Madras high court orders sep 29

[9/30, 06:36] Sekarreporter1: கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதித்துள்ளதாகவும், இது மாணவர்கள் – பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி விடுதிக்கு அங்கீகாரம் பெறாததால் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 14ம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்னைகள் உள்ளதாகவும், அதற்காக அரசு ஏற்க வேண்டும் என கோர முடியுமா? அரசே ஏற்க வேண்டும் என்றால் நிலம், கட்டிடங்களுக்கு விலை கொடுக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் இருக்கிறது தெரியுமா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

பின்னர் மனுவில் எந்த தகுதியும் இல்லை எனவும், நியாயமான காரணம் ஏதும் இல்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[9/30, 06:36] Sekarreporter1: சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் பல ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை எனக்கூறி தனக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொழில் வழி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படாத நிலையில் சம்பள கணக்கு அலுவலகத்தில் தொழில் வெடித்தம் செய்யக்கூடாது என வற்புறுத்தி வருவதாகவும், அதனால் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும் தொழில் வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசுத்துறை மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 12 லட்சம் அதிகாரிகளும் ஊழியர்களும் தொழில்வரி செலுத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்டிய நீதிபதி சுப்ரமணியம், நீதிமன்ற பணியாளர்களுக்கான தொழில் வலியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு 24 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
[9/30, 06:36] Sekarreporter1: சீன அதிபர் ஜி ஜின் பிங் சென்னை வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக திபெத்தை சேர்ந்த 9 மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். சென்னையில் படித்து கொண்டிருந்த திபெத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டத்திற்கு புறம்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர்.

சாலையில் சென்ற பேருந்துகளை நிறுத்தி சேதப்படுத்தியது மற்றும் பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், நீலாங்கரை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் வழக்குபதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டென்சிங் லுப்சங் உள்ளிட்ட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நடைபெற்றது. அப்போது மாணவர்கள் தரப்பில், தாங்கள்
எந்த தவறும் செய்யாதவர்கள் எனவும், அந்த சமயத்தில் கல்லூரி மற்றும் விடுதி மூடிவிட்டதால் வீட்டிலிருந்த தங்களை போலீஸார் வலுக்கட்டயமாக கைது செய்து சிறையில் அடைத்ததாக வாதிட்டனர். தடையை மீறி எந்த போராட்டமும் நடத்தவில்லை என்றும், போலீசார் பொய்வழக்கு பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டனர்.
காலவதியான சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா திபெத் மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்..
[9/30, 06:36] Sekarreporter1: குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேனீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர் – மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் எனக் கூறி, குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் வழங்கு உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும், குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கியிருந்து, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குருகிராமில் பணியாற்றும் மனுதாரரால் சென்னைக்கு வர முடியாது எனவும், குழந்தையை காண உரிமை கோரிய வழக்கில், குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனி நீதிபதி போதனை செய்ய முடியாது எனவும் முன்னாள் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேனீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி, தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார் எனத் தெரிவித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர், முன்கூட்டி தகவல் தெரிவித்து, குருகிராம் சென்று சந்திக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[9/30, 06:36] Sekarreporter1: தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல்துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
[9/30, 06:36] Sekarreporter1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர் டி ஜி பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக முழுவதும் ஆர் எஸ் எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறி ஆர் எஸ் எஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான ஆர் எஸ் எஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த 22 ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மற்ற கட்சியினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் நிலையில், தங்கள் அணிவகுப்பு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், அதுபோல எந்த மனுவும் இதுவரை வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதை கேட்ட நீதிபதி இளந்திரையன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிலாக தமிழக அரசின் நிராகரித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினார்.

ஆனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, வழக்கை தாக்கல் செய்து எண்ணிடும் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
[9/30, 06:36] Sekarreporter1: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[9/30, 06:36] Sekarreporter1: மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி மூன்று தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் பெற்றுள்ள புதுச்சேரி நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து ஆணையராகவும், தேர்தல் அலுவலராகவும் உள்ள ஜெயக்குமார், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முகவரிகளைப் பெற்று இரு மாநில சலுகைகளை பெற்று வருவதாக கூறி, எந்த தகுதியின் அடிப்படையில் அவர் அப்பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் ஸ்ரீதர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள உப்பளம், நெட்டப்பாக்கம் தொகுதியிலும், தமிழகத்தின் திண்டிவனம் தொகுதியிலும் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிரந்தர முகவரியை பெற்ற அவர், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவியில் நிய்மிக்கப்பட்டதாகவும், புதுச்சேரி நிரந்தர இருப்பிடத்தை கொண்டுள்ளதாக கூறி, அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த அவரது மகன், தற்போது தமிழக அரசு வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலாளர், தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நவம்பர் 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[9/30, 06:36] Sekarreporter1: உலக இதய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் இதய ஆரோக்கிய பரிசோதனை முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்.

இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை மரணத்திற்கு முக்கிய காரணங்கள் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று உலக இதய தினமாக உலக இதய கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வழக்கறிஞர்கள் நலனுக்காக செயல்படக்கூடிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து வழக்கறிஞர்களுக்காக இதய ஆரோக்கிய பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த முகாமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் துவக்கி வைத்து, தானும் பரிசோதனை செய்துகொண்டார். கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை துவங்கப்பட்ட நிகழ்ச்சியில் பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
[9/30, 06:36] Sekarreporter1: பொன்னியின் செல்வன் படத்திற்கு பி.எஸ். என விளம்பரப்படுத்த வேண்டாம் என படக்குழுவினருக்கு கோவையை சேர்ந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம், திரைப்படமாக இயக்கியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது முதல் பொன்னியின் செல்வன் முதல் பாகம் என்பதை பி.எஸ். 1 என படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமும், படக்குழுவினரும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் பெயரை பி.எஸ். 1 என விளம்பரப்படுத்தக் கூடாது என கூறி , கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்.சுந்தரவடிவேலு எம்.லோகநாதன் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில், பெற்றோருடன் படகில் சென்ற அருண்மொழி வர்மன் பொன்னி நதியில் விழுந்த போது பெண் ஒருவர் காப்பாற்றியதாகவும், பொன்னி நதியே அவரை காப்பாற்றியதாக கூறும் வகையிலேயே பொன்னியின் செல்வன் என அவருக்கு பெயர் சூட்டப்பட்டதாகவும், அதையே நாவலுக்கும் சூட்டப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் பொன்னியின் செல்வன் என்ற பெயரை பி.எஸ். என சுருக்குவது தவறு எனவும், பி.எஸ். என்பது ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்துவ கூட்டமைப்பை குறிக்கும் வார்த்தை எனவும், வரலாற்று சிறப்பு மிக்க கதை தலைப்பை பி.எஸ். சுருக்குவது மத ரீதியிலான போரை குறிப்பது போல் ஆகிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நோட்டீஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம், வினியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
[9/30, 06:36] Sekarreporter1: திருமணம் ஆசை காட்டி பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இளம் மருத்துவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த 28 வயதான மருத்துவர் தினேஷ் கார்த்திக் என்கிற கார்த்திக் ராஜ் என்பவரை அடையாறை சேர்ந்த பெண் மருத்துவர் தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,12 லட்சத்து 25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோனையும் வாங்கிய தினேஷ் கார்த்திக், திருமண பேச்சு வந்தபோது நேரில் சந்திப்பதை தவிர்ப்பதாக அடையாறு காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் புகா அளித்துள்ளார்.

அந்த புகாரில் ஆகஸ்ட்14ல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருத்துவர் தினேஷ் கார்த்திக் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு, பொறுப்பு முதன்மை நீதிபதி வி.தங்கமாரியப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரரான பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவர் மோசடி செய்துள்ளதாகவும்,
விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

அதை ஏற்ற நீதிபதி, மருத்துவர் தினேஷ் கார்த்திக்கின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[9/30, 06:36] Sekarreporter1: ஒன்றரை கிலோவிற்கு மேல் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்கிற 26 வயது இளைஞர் கஞ்சா விற்பதாக மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதடிப்படையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, சூர்யா தரப்பில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டபோது உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தன் தரப்பு சாட்சியங்களை முறையாக விசாரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சா வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சாட்சியங்கள் வலுவாக உள்ளதாகவும் கூறி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி திருமகள் பிறப்பித்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்ட சூரியாவிற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
[9/30, 06:36] Sekarreporter1: வேடந்தாங்கல் பகுதியில் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறாமல் மருந்து ஆலை விரிவாக்க பணிகளை மேற்கொண்ட சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டி 1992அம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மாவின் மருந்து உற்பத்தி அளவு 25.5 டன்னிலிருந்து 134 டன்னாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. அதன் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது. ஆனால், இதற்கு முறையான அனுமதியை பெறவில்லையென புகார் கூறப்பட்டு வந்தது.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மீனவர் தந்தை கே ஆர் செல்வராஜ் குமார் மீனவர் நல சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாட்டில் வன உயிரின அல்லது பறவைகள் சரணாலயங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பரப்பளவும் சரணாலயமாகவே கருதப்படும் என்று விதிகள் இருக்கையில், விரிவாக்க பணிகளை மேற்கொள்வதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினr கே. ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சன் பார்மா தரப்பில் கடந்த 1994ல்தான் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகள் உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த 1992லிருந்து நிறுவனம் இயங்கி வருவதால் தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த தீர்ப்பாய உறுப்பினர்கள் பிறப்பித்துள்ள தீர்ப்பில், 1994 முதல் 2006வரை ஆலையில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கு 1994ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விரிவாக்கம் செய்தது சட்டவிரோதம் என கூறி, சன் பார்மாவிற்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

ஆலை செயல்பாட்டால் உண்டான சேதம் குறித்து உரிய ஆய்வு செய்து முழுமையான இழப்பீட்டை சன் பார்மாவிடம் இருந்து பெற வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கும், அந்தத் தொகையை வைத்து பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆலையின் விரிவாக்கத்திற்கு மார்ச் 2022ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராகத் தொடரப்பட்ட மனு மற்றொரு அமர்வில் நிலுவையில் இருப்பதால் ,ஆலையை மூடுவது குறித்து இந்த மனுவில் உத்தரவிடவில்லை எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
[9/30, 06:36] Sekarreporter1: குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேனீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர் – மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் எனக் கூறி, குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் வழங்கு உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும், குருகிராமில் வேலை பார்க்கும் முன்னாள் மனைவியை சென்னையில் தங்கியிருந்து, கணவன் குழந்தையை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குருகிராமில் பணியாற்றும் மனுதாரரால் சென்னைக்கு வர முடியாது எனவும், குழந்தையை காண உரிமை கோரிய வழக்கில், குழந்தையை காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனி நீதிபதி போதனை செய்ய முடியாது எனவும் முன்னாள் மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேனீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி, தனது அதிகார வரம்பை மீறி பிறப்பித்துள்ளார் எனத் தெரிவித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர், முன்கூட்டி தகவல் தெரிவித்து, குருகிராம் சென்று சந்திக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...