும் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்
[9/23, 16:09] Sekarreporter9445430817: வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சிறப்பு அதிரடிப்படை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய 7.20 கோடி ரூபாய் நிவாரணத்தை வழங்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடியல் மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் கடந்த 1993-ஆம் ஆண்டு வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடகா இரு மாநில அரசுகளும் கூட்டு ஒப்பந்தத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படை ஒன்றை அமைத்து மலையோர கிராமங்களில் வீரப்பன் தேடி வந்ததை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் வீரப்பன் நடமாட்டமுள்ள மலையோர கிராம மக்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று சட்டவிரோதமாக சித்தரவதை முகாம்களில் வைத்து, சித்திரவதை, பாலியல் வன்முறை திட்டமிட்ட மோதல் சாவுகள், மேலும் பொய் வழக்கு போன்ற கொடுமைகள் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளனர். அதிரடிப்படை யால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்த சதாசிவா கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் அமைப்பு, ஆணையத்தில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட 192 பேர் சாட்சியம் அளித்ததில், 89 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவத்தின்போது வீரப்பனால் கோரிக்கை வைக்கப்பட்டு இரு மாநில அரசுகளால் தலா கோடி ரூபாய் ஒதுக்கியதையும் தெரிவித்துள்ளனர். அந்த 10 கோடியில் இரு மாநில அரசுகளும் 2.80 கோடியில் இழப்பீடாக கடந்த 2007ஆம் ஆண்டு கொடுத்தது என்றும், ஆனால் 14 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை மீதமுள்ள 7.20 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே மீதமுள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கு வந்தது நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து தமிழக அரசு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...