Madras high court orders feb 9th ஐகோர்ட் உத்தரவுகள்

[2/9, 10:59] Sekarreporter 1: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய குழு

சிபிசிஐடி டிஜிபி சகீல் அக்தர் மேற்பார்வை

நீதிமன்றம் கண்காணிக்கும்

15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ விசாரித்தும் கொலைக்கான நோக்கம் கூட கண்டறியப்படாததால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

சிபிஐ விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும், தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டுமெனவும் ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவு
[2/9, 11:38] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதாகவும், அவ்ற்றை வாங்கி, மது அருந்துவோர், பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசிச் சென்று விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணாடி பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால் அவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், வயல் வெளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் காயமடைவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில், பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மதுபானங்கள் விற்கப்படுவதாகக் கூறியுள்ள மனுதாரர், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது எனவும், கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை வைக்கப்படவில்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

சுத்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மதுபானம் மட்டுமல்லாமல், பால் கூட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுவதாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என தெளிவுபடுத்தினர்.
[2/9, 11:50] Sekarreporter 1: மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தக்களை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இந்த வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவை பகிர்ந்திருந்த சவுதாமணி தைரியமா? விடியலுக்கா? என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். மேலும், மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் சவுதாமணி மீதான புகார்
தொடர்பாக, மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர்களது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் எனபதை உறுதி செய்த காவல்துறையினர்
அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி , காவல்துறை சவுதாமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை எதிர்த்து வேண்டுமென்றால் புதிய மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்த நீதிபதி, தற்போது புகாரின் அடிப்படையில் சவுதாமணியின் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
[2/9, 13:40] Sekarreporter 1: இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் மீது பதிவான வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக
தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜக-விற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வினோஜை கைது செய்யக்கூடாது என அறிவுறித்தி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகையில் வந்த செய்தியையே பகிர்ந்ததாக வினோஜ் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் கோவில்கள் மட்டும் இடிக்கப்படுவதாக கூறி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்துள்ளதாகவும், அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களையும், டிவிட்டர் பதிவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
[2/9, 16:41] Sekarreporter 1: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கையில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பெத்தேல் நகர் குடியிருப்போர் பாதுக்காப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்குகளும் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்போரின் விவரங்களை அரசுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் அவற்றை தொகுத்து பட்டியலாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால், அதன்படி பட்டா வழங்கக் கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் எனவும், அந்த நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்குத்தான் அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தனர். அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கையில் தவறில்லை என சுட்டிக்காட்டினர்.

அப்போது பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு சார்பில் தெரிவித்தபோது, நீதிபதிகள் குறுக்கிட்டு தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/9, 17:50] Sekarreporter 1: கால்நடைகள் சுற்றித்திரிய சென்னை மாநகரம் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சென்னையில் தெரு நாய்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகள் சாலைகளில் திரிவதாகவும், போக்குவரத்து மிகுந்து கடற்கரை சாலையிலும் கால்நடைகள் கடந்து செல்வதை பார்க்க முடிவதாக குறிப்பிட்டனர்.

மாநகராட்சிக்கு வெளியில்தான் கால்நடைகள் இருக்க வேண்டும் எனவும், நகருக்குள் இருப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினர்.

மாநகராட்சி தரப்பில் அளித்த விளக்கத்தில், கால்நடைகளின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு, மீண்டும் சாலையில் விடமாட்டோம் என உத்தரவாதம் பெறப்பட்டு, கால்நடைகள் விடுவிக்கப்படுவதாகவும், மாநகராட்சி சட்டப்படி பன்றிகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் சென்னை மாநகர திறந்தவெளி மிருகக்காட்சி சாலையா என கேள்வி எழுப்பியதுடன், மாநகராட்சி பகுதியில் கால்நடைகளுக்கு தடைவிதிக்கும் விதிகள் ஏதும் இல்லை என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என கூறி, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/9, 20:57] Sekarreporter 1: நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், படம் தோல்வி அடைந்ததையடுத்து, 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாக சிம்பு தரப்பில், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து தன்னை நீக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு நடிகர் சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பின், பிரதான வழக்கை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.
[2/9, 21:51] Sekarreporter 1: காவல்துறை பதவி உயர்வுக்கான அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு முதல் நிலை காவலர்களாகவும்; முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாகவும், தலைமைக் காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவுகளில், 10 ஆண்டுகள் இரண்டாம் நிலை காவலர்களாக பணியாற்றியவர்களை முதல் நிலை காவலர்களாகவும்; ஐந்து ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணியாற்றியவர்களை தலைமைக் காவலர்களாகவும்; 10 ஆண்டுகள் தலைமைக் காவலர்களாக பணியாற்றியவர்களை சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் நியமிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு, பணப் பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரைக் கிளயைிலும் 600க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் ஒரு இரு நீதிபதிகள் அமர்வு, தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பதவிஉயர்வுக்கு பரிசீலிக்கலாம் எனவும், மற்றொரு அமர்வு, தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் உள்பட 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களை மட்டுமே பதவிஉயர்வுக்கு பரிசீலிக்க வேண்டும் என இரு வேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தது.

இதனால், இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கிருஷணன் ராமசாமி அடங்கிய முழு அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.

அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலங்களுக்கு பதவிகளை வகித்திருப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு பெற தகுதி உள்ளதாகவும், அரசாணைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்றும் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

You may also like...