Madras high court sep 20th orders

 

[9/20, 11:37] Sekarreporter1: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது..

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண் ,உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு நகலை சமர்பித்தார்.மனுதாரர் ஆஜராகி ஏற்கனவே இதே அமர்வு பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.மேலும் எடப்பாடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்ப்பு நகலை படித்துபார்க்க அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இரண்டு வாரம் ஒத்திவைத்தனர்.
[9/20, 13:16] Sekarreporter1: வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க சம்பந்தப்பட்ட அமர்வில் முறையீடுமாறு பொறுப்பு தலைமை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அவற்றில் நடவடிக்கை எடுகவில்லை என உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன

பின்னர் சென்னை மற்றும் கோவை பிரிவுகளால் தலா ஒரு வழக்கு என 2021, 2022ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டது. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்துள்ள ஒற்றை நீதிபதி அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்றும், மத்திய அரசு அனுமதி வழங்கிய அனுமதி திரும்பப் பெறப்படாததால் வழக்கறிஞஎ ராஜு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்து இருந்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார்.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை நடத்த தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.எஸ்.பி். வேலுமணி சார்பில் ஆஜரான லழக்கறிஞர்
ஐயப்பராஜ் ஆஜராகி டெல்லியிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தாங்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.வழக்கை எம்.பி.எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.அதற்கு வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகி ,முதல் அமர்வு அல்லது இரண்டாவது அமர்வு விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அமர்வில் முறையீடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
[9/20, 15:06] Sekarreporter1: பார்வை மாற்றுத் திறனாளிகள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,500 ரூபாய் வழங்கப்படும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறி, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில், மற்ற மாற்தித் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருவதாகவும், பார்வை மாற்துத் திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை சமூக நலத்துறை செயல்படுத்துவதால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதால், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிட்ட தமிழக அரசு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்தது.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால் சமூக நலத்துறை மூலம் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெற மாவட்டம் தோறும் வருவாய் கோட்டாட்சியர்கள் அதிகாரிகளாக நியமித்து, பார்வை மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பார்வை மாற்றுத் திறனாளிகள், எந்தவித கஷ்டமும் இல்லாமல் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன், வேலையில்லா பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு பெறும் தகுதி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளை மற்ற பிரிவு மாற்துத் திறனாளிகளுடன் ஒப்பிட முடியாது என்ற போதும், உடல் நலம் பாதிக்கப்பட்ட, வயதான பார்வை மாற்றுத் திறனாளிகளை, மற்ற பிரிவினருக்கு இணையாக கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[9/20, 17:49] Sekarreporter1: தொழிலதிபரை கடத்தி, நில அபகரிப்பில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை சிறை பிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி தொழிலதிபர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேபோல தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட சிவகுமார் உள்ளிட்டோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அலஹாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாநில போலீசாருக்கு எதிரான வழக்கை மாநில போலீசார் விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
[9/20, 18:31] Sekarreporter1: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த 25 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கத்தியைக்காட்டி மிரட்டி 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் மீது கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், குற்றம் சாட்டப்பட்ட அறிவழகன் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...