Madras high court round up auguat 11

[8/10, 21:48] Sekarreporter1: தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும். ஆனால், இந்த அரசாணையின்படி மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவம் முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக அரசாணை பிறப்பித்தது. அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது. அதேநேரம், தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
[8/11, 09:52] Sekarreporter1: Jai beem case suriya seek to quash the order of majestitrate to register fir against him judge NSKj orders 2.15 சூர்யாக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மேஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவு செல்லுமா செல்லாதா என்று இன்று மதியம் நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பு கூறுகிறார்
[8/11, 10:48] Sekarreporter1: பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டது…

இதுசம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது…

15 நாட்கள் நோட்டீசும் அளிக்கப்பட்டது…

18 நாட்களுக்கு முன் ஜூன் 23ம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது…
[8/11, 11:20] Sekarreporter1: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் செயல்பட வேண்டும்…

இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்துள்ளேன்

– ஈ பி எஸ்…

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்பதவிகள் போல் அல்லாமல் பொருக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவ்தியாக வில்லை…

ஏனென்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்பதவிகள் திருத்த விதிகளின்படி நடத்தப்பட்டது…

அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை

– ஈ பி எஸ்
[8/11, 11:28] Sekarreporter1: ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூற முடியாது…

ஜூன் 23ம் தேதி கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது

நோட்டீஸ் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை…

கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் நோட்டீஸ்…

– ஈ பி எஸ்
[8/11, 11:47] Sekarreporter1: கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு வழங்க வேண்டும்…

5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியமில்லை…

– ஈ பி எஸ்
[8/11, 11:57] Sekarreporter1: ஈ பி எஸ் :கட்சிக்கு எதிரான ஓ. பன்னீர்செல்வத்தின் நடத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நீதிபதி (அறிவுரை) : அவரது நடத்தை பற்றி பேச வேண்டாம். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதது.
[8/11, 11:57] Sekarreporter1: மனுதாரர் பன்னீர்செல்வத்தின் நடத்தையை கவனிக்க வேண்டும் என மறைமுகமாக தலைமை அலுவலக மோதல் குறித்து ஈ பி எஸ் தரப்பு வக்கீல் வாதம்…

வழக்குக்கு சம்பந்தமில்லாத அந்த விவகாரம் குறித்து வாதிட வேண்டாம் என ஈ பி எஸ் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தல்
[8/11, 13:30] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம், வைரமுத்து தொடர்ந்த வழக்குகள்…

தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்…

இரு நாட்களாக நடந்து வந்த வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு தள்ளிவைப்பு…
[8/11, 14:15] Sekarreporter1: அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பொருள்களை எடுத்த சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது புகாரை
சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது கட்சியின் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். இதை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தடுத்ததால் அங்கு மிகப்பெரிய கலவரம் நடந்தது. பின்னர் அதிமுக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக கதவை ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்களை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதால் குற்றச்சாட்டு இருந்தது.

இது குறித்து ராயப்பேட்டை காவல்துறையில் சி.வி சண்முகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கபட்டாது.

புகார் மீது காவல்துறை உரிய
நடவடிக்கை எடுக்காததால் இந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் மனு தாக்கல் செய்தார். அதில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் செயல்படுகின்றனர். ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என் சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரியாஸ் முகமது ஆஜராகி புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.
இதையடுத்து, சிவி சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[8/11, 14:37] Sekarreporter1: அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பி எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டதாகவும், அந்த அறிவிப்பு அப்போதே நேரலையாக அனைத்து தொலைக்காட்சிகளிலும், செய்தியாக மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானதால், அதை நோட்டீசாக கருத வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ்,
ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்ட விஜய் நாராயண், பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது எனவும் விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கும் முன்னரே எப்படி பதவிகள் காலாவதி ஆனது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், 2021 டிசம்பர் 1 செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே முடிவாகும் என்றார்.

தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன என்றும், இருவரின் பதவிகள் காலாவதியாகி விட்டதால் தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பர் என தேர்தல் ஆணையத்தில் விளக்கமளித்து உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் மட்டுமே விதிகள் திருத்தப்பட்டதாகவும், பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜுன் 23 பொதுக்குழுவிலேயே, ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டதால், முன்கூட்டி நோட்டீஸ் கொடுக்கவில்லை என கூற முடியாது என்றும், கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் நோட்டீஸ் என விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக பொதுக்குழு உறுப்பினர்களில் 2432 பேர் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின், கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளதாகவும் கூறி விஜய் நாராயண் தன் வாதங்களை நிறைவு செய்தார்.

அதன்பின்னர் ஈ.பி.எஸ். தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, எதிர்மனுதாரராகளில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுவிட்டு, மனுதாரராக பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்பது ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே பன்னீர்செல்வத்துக்கு தெரிந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும், ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிரானதாகி விடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் பன்னீர்செல்வத்தின் நடத்தையை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது நீதிபதி ஜெயச்சந்திரன் குறுக்கிட்டு, வழக்குக்கு சம்பந்தமில்லாத அந்த விவகாரம் குறித்து வாதிட வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் விதிகளில் எந்த திருத்தமும் செய்யாததால் அவர்களின் தேர்தல் செல்லும் என்றும், அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள். என்பதால், அவர்கள் எடுக்கும் முடிவு என்பது ஒட்டுமொத்த உறுப்பினர்களின் முடிவாக தான் பார்க்க வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, உள்கட்சி விவகாரங்களை பொருத்தவரை பெரும்பான்மையையே பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்கு பதிலளித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் 23 பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றால், இரு பதவிகளுக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கும் கேள்விக்கே இடமில்லை என்றும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலாவதியாகி விடும் என ஜூன் 23 பொதுக்குழு தீர்மானத்தில் எங்குமே குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

எந்தவிதமான காலியிடமும் ஏற்படாத நிலையில், காலியிடம் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும், 2017ல் பொதுக்குழுவை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டியதற்கான காரணம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யத்தான் என்றும், ஆனால் இப்போது இருக்கும் சூழலே வேறு என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுக்குழு குறித்து தொலைகாட்சி மற்றும் பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது என்றும், முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், அந்த நோட்டீசைதான் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதி, பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளார்களா என கேள்வி எழுப்பியபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை, ஒட்டுமொத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் கட்சி நலனுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற விவகாரங்களில் மனுதாரராக இருந்தாலும், ஒருங்கிணைப்பார் பதவியின் அடிப்படையில் எதிர்மனுதாரர்களில் ஒருவராக குறிப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

பன்னீர்செல்வம் தரப்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டது. இரு பதவிகளும் காலியாகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவைத் தலைவரை நிரந்தரமாக நியமிப்பதற்கு முன்மொழிந்தபோது இணை ஒருங்கிணைப்பாளர் என்றே எடப்பாடி பழனிசாமியை அழைத்ததற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவில் மட்டும் தான் எந்த அடிப்படை உறுப்பினர் வேண்டுமானாலும் தலைவராக முடியும் என்ற விதி இருந்ததாகவும், ஆனால் 5 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருந்திருந்தால் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதியில் தற்போது திருத்தம் செய்துள்ளதாகவும் கூறினார்.

வைரமுத்து தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஊடகங்கள் பிளாஷ் செய்வதை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படிதான் ஜூன் 23 பொதுக்குழுவில் நேரலை செய்ததை ஜூலை 11 பொதுக்குழுவிற்கான நோட்டீசாக கருத முடியாது என தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
[8/11, 14:41] Sekarreporter1: ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில், இந்து வன்னியர் சமூகமக்களின் மனதை புண்படுத்தும் வகையில்,
அவர்களை இழிவுபடுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை
உருவாக்கும் வகையிலும் அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும்;
மகாலட்சுமியையும்; அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம்,
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இதை வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[8/11, 15:04] Sekarreporter1: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பு கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை திரும்ப பெறுவதாகவும், வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர் எஸ் பாரதி ,மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணை அடுத்த 25 ஆம் தேதி தள்ளி வைத்தனர்.

அப்போது வேலுமணி சார்பில், கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை தொடரந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
[8/11, 15:41] Sekarreporter1: அதிமுக தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் மோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டதாக குறிபிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்சனை இருந்ததாகவும்,அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

அந்த சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் தாங்கள் சென்றபோது, அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று குற்ப்பிட்டுள்ளா. ஜூலை 11ல் புகுந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தாகவும், இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை எனவும், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி அதிமுக அலுவலகத்தில் உள்ள் பொருட்கள் மாயமானது குறித்த புகாரில் சென்னை காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், வக்ழகை வேறு அமைப்பிற்கு மாற்ற வேண்டுமென வாதிட்டார்.

அதன்பின்னர் சி வி.சண்முகம் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட. நீதிபதி, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[8/11, 17:43] Sekarreporter1: தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டப்படுத்த முடியாது எனவும் மாறாக முகக்கவசம் சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல் நலக்கோளாறே ஏற்படுவதாக கூறிப்பிட்டுள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது தவறானது எனவும் 500 ரூபாய் குறைவான தொகையல்ல எனவும் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா விசாரணைக்கு வந்தபோது, போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளமாலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்
[8/11, 17:43] Sekarreporter1: லாரி டயரில் கஞ்சா கடத்திய 4 பேருக்கு போதை பொருள் தடுப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் விதித்த தலா 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2017 ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து வந்த லாரியை நாசரத்பேட்டை அருகே உள்ள சுங்க சாவடியில் காவல்துறை சோதனை செய்ததில் லாரி டயரில் சுமார் 150 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடுத்து பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியில் வந்த செல்வகுமார், மணி,ராஜா, ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு 2019 ஆண்டு போதை பொருள் தடுப்பு வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தபோது, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளிகளான ரமேஷ் மற்றும் ராஜா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்,
இந்த வழக்கு நீதிபதி பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்த நீதிபதி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[8/11, 17:44] Sekarreporter1: கடந்த 2014-15 முதல் 2017-18ம் ஆண்டுகளுக்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர்ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில் அதிபரும் அரசு ஒப்பந்ததாரரன சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது.

கடந்த 2016ம் ஆண்டு சேகர்ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, கோடிக்கணக்கிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கரன்சிகளை, ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.

அந்த ஆவணங்களில் இருந்து சேகர் ரெட்டி, மணல் கொள்ளைக்காக 247 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனம், அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து 217 கோடி ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்திடம் இருந்து 155 கோடி ரூபாயும், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து 197 கோடி ரூபாய் பெற்றுள்ளதும், பின்னர் இந்த தொகை, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கட்சி வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 2014-15 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தின் வருமானம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை, அதற்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.எஸ். மைனிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், வருமான மதிப்பீட்டின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என தனி நீதிபதி முன் உறுதியளித்த வருமான வரித்துறை, அதற்கு மாறாக செயல்பட்டு, நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடியுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வருமான வரித்துறையின் உத்தரவுகளை ரத்து செய்து, குறிப்பிட்ட இந்த ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[8/11, 17:45] Sekarreporter1: முதுநிலை கவின் கலை படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் வாங்க கோரிய வழக்கில் அரசு கவின் கலை கல்லூரி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கவின் கலை கல்லூரியில் முதுநிலை கவின் கலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த கணேஷ் என்ற மாணவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 1987 ஆம் ஆண்டின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழும சட்டம், 2001 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையில் நுண்கலை மற்றும் கைவினைக் கல்லூரிகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கல்வி நோக்கம் இல்லாமல், பணம் சம்பாதிக்கும் நோக்கில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்படுவதாகவும், அதை கண்காணிக்க வேண்டுமென 2018 ஆண்டு நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி துறை செயலாளர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் அனுப்பியதாகவும், அதை பொருட்படுத்தாமல் உரிய அனுமதியின்றி முதுநிலை கவின் கலை படிப்பை சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கவின் கலை கல்லூரி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஏ.ஐ.சி.டி.இ.-யின் உரிய அனுமதியை பெற தமிழக அரசு, இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள், ஏ.ஐ.சி.டி.இ.,, கவின்கலை கல்லூரி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[8/11, 19:22] Sekarreporter1: பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரிய இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுவதாகவும், அவை தொடர்பாக தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, இரு பிரிவினரிடையே பகையை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியதற்கு ஆதாரம் உள்ளதாக தெரிவிக்கப்ட்டது. எனவே அவரை கைது செய்து விசாரிப்பது கட்டாயம் என்பதால் கனல் கண்ணனுக்கு முன் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதனையடுத்து, கனல் கண்ணனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...