Madras high court orders march 22

[3/22, 12:18] Sekarreporter: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் – ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் – ஓ.பன்னீர்செல்வம்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்துள்ளார். இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும், பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் தன்னிடம் தெரிவிக்கவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்
[3/22, 12:32] Sekarreporter: ஒ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சாந்த கேள்விகள் கேட்க அப்பல்லோ தரப்பு எதிர்ப்பு

ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்

ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்ப முயன்ற போது அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு

சிகிச்சை தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என நேற்றே வாக்குமூலம் அளித்த நிலையில் இன்று அது தொடர்பான கேள்விகளை எழுப்ப கூடாது – அப்பல்லோ வழக்கறிஞர்

ஜெயலலிதாவுக்கு இருந்த வியாதி தொடர்பாகவோ, அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தான் கேள்வி எழுப்பக் கூடாது. வியாதி இருந்தது உங்களுக்கு தெரியுமா என கேள்வி எழுப்பலாம் – ஆணைய வழக்கறிஞர்

மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது முந்தைய சாட்சிகள் கூறிய கருத்துக்களை முன்கூட்டியே வழங்க வேண்டும், மேலும் மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் – அப்பல்லோ வழக்கறிஞர்

உங்களின் குறுக்கீடு பதிவு செய்யப்பட்டது – ஆறுமுகசாமி ஆணையம்
[3/22, 13:02] Sekarreporter: *ஜெயலலிதா இறப்பதற்கு முன் மூன்று அமைச்சர்கள் சென்று அவரை நேரில் பார்த்ததாக விசாரணை ஆணையத்தின் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

டிசம்பர் 04 தேதி ஆளுநர் அப்போலோ மருத்துவமனை வந்திருந்தும் ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்தது குறித்து தனக்கு நினைவில்லை. பன்னிர்செல்வம் ஆணையத்தில் விளக்கம்.

டிசம்பர் மாதம் 04 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது தனக்கு தெரியாது, ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு இறப்பதற்கு முன்பு நான் உடப்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம்.
[3/22, 14:01] Sekarreporter: *சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை*

*சசிகலா மீது தனிப்பட்ட முறையில்
மரியாதையும் அபிமானமும் இன்று
வரை உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம்
ஆணையத்தில் வாக்குமூலம்*

*ராஜா செந்தூர்பாண்டியன்* சசிகலா மீதுள்ள குற்றாச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காக நான் ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்த பேட்டி சரிதானா.?

*ஓ.பிஎஸ்* சரிதான்

*ராஜா செந்தூர் பாண்டியன்* – நான்கரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்று வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா ? –

*ஓ.பி.எஸ்* ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்றார்.

*ராஜா செந்தூர் பாண்டியன்* மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும், நீங்கள் தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தான் என்றும், இப்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள் ?

*ஓ.பி.எஸ்* ஆணையம் பணித்ததால் வந்தேன் என்றார்.

*ராஜா செந்தூர் பாண்டியன்* ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-09-2016 முதல் 05-12-2016 வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தான் ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா?

*ஓ.பி.எஸ்* சரிதான்.

*ராஜாசெந்தூர் பாண்டியன்* சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா ?

*ஓ.பி.எஸ்* சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது.

*ராஜா செந்த்தூர்பாண்டியன்* விசாரணை அமைக்கப்பட்ட முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து தெரியுமா ?

*ஓ.பி.எஸ்* நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளில் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு, நடந்த விசாரணையில் முழுவதுமாக வரவில்லை.
[3/22, 14:01] Sekarreporter: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அச்சுறுத்தலும் இல்லை என மத்திய மாநில உளவுத்துறை அறிக்கைகள் அறிக்கை அளித்ததன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாளில், வீட்டின் முன் சகோதரர்கள், மைத்துனருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் தனது மைத்துனர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதாகவும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த நவம்பர் மாதம் சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்ததாகவும், மத்திய – மாநில உளவுப் பிரிவினரும், அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்ததாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை இரு வாரங்களில் அவருக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[3/22, 16:10] Sekarreporter: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை – ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

2011-12 ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரி தான் என பதிலளித்தார்

ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா தன்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தேர்ந்தெடுக்கப்படுபடுபவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் என கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

அதே நேரத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்ததாகவும், ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் எனவும் அவர் பெயரை நீங்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்ல வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார் – ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

அப்போது தான் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்ததாகவும், அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் எனவும், சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் எனவும் ஜெயலலிதா கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்
[3/22, 16:20] Sekarreporter: நளினியை ஜாமீனில் விடுவிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி  சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன், தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும்,  தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியுள்ளதாகவும் அதேபோல் நளினிக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் ஆனால் அந்த மனு எண்ணிடப் படவில்லை என்றும் எனவே அந்த மனுவை எண்ணிட்டு பட்டியலிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ..அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி,தண்டனை பெற்றவர்களை ஜாமீனில் விடுவிக்க எந்த சட்ட விதி அதிகாரமளிக்கிறது? இது குறித்து உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்றும் அந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.. முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விரிவாக விசாரிப்பதாக கூறி வழக்கு விசாரணை நாளை மறுதினம் ஒத்தி வைத்துள்ளனர்.
[3/22, 17:04] Sekarreporter: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா நேரில் ஆஜரானதை அடுத்து, அவருக்கு எதிரான வாரண்ட்டை சென்னை திரும்பப் பெற்றது.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவாக்கத்துக்காக, விமான நிலையத்தின் அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் மற்றும் தாரப்பாக்கம் பகுதி குடியிருப்பு பகுதி நிலங்களை, நிறுவன ரீதியான பகுதியாக அறிவித்தது.

நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக அறிவித்ததை அடுத்து, தாரப்பாக்கம் பகுதியை குடியிருப்பு பகுதியாக மீண்டும் வகை மாற்றம் செய்ய கோரி, இவிபி டவுன்சிப்பை சேர்ந்த கிரீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வகைமாற்றம் செய்வது தொடர்பாக தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரை மீது 4 மாதங்களில் முடிவெடுக்க சி.எம்.டி.ஏ.-விற்கு 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு குறிப்பிட்ட காலத்தில் அமல்படுத்தப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சி எம் டி ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய வாரண்ட்டை பிறப்பித்து தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இன்று, இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சி எம் டி ஏ உறுப்பினர் செயலாளர் நேரில் ஆஜராகியிருந்தார்.

விசாரணைக்கு ஆஜராகாததற்கு மன்னிப்பு கோரியும், வாரண்டை திரும்பப் பெறக் கோரியும் அவர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, அன்சுல் மிஸ்ராவுக்கு எதிரான வாரண்டை திரும்பப் பெற்ற நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம் மீண்டும் ஆஜராக வேண்டும் என அன்சுல் மிஸ்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
[3/22, 17:05] Sekarreporter: கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சுளேஸ்வரனட்டி பேரூராட்சி உறுப்பினராக தேர்வாகியுள்ள திமுக-வை சேர்ந்த ஜெ.வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ஆ.ராகினி என்பவர் கட்சியால் அறிவிக்கப்பட்டதால், போட்டி வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் மட்டுமே பெற்றதால், 8 வாக்குகள் பெற்ற தன்னை பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததாகவும், அதிருப்தி அடைந்த ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டதை அடுத்து, தவறுகள் இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை, தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தவறுகளை சரிசெய்து மீண்டும் சான்றிதழை வழங்காமல், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் அலுவலர் அறிவித்தது சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சூளேஸ்வரன்ட்டி பேரூராட்சி தலைவராக வெற்றிபெற்றதாக தன்னை அறிவித்து, சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மறைமுக தேர்தலை மார்ச் 26ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தலை நடத்த மாவட்ட உதவி ஆட்சியரை நியமித்துள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தோல்வியடைந்த ராகினியின் தந்தை ஆறுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பியதுடன், பணியிடை நீக்கம் மட்டும் தீர்வாகாது என்றும், சிசிடிவி பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக ஆய்வுசெய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். அதிகவாக்குகள் பெற்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, தோல்வி அடைந்தவர் தரப்பு செய்த குளறுபடியால், மீண்டும் மறைமுக தேர்தலை நடத்தினால் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தோல்வியடைந்துவிடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். ராகினியின் தந்தை மீது பதிவான வழக்கில் காவல்துறை முறையாக செயல்படாவிட்டால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணயை தள்ளிவைத்தனர். அதுவரை மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
[3/22, 17:06] Sekarreporter: ஆறுமுகசாமி ஆணையத்தில் OPS விசாரணை நிறைவு

இரண்டு நாட்களில் 9 மணி நேரம் விசாரணை, 150 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன
[3/22, 17:10] Sekarreporter: கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவு.
நேற்று 5 மணி நேரமும், இரண்டாவது நாளான இன்று 6 மணி நேரமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS விசாரணை .

ஆணையத்தின் 120 கேள்விகளுக்கும்
சசிகலா தரப்பு வழக்கறிஞர் 34
அப்போலோ தரப்பு வழக்கறிஞர் தரப்பு வழக்கறிஞர் 11 பதிலளித்தார்.
[3/22, 17:15] Sekarreporter: *ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை வழங்கிய சிகிச்சை மீது முழு திருப்தி – பன்னிர்செல்வம் வாக்குமூலம்*

தனிப்பட்ட முறையில் அப்போலோ மருத்துவமனை சிகிச்சையின் மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்ன நோய்? என்ன சிகிச்சை? சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் யார்? என்ற விவரங்கள் எனக்கு தெரியாது. அப்போலோவின் சிகிச்சையின் மீது நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்
[3/22, 17:19] Sekarreporter: கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவு.
நேற்று 5 மணி நேரமும், இரண்டாவது நாளான இன்று 6 மணி நேரமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS விசாரணை .

ஆணையத்தின் 120 கேள்விகளுக்கும்
சசிகலா தரப்பு வழக்கறிஞரின் 34 கேள்விகளுக்கும்
அப்போலோ தரப்பு வழக்கறிஞரின் 11 கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
[3/22, 19:55] Sekarreporter: நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவை பெறும் நோக்கில், மாணவிகளின் வருகை பதிவில் திருத்தம் செய்த தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, குன்றத்தூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், (மாதா கல்லூரி) கடந்த 2013 – 14 ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற மாணவியிடம் அரசு நிர்ணயித்த கட்டணமான 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், கூடுதலாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலுத்தக் கூறியதுடன், கட்டணம் செலுத்தாததால், பயிற்சி பெற விடாமல் தடுத்ததாகக் கூறி, படிப்பு முடித்த சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி மாணவி வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவியிடம், 14 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்த நிலையில், கூடுதலாக 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்ததுடன், சான்றிதழ் வழங்க மறுத்ததாக கூறி மாணவி ரம்யா பிரியா என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்குகளில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார். பல்கலைக்கழக குழு அளித்த அறிக்கையில், இரு மாணவிகளிடமும் கூடுதலாக கட்டணம் வசூலித்ததது தெரியவந்ததாக கூறிய நீதிபதி, மாணவிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், வழக்கில் மாணவிகளுக்கு எதிராகவும், தங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பை பெறுவதற்காக, இருவரின் வருகைப் பதிவை திருத்தி, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மருத்துவக் கல்லூரிக்கு 3 கோடிரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை எட்டு வாரங்களில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டும் எனவும், அத்தொகையை பல் மருத்துவ படிப்பில் சேரும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கல்லூரிகளில் மாணவ – மாணவிகளின் வருகையை பதிவு செய்ய, பயோ மெட்ரிக் முறையை பின்பற்ற அறிவுறுத்தும்படி, பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தனியார் பல் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க பல் மருத்துவ கவுன்சிலுக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
[3/22, 20:01] Sekarreporter: சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பேட்டி

ஒ.பி.எஸ் க்கு முன்பு ஆணைய சாட்சியாக 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர் மனுதாரர் சாட்சியாக 7 பேர் விசாரிக்கப்பட்டிருந்தனர்.ஏராளமான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்ன

முதல் கேள்வியாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு ஒ.பி.எஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார்

அடுத்த கேள்வி நீதி கோரியவர் நீங்களே, ஆணையம் அமைக்க உத்தரவு போட்டதும் நீங்களே, அதே ஆணையத்தில் கடைசி சாட்சியாக பங்கேற்றுள்ளீர்கள் என்று கேட்ட போது பெருவாரியான மக்களுக்கு சந்தேகம் இருந்ததால் நானும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆணையம் அமைத்ததாக தெரிவித்தார்

ஒராண்டுக்கு முன் 23.1.2021 அன்று தனியார் தொலைக்காட்சியில் ஜெ மரணம் தொடர்பாக
வி கே சசிகலா மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை, அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை களையும் வண்ணமாக நீதிவிசாரணை வேண்டுமென கேட்டேனே தவிர எந்த காலத்திலும் அவர் மீது சந்தேகம் இல்லை என்று சொன்னதை மேற்கோள் காண்பித்து கேட்ட போது ஆம் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளேன் என தெரிவித்தார்

இரண்டு கட்டமாக இந்த ஆணைய விசாரணை பார்க்கப்பட்டது

22.9.16 க்கு முன்பாக ஜெயலலிதா அவர்களுக்கு போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன,என்னென்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், என்ன காரணத்தினால் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார்,

22.9 16 முதல் 5.12.16 வரை அவருக்கு என்ன விதமான சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எண்ணற்ற சாட்சிகளிடம் கேள்வி கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

அப்போலோ மருத்துவமனையை சேர்ந்த 12 மருத்துவர்கள் ஏற்கனவே போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்தவர்கள், ஆனால் அந்த மருத்துவர்கள் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆணையமும் அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவில்லை, அவர்களும் இதைப் பற்றி சொல்லவில்லை, அவர்களையெல்லாம் திரும்ப அழைத்து என்ன மாதிரியான சிகிச்சை கொடுக்கப்பட்டது, யாரிடம் பேசினீர்கள்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு என்ன குறைபாடு என கூறினாரா
எனக் கேட்டு பதிவு செய்து இருந்தேன். அதை ஓபிஎஸ் யிடம் தெரிவித்து கேட்ட போது…மக்கள் பணியில் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாது ன்னு கூறியது குறித்தும், 2016 மே மாதம் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதே ஜெ அவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை எடுத்துரைத்து சந்தேகம் உள்ளதா என்று ஒ.பி.எஸ் யிடம் கேட்டேன்

2014 பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் மன அளவில்
அவர்கள் stress யை நிறைய எடுத்துக்கொண்டது குறித்து மருத்துவர்களிடம் சிகிச்சையின் போது ஜெ தெரிவித்தது சாட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்

ஒ.பி.எஸ் அவர்கள் இன்று
எந்த வித குறைபாடோ,வேறுபாடோ,முரண்பாடோ,
சசிகலா விற்கு எதிராகுற்றச்சாட்டாகவோ எதுவும் பதிவு செய்யவில்லை. அவருடைய சாட்சியம் இன்றுடன் முடிவடைந்தது

ஆணையம் தரப்பின் அனைத்து சாட்சிகளும் முடிவுற்றது

29.12.16 யில் சசிகலா வை நான் தான் பொது செயலாளராக முன் மொழிந்தேன் என்றும் ஒ.பி.எஸ் கூறினார்

ஐ. பி.எஸ் அதிகாரிகள் ஜார்ஜ், தாமரைக்கண்ணன், பொன்மானிக்கவேல், சத்தியமூர்த்தி, ராமானுஜம்,பூஜாரி ஆகியோரை ஆணையம் அழைத்து விசாரித்தபோது 2011 – 2012 காலகட்டத்தில் சசிகலா மற்றும் சசிகலாவை சார்ந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்களா,அது தொடர்பாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா, அது ஜெயலலிதாவிடம் கூறினீர்களா எனக் கேட்டபோது அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை என கூறினர்

ஒ.பி.எஸ் யிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில்,
இது எனக்கு நினைவில் இல்லை, இது சரி, இது உண்மைதான் என கூறினார், சசிகலா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக கூறினார்

சசிகலா அவர்கள் 9.3.18 லேயே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டார்,மீண்டும் அவரை ஆணையம் அழைக்காது என்றே நினைக்கிறேன்
[3/22, 22:07] Sekarreporter: எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதி சட்டத்திலும், எல்.ஐ.சி. சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்.ஐ.சி. பாலிசிதாரரான பொன்னம்மாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியல் சாசனம் 110வது பிரிவின் கீழ் பண மசோதாவாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த திருத்தங்கள், பணமசோதா வரம்புக்குள் வராது என்பதால், இந்த திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதனால், அரசியல் சாசனத்தின்படி இந்த சட்ட திருத்தம் செல்லும் எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாலிசி எடுத்துள்ள மனுதாரர், 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நிதி கிடைக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த நிதி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பொது நல கொள்கையில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
[3/22, 22:08] Sekarreporter: பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியதற்காக தாக்கி, சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை – சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, போராட்டத்திற்குப் பின், சக கட்சியினருடன் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமாரசாமி, ராஜசேகர் ஆகியோர், தன்னை கடுமையாக தாக்கி, ஆபாசமாக திட்டி, புதுபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக சிறைவைத்ததாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். போலீசாரின் இந்த செயல் மனித உரிமையை மீறிய செயல் என அதில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்த டில்லிபாபுவை போலீசார் நடத்திய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்ததுடன், ஆவண ஆதாரங்களில் இருந்து மனித உரிமை மீறல் நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த தொகையில் டி.எஸ்.பி.யிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயையும், இரு உதவி ஆய்வாளர்களிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயையும் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...