Madras high court orders sep 29

[9/28, 11:54] Sekarreporter.: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால் அதன் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
[9/28, 11:56] Sekarreporter.: தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,  கிளப்புகள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தால்  கிளப்களின் பதிவை ரத்து செய்ய  நடவடிக்கை எசுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது…

   சட்டத்திற்குட்பட்டு கிளப் நடத்தப்படுவதாகவும், ஆனால் காவல்துறையினர், சோதனை என்ற பெயரில் தங்களை துன்புறுத்துவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை கோமலீஸ்வரன் பேட்டையில் உள்ள பாண்டியன் பொழுதுபோக்கு கிளப் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..

இந்த  வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த கிளப் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது…

கிளப்புகள் மற்றும் சொசைட்டிகள் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகள் மேற் கொள்கிறதா என்பதை ஆய்வு செய்வது காவல்துறை அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் தமிழக அரசின் பத்திரப் பதிவு துறை ஐஜியை சேர்த்த  நீதிபதி,  தமிழகம் முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் சொசைட்டிகளை, சோதனை செய்து அவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா அதில் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என ஆய்வு செய்ய

சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்…

சம்பந்தப்பட்ட  காவல் நிலையங்களிலும்  கிளப்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த கிளப்புகளின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  இதுகுறித்து 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

 
[9/28, 12:28] Sekarreporter.: தமிழக முதல்வர் மீதான அவதூறு வழக்குகள் இன்று தனி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது தமிழக முதல்வர் சார்பாக வழக்கறிஞர் டேனியல் ஆஜராகி ஏற்கனவே தடை விதித்துள்ள தான் இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் மேலும் அவதூறு வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த மனுவை நீதிபதி நிர்மல்குமார் விசாரித்துவருகிற எட்டாம் தேதி தீர்ப்பு வழங்குவதாக கூறி உள்ளார் எனவே தனிக்கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தார்
[9/28, 13:35] Sekarreporter.: திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு வரைவு சட்ட மசோதா அடுத்த சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் – தமிழ்நாடு அரசு

ரவுடிகளை ஒழிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள வரைவு சட்ட மசோதா விரைந்து சட்டமாக இயற்றப்பட்டால், காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் – உயர்நீதிமன்றம்
[9/28, 13:37] Sekarreporter.: தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள வரைவு சட்ட முன் வடிவு விரைந்து இயற்றப்பட்டால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது

ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ரவுடிகளால்
போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்திருந்த நீதிமன்றம்,
ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான
புதிய சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்துசட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் வைத்து புதிய சட்டம் எப்போதும் இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, “திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்” என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட
வரைவு மசோதா தயாராக இருப்பதாக தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்
[9/28, 14:31] Sekarreporter.: விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரபட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தற்போது தெலுங்கானா ஆளுனராக உள்ள தமிழிசை சௌந்தரராஜன், 2017ல்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ((கட்டப்பஞ்சாயத்து செய்துவருவதாக)) பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவித்தார். இதுதொடராக விசிக உறுப்பினர் தாடி கார்த்திகேயன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழிசை ஆஜராக சம்மன் அனுபப்பட்டது. சம்மனையும் வழக்கையும் ரத்து செய்யக்கோரி தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு பலமுறை விசாரணைக்கு வந்தபோதும், தமிழிசை சௌந்ததராஜன் தாப்பிலும், தாடி கார்த்திகேயன் தரப்பிலும் ஆஜராகவில்லை.

அதன்பின்னர் இந்த வழககில் உத்தரவிட்டுள்ள நீதிபதி, அரசியல் சாசனம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வழங்கினாலும், அதற்கான கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக தெரிவதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தோ. அல்லது அதன் தலைவர் தொல். திருமாவளவனிடமிருந்தோ எந்த அங்கீகாரமும் வழங்கப்படாத நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கை ஏற்க முடியாது என கூறி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தொடரபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[9/28, 14:54] Sekarreporter.: மேல் மருவத்தூரில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியில் ‘கீழ் மருவத்தூர்’ ஏரி இருந்து வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த ஆக்கிரமிப்பு இடத்தில் தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் கொடுத்த புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 5 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

[9/28, 15:42] Sekarreporter.: நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை நடத்த கோரிய மனுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் தாக்கல் செய்த மனுவில்,108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடத்தப்படவில்லை என்றும் இந்த ஆண்டு வைகாசியிலும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ள மனுதாரர், இந்த தமிழ் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு பிராயசித்தங்களுடன் பிரமோற்சவ விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

கோவில் மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆகம விதிகளில் கூறியுள்ள படி எதிர்காலத்தில் உற்சவங்களை நடத்த வைணவ சமயத்தை சேர்ந்த ஜீயர்கள்,ஸ்தலத்தார்கள் உள்ளிட்டோர் அடங்கிய உற்சவ குழுவை அமைக்க உத்தரவேண்டும் என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்,
உற்சவங்கள் நடத்துவது தொடர்பாக கோவிலுக்கு தொடர்பில்லாதவர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோர முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து இந்த மனுவுக்கு தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்தனர்…
[9/28, 20:44] Sekarreporter.: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கிய உத்தரவுக்கு விதித்த தடையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கொளத்தூரைச் சேர்ந்த பி.பாஸ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஊராட்சியில் வசிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் குறித்த புள்ளிவிவரங்களை தவறாக குறிப்பிட்டு, தலைவர் பதவி, பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கிய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் கே.வி.சஞ்சீவ்குமார் ஆகியோர், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1195 பழங்குடியின வாக்காளர்கள் இருந்ததால், ஊராட்சி மன்ற தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டதாக சுட்டிக் காட்டினர்.

ஆனால், மனுதாரர் தரப்பில் ஜெ.சீனிவாசமோகன் ஆஜராகி, 2016ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவின் அறிக்கையில், கிராமத்தில் 59 பழங்குடியினர் மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று இருந்தாலும் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடக்கும் போது அதை நீதிமன்றம் தலையிட எவ்வித தடையும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே தலைவர் பதவி ஒதுக்கப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலத்தில் எந்த அரசாக இருந்தாலும் அவை விருப்பப்படும் பட்சத்தில் குறுகிய காலத்தில் காலத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என தெரிவித்த நீதிபதிகள், கணக்கெடுப்பு முறையாக இல்லை என்றும், முறையான கணக்கெடுப்பு இல்லாமல் தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கிய உத்தரவை தடை செய்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...