Madras high court sep 15 th order whatsapp news round up

 முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.பி.வி.பி. அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கியும், உடைகளை கிழித்தும், காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்வரி புகார் அளித்தார்.

அந்த புகாரில் ஏ.பி.வி.பி. அமைப்பை சேந்த் 35க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்து சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்களது மனுவில் மற்றொரு மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர் என்ற முறையில் போராடியதாகவும், முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே தங்களது நோக்கமாக இருந்ததாகவும், ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[9/15, 13:39] Mukesh Puthiyathaimurai Jounalist: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் அது ராஜாராம் தாக்கல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற பன்னீர்செல்வம், தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன், ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதால், போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம், தற்போது அரசிலும், கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும்,
அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் ஆதிராஜாராமால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
[9/15, 15:t: கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும், வனம், நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது எனவும், கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றிம் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.
[9/15, 15:56]

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது..

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்ட உறுப்பினர்களையும் நீக்கி கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ் கவுரவ பதவியாக இருந்தாலும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி, குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்
என்று கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ,தனி நீதிபதி ,நியமனம் தொடர்பான குழந்தைகள் உரிமை சட்டப்பிரிவையும், நீக்குவதற்கு தொடர்பான சட்டப்பிரிவையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும் ,அதை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அரசுக்கு நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது என்றும் ஒட்டுமொத்த உறுப்பினர்களை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து வழக்கு விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விகிக்கப்பட்டுள்ளதால் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் யாரும் செயல்பட முடியாது.
[9/15, 17:43] Mukesh Puthiyathaimurai Jounalist: திமுக வருவாய்த்துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மீது அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியது உள்ளிட்ட ஏழு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும், ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், விவசாயகளுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் மற்றும் மின் கட்டண உயர்வு கணடித்தும் போரட்டங்கள் நடத்தியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு விருதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை ரத்து செய்யக்கோரி ராமச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஏழு வழக்குகளில் இரு வழக்குகளை அரசே திரும்ப பெற்று அரசாணை பிறப்பித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
[9/15, 17:47]

அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பராமரிக்கப்படும் அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட யானை ஜாய் மாலாவை, அதன் பாகன்கள் வினைல் குமார் மற்றும் சிவ பிரசாத் ஆகியோர் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒன்பது கோவில்களுக்கு 2010 – 2015ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட யானைகளை திரும்ப பெற அசாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து, அசாம் அரசிடமிருந்து தமிழக அரசு பெற்ற ஒன்பது யானைகளையும் திருப்பி அனுப்ப தடை விதிக்க கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தமிழகத்தில் கோவில் யானைகளை பராமரிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை கோவில் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் யானை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு பாகன்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த யானைகளை மீண்டும் அசாமுக்கு அனுப்புவது என்பது மத உணர்வுகளை புண்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட யானைகளை மீண்டும் சுவாதீனம் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் 9 கோவில் யானைகளையும் யாரிடமும் ஒப்படைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழகத்தில் உள்ள ஒன்பது கோவில்களில் பராமரிக்கப்படும் அசாம் மாநிலத்தைச் சார்ந்த யானைகளை திருப்பி அனுப்பப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[9/15, 17:51

 

t: கள்ளக்குறிச்சி பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கியதாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கனியாமூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி ஆகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, கலவரம் நடந்த பள்ளிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிஎஸ்சி பட்டதாரியான அவரது எதிர்காலம் இந்த வழக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் ஆகாஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

நான்கு வாரங்களுக்கு தினமும் இரண்டு வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அதன் பிறகு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, சின்ன சேலம் காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
[9/15, 17st: குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீப காலமாக குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் மட்டுமே சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிடுள்ளது.

தமிழக காவல் துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும், அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.

இதை ஏற்று நால்வரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதி, சமூகத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் சட்டம் – ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணியம் மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் – ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்கள், காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி சுப்ரமணியம், சட்டம் – ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வது உயரதிகாரிகளின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ள நீதிபதி, நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு உத்தரவிடுள்ளார்.

 

[9/15, 06:34] Sekarreporter1: Madras high court orders sep 14 eps tender actor news https://sekarreporter.com/madras-high-court-orders-sep-14-eps-tender-actor-news/
[9/15, 06:37] Sekarreporter1: Sep 14 th whatsapp round up news https://sekarreporter.com/?p=38827
[9/15, 07:19] Sekarreporter1: https://youtu.be/FS-y1z_wljY
[9/15, 07:53] Sekarreporter1: https://youtu.be/F6oz-Adyd_s
[9/15, 08:09] Sekarreporter1: Yesterday after attending EWS case in SupremeCourt had Coffee in SC Adv Assn lounge with Senior Advocates and Lawyers who are arguing against reservations to upper caste.
[9/15, 08:19] Sekarreporter1: https://youtu.be/DveWryc4UP8
[9/15, 08:19] Sekarreporter1: https://youtu.be/DveWryc4UP8 Dr subbya murder case
[9/15, 08:26] Sekarreporter1: Chengalpattu District Cricket Association A Registered Association mhc judge r subramaniyam order notice adv n jothi https://sekarreporter.com/chengalpattu-district-cricket-association-a-registered-associationw2/
[9/15, 10:21] Sekarreporter1: [9/15, 09:58] Sanjai Gandhi Dmk Advt: அறிஞர் அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள் விழா. அறிஞர் அண்ணா துறையை பற்றி நாங்கள் எழுதிய புத்தகத்தை மாண்புமிகு முதல்வரிடம் வழங்கிய நிகழ்வைக் நினைத்து பெருமை கொள்கிறோம்.
[9/15, 10:20] Sekarreporter1: 🌹
[9/15, 10:44] Sekarreporter1: [9/15, 10:43] Sekarreporter1: [9/15, 10:43] Sekarreporter1: https://twitter.com/LiveLawIndia/status/1570261942123597827?t=PQ5MydSiuflyNCNFMShyRw&s=08
[9/15, 10:43] Sekarreporter1: No Seperate Domicile For States ; State Reorganization Cannot Take Away Fundamental Right Of Indian Citizens To Reside & Settle In Any Part Of Country: Supreme Court

 

 

https://www.livelaw.in/top-stories/supreme-court-state-reorganization-seperate-domicile-fundamental-right-state-of-telangana-vs-b-subba-rayadu-2022-livelaw-sc-767-209314
[9/15, 10:44] Sekarreporter1: Vrsj
[9/15, 11:27] Sekarreporter1: [9/15, 11:25] Sekarreporter1: Case against ops dismissed
[9/15, 11:25] Sekarreporter1: Adv rajalashmi
[9/15, 11:26] Sekarreporter1: Ops security withdraw case filed by athirajaram
[9/15, 11:49] Sekarreporter1: https://youtu.be/H5TZfWLElAo
[9/15, 11:54] Sekarreporter1: [9/15, 11:50] Govt Counsel Venkadeswaran: ஒரு இயக்கத்தை ஆரம்பித்த தலைவனின் பிறந்தநாளை..,

அதுவும் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கவே உருவாக்கப்பட்ட இயக்கத்தின் தலைவன் பிறந்தநாளை.,

இதைவிட அருமையாக யாராலும் சிறப்பிக்க முடியாது.!

அண்ணா பிறந்தநாளில்.,
கல்வி கற்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக காலை சிற்றுண்டி உணவளிக்கும் திட்டத்தை தொடங்கிவைத்து உற்சாகமூட்டுகிறார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்கள்.!
[9/15, 11:53] Sekarreporter1: 🌹
[9/15, 11:55] Sekarreporter1: [9/15, 11:50] MHC SGP Venkadeswaran: ஒரு இயக்கத்தை ஆரம்பித்த தலைவனின் பிறந்தநாளை..,

அதுவும் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கவே உருவாக்கப்பட்ட இயக்கத்தின் தலைவன் பிறந்தநாளை.,

இதைவிட அருமையாக யாராலும் சிறப்பிக்க முடியாது.!

அண்ணா பிறந்தநாளில்.,
கல்வி கற்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக காலை சிற்றுண்டி உணவளிக்கும் திட்டத்தை தொடங்கிவைத்து உற்சாகமூட்டுகிறார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்கள்.!
[9/15, 11:53] Sekarreporter1: 🌹
[9/15, 13:48] Sekarreporter1: https://youtu.be/HspNIY469AY
[9/15, 14:16] Sekarreporter1: [9/15, 14:15] Sekarreporter1: Petition was filed by Aadi Rajaram (ADMK district secretary) to consider his representation given to DGP and Commisisoner of Police, Chennai to withdraw the security given to Mr. O. Panneerselvam. Hon’ble Judge dismissed the case stating that the petitioner has filed the present petition without any locus standi. Mr. S. Santhosh (Government Advocate, Criminal Side) appeared for the State.
[9/15, 14:16] Sekarreporter1: .
[9/15, 14:25] Sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P. Nos. 9048 of 2016 and W.P. Nos. 1668 to 1670 of 2017 and Considering the importance of the issue regarding the conversion of Armed Reserve Police Personnel to Law and Order category, this Court emphatically reiterate that the procedures as contemplated and the eligibility criterias fixed including the suitability of Police Personnel are to be assessed in the interest of the Law and Order to be maintained in the society at large, which is the public interest and a constitutional mandate to be performed by the Police Departments. Since the Law and Order is having direct implication on the protection of Fundamental Rights of the citizen under Part III of the Constitution of India, the Director General of Police is directed to ensure that the women and men of high discipline, integrity and honesty are converted to Law and Order wing for the purpose of upholding the Constitutional Directives. For Petitioner             :            Mr.K.Ravi Anantha Padmanaban                     [ in all W.Ps.]                                         For Respondents     :           Mr.B.Vijay                     [ in all W.Ps.]              Additional Government Pleader                                                                                                        COMMON  ORDER . https://sekarreporter.com/the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-nos-9048-of-2016-and-w-p-nos-1668-to-1670-of-2017-and-considering-the-importance-of-the-issue-regarding-the-conversion-of-armed-reserve-police-p/
[9/15, 14:32] Sekarreporter1: stay granted tasmac shop opening HE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Special Original Jurisdiction) W.P.No.   24893  of 2022   Rajasekar, S/o. Mr. Rajangam, Door No. 2/23, Keezha Street, Sooriyamanal Village, Udayarpalayam Taluk, Ariyalur District.                                                                                                                          …Petitioner https://sekarreporter.com/the-high-court-of-judicature-at-madras-special-original-jurisdiction-w-p-no-24893-of-2022-rajasekar-s-o-mr-rajangam-door-no-2-23-keezha-street-sooriy/
[9/15, 15:42] Sekarreporter1: https://youtu.be/96DtEuWYvys
[9/15, 15:49] Sekarreporter1: [9/15, 15:42] Sekarreporter1: https://youtu.be/96DtEuWYvys
[9/15, 15:42] Sekarreporter1: 21 convicted
[9/15, 15:49] Sekarreporter1: https://youtu.be/mtwPqaIarGA
[9/15, 16:05] Sekarreporter1: [9/15, 16:04] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570360265564393472?t=_X_Ze-eZKc17ycIY-kbP6g&s=08
[9/15, 16:04] Sekarreporter1: First bench of #madrashighcourt court consisting of Acting CJ M Duraisamy&Justice Sunder Mohan today referred a petition filed by DMK MLA Dr Ezhilan seeking orders to move back Education from concurrent list to State to a larger bench for hearing @xpresstn
[9/15, 16:17] Sekarreporter1: [9/15, 16:16] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570363390354411521?t=mEAG6m7dRiWw2WMOCSf56w&s=08
[9/15, 16:16] Sekarreporter1: [9/15, 16:10] Sekarreporter1: Justices M Duraiswamy and Sunder Mohan of Madras HC record the submission of Additional Advocate General J Ravindran that Tamil Nadu Government has no plans to send Srivilliputtur temple elephant Joymala to Assam. Submission was made during hearing of an urgent PIL. @THChennai
[9/15, 16:15] Sekarreporter1: 🌹
[9/15, 16:27] Sekarreporter1: Sr. Adv. P. Wilson: Yesterday I stated that weaker section under 46 is not the same as 15(6) and 16(6).
[Reads Art 46]
#EWS #SupremeCourtOfIndia
[9/15, 16:35] Sekarreporter1: [9/15, 16:34] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570368035181178880?t=IfLXeUADltOiY4tpruoaig&s=08
[9/15, 16:35] Sekarreporter1: Acting Chief Justice M. Duraiswamy & Justice Sunder Mohan of Madras HC stay the operation of an order passed by a single judge who had, in July this year, quashed a GO dissolving the Tamil Nadu Commission for Protection of Child Rights. @THChennai
[9/15, 16:35] Sekarreporter1: Aag j ravinthiren
[9/15, 16:48] Sekarreporter1: https://youtu.be/_nqS8tFb0SU
[9/15, 17:26] Sekarreporter1: [9/15, 17:25] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570380561331671042?t=BrQko8ztXFKdHKUDSpqiuQ&s=08
[9/15, 17:25] Sekarreporter1: Madurai high court sentences Savukku Shankar to 6 months imprisonment in the contempt petition against him. The Bench refuses to suspend the sentence on the request of contemnor.
[9/15, 17:26] Sekarreporter1: #JUSTIN | சவுக்கு சங்கர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை முடிவுற்று சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவு
[9/15, 18:20] Sekarreporter1: Savuku sankar casen full.order THE HON’BLE MR.JUSTICE G.R.SWAMINATHAN AND THE HON’BLE MR.JUSTICE  B.PUGALENDHI SUO MOTU CONT P(MD) No.1124 of 2022 The Registrar (Judicial). For Registry : Shri.A.L.Somayaji, Senior Counsel      assisted by Shri.N.Mohideen Basha      Standing counsel for High Court For Respondent No.1       : Contemnor in-person For Respondent No.5       : Mrs.L.Victoria Gowri,             Assistant Solicitor General of India           for Madurai Bench ORDER. Madurai jail , https://sekarreporter.com/savuku-sankar-casen-full-order-the-honble-mr-justice-g-r-swaminathan-and-the-honble-mr-justice-b-pugalendhi-suo-motu-cont-pmd-no-1124-of-2022-the-registrar-judicial-for-registry/
[9/15, 18:21] Sekarreporter1: [9/15, 18:21] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570394782006128640?t=NoytF8p6WxTUDga_ZnY1WA&s=08
[9/15, 18:21] Sekarreporter1: Savuku sankar casen full.order THE HON’BLE MR.JUSTICE G.R.SWAMINATHAN AND THE HON’BLE MR.JUSTICE  B.PUGALENDHI SUO MOTU CONT P(MD) No.1124 of 2022 The Registrar (Judicial). For Registry : Shri.A.L.Somayaji, Senior Counsel      assisted by Shri.N.Mohideen Basha      Standing counsel for High Court For Respondent No.1       : Contemnor in-person For Respondent No.5       : Mrs.L.Victoria Gowri,             Assistant Solicitor General of India           for Madurai Bench ORDER. Madurai jail , https://sekarreporter.com/savuku-sankar-casen-full-order-the-honble-mr-justice-g-r-swaminathan-and-the-honble-mr-justice-b-pugalendhi-suo-motu-cont-pmd-no-1124-of-2022-the-registrar-judicial-for-registry/
[9/15, 19:14] Sekarreporter1: Today, We gave our warm send off to our Chief Justice of the Madras High Court, Hon’ble Mr. *Justice Munishwar Nath Bhandari* with our hearty wishes.
[9/15, 19:47] Sekarreporter1: https://youtu.be/52tbC7aliBg
[9/15, 20:39] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.No.1165 of 2022 Dr.R.Radhakrishnan         … Therefore, eventhough I am in agreement in part with the learned counsel for the petitioner that the procedure adopted by Trial Court is incorrect, still this revision will not succeed and I find nothing in this complaint to refer the same to investigation to the respondent police.  Accordingly, this revision is dismissed. For Petitioner           : Mr.S.A.Sathia Chandran                                  For Respondents       : Mr.S.Vinothkumar   Government Advocate (Crl.Side) O R D E R https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-no-1165-of-2022-dr-r-radhakrishnan-therefore-eventhough-i-am-in-agreement-in-part-wi/
[9/16, 06:54] Sekarreporter1: [9/16, 06:51] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570583516756447232?t=u1NyR9xxtpwKWniPe858gw&s=08
[9/16, 06:51] Sekarreporter1: 9/16, 06:50] Sekarreporter1: Justice s vaithiyanathan with chief justice in airport our chief left chennai yesterday
[9/16, 06:50] Sekarreporter1: 🌹🌹🌹

 

 

 

You may also like...