Madras high court orders feb 23:ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 23

[

 

[2/23, 08:56] Sekarreporter 1: https://youtu.be/uvCfA0jz1D0
[2/23, 09:07] Sekarreporter 1: https://youtu.be/4he4SdSGr5Q
[2/23, 10:14] Sekarreporter 1: [2/23, 10:11] Sekarreporter 1: https://youtu.be/cCXzMBkbwzA
[2/23, 10:11] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்க திமுக எம்பி ஆஜராகிறார்
[2/23, 10:42] Sekarreporter 1: https://youtu.be/AcvNG2nuOEQ
[2/23, 10:47] Sekarreporter 1: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்… சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு… 2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவு அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு… https://sekarreporter.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/
[2/23, 11:24] Sekarreporter 1: Nadigar sangam case mhc order Since one set of litigants wanted to approach the Supreme Court, the judge’s order that the Election Officer shall not declare the results before three weeks. https://sekarreporter.com/nadigar-sangam-case-mhc-order-since-one-set-of-litigants-wanted-to-approach-the-supreme-court-the-judges-order-that-the-election-officer-shall-not-declare-the-results-before-three-weeks/
[2/23, 12:26] Sekarreporter 1: [2/23, 12:25] Sekarreporter 1: [2/23, 12:25] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1496378095607369732?t=Mmzob9fV_UR_sDsHKxYLRQ&s=08
[2/23, 12:25] Sekarreporter 1: former minister jayakumar அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை காவல் நீட்டிப்பு
[2/23, 12:26] Sekarreporter 1: Advts in madurai balaurugan inbanathan anthaman murugan
[2/23, 13:20] Sekarreporter 1: [2/23, 13:19] Sekarreporter 1: https://youtu.be/Rj-JXgnOYFE
[2/23, 13:19] Sekarreporter 1: Senior Advt a natarajan interview
[2/23, 13:23] Sekarreporter 1: https://youtu.be/bOyYYhPfFI4
[2/23, 13:58] Sekarreporter 1: Today 23.02.2022 Former ADMK Minister Mr.D.Jayakumar bail petition come up for hearing before the Hon’ble 16th MM Judge at GT Court (George Town Court). Mr.A.Natarajan Senior advocate (Former State PP) appeared for former minister. Initially the 16th MM court judge refused to hear the bail petition and informed that he is going to adjourned the matter to some other day since he is just an incharge judge not the regular judge. But Mr.A.Natarajan vehemently objected the same and requested the judge to https://sekarreporter.com/today-23-02-2022-former-admk-minister-mr-d-jayakumar-bail-petition-come-up-for-hearing-before-the-honble-16th-mm-judge-at-gt-court-george-town-court-mr-a-natarajan-senior-advocate-former/
[2/23, 14:53] Sekarreporter 1: [2/23, 14:52] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1496415139071148033?t=tpJRpT-w-_t9DlG4k9cKtA&s=08
[2/23, 14:52] Sekarreporter 1: [2/23, 14:45] Sekarreporter 1: THE HONOURABLE DR. JUSTICE ANITA SUMANTH W.P. Nos.2240, 2246, 2250 & 2412 of 2022 and WMP Nos.2412, 2414, 2417, 2419, 2420, 2421, 2423, 2424, 2425, 2580, 2582& 2586 of 2022 https://sekarreporter.com/the-honourable-dr-justice-anita-sumanth-w-p-nos-2240-2246-2250-2412-of-2022-and-wmp-nos-2412-2414-2417-2419-2420-2421-2423-2424-2425-2580-2582-2586-of-2022/
[2/23, 14:50] Sekarreporter 1: For Petitioner in W.P.No.2412 of 2022

: Mr.Neeraj Malhotra forMr.Jitender Mehta

For Respondents in all WPs

: Mr.J.Ravindran, Additional Advocate General

Assisted by Ms.MythreeChandru,

Special Government Pleader
[2/23, 15:18] Sekarreporter 1: Temple case full order IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED:    21.02.2022 CORAM : THE HON’BLE MR.MUNISHWAR NATH BHANDARI, CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.23070 of 2021 T.R.Ramesh                                                .. Petitioner https://sekarreporter.com/temple-case-full-order-in-the-high-court-of-judicature-at-madras-dated-21-02-2022-coram-the-honble-mr-munishwar-nath-bhandari-chief-justice-and-the-honble-mr-justice-d-bh/
[2/23, 15:57] Sekarreporter 1: [2/23, 15:54] Sekarreporter 1: https://youtu.be/9sCY4bw5svA
[2/23, 15:54] Sekarreporter 1: Welfare Fund Bar Council Chairman Amalraj -இறந்த வக்கீல்கள் குடும்பங்களுக்கு விரைவில் நிதி துரித ஏற்பாடு
[2/23, 18:59] Sekarreporter 1: https://youtu.be/32RygRA8Djs
[2/23, 19:40] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1496486946364874760?t=DEjNpj6tGGrKI23UqYqkfg&s=08
[2/23, 20:12] Sekarreporter 1: The petitioner is directed to co-operate for the early disposal of the departmental disciplinary proceedings by availing the opportunities to be provided. THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM (MD) No.6146 of 2019and W.M.P.(MD) No.4903 of 2019 K.Anandhasekar       …  Petitioner https://sekarreporter.com/the-petitioner-is-directed-to-co-operate-for-the-early-disposal-of-the-departmental-disciplinary-proceedings-by-availing-the-opportunities-to-be-provided-the-honourable-mr-justice-s-m-subramania/
[2/23, 20:12] Sekarreporter 1: The petitioner is directed to co-operate for the early disposal of the departmental disciplinary proceedings by availing the opportunities to be provided. THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM (MD) No.6146 of 2019and W.M.P.(MD) No.4903 of 2019 K.Anandhasekar       …  Petitioner https://sekarreporter.com/the-petitioner-is-directed-to-co-operate-for-the-early-disposal-of-the-departmental-disciplinary-proceedings-by-availing-the-opportunities-to-be-provided-the-honourable-mr-justice-s-m-subramania/
[2/23, 21:01] Sekarreporter 1: https://youtu.be/MN466Kne7-Y

 

 

2/23, 10:44] Sekarreporter 1: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்…

சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு…

2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவு அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு…

வாக்குப் பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவு…

நடிகர் சங்கம், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பு…
[2/23, 11:00] Sekarreporter 1: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்… சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு… 2019 ஜூன் 23 ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ண வேண்டும், முடிவை மூன்று வாரங்களுக்கு முன்பு அறிவிக்கக்கூடாது தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு…
[2/23, 11:01] Sekarreporter 1: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருப்பதாக ஒருவர் கோர்ட்டில் தெரிவித்தார் இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதால் வாக்குகளை எண்ணலாம் மூன்று வாரத்திற்கு முடிவு அறிவிக்க கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு
[2/23, 11:20] Sekarreporter 1: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணி நான்கு வாரங்களில் முடிவு அறிவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015 ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பதவிக்காலம் முடிந்த செயற்குழு மூலம், ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்றும், சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டது.

அதன்படி, திட்டமிட்ட தேதியான ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஜூன் 23ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தனர்.

அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை தேர்தல் அதிகாரியாக நியமித்த உயர் நீதிமன்றம், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்த கவனிக்க உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த மேல்முறையீடு வழக்குகள், மூன்று அமர்வுகளை கடந்து இறுதியாக, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்து, 2021 அக்டோபர் 26 ம் தேதி, வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் செல்லும் எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

சிறப்பு அதிகாரி பதவிகாலம் ஏற்கனவே முடிந்துவிட்டதால், அவரது நியமனத்தை எதிர்த்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், கடந்த 2019ல் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டியை, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட்டனர்.

அதன்பின், வாக்கு எண்ணிக்கையை நடத்த தேதியை முடிவு செய்து, வாக்குகளை எண்ணி, நான்கு வாரங்களில் முடிவுகளை அறிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேல்முறையீடு செல்ல இருப்பதால் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்திவைக்க வேண்டுமென நடிகர்கள் பெஞ்சமின், ஏழுமலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், மூன்று வாரங்களுக்கு தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
[2/23, 12:48] Sekarreporter 1: தமிழக கோவில்களை செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டி ஆர் ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள கோவில்களை செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது விதிகளுக்கு முரணானது என்றும்
2015 ஆம் ஆண்டு பணி விதிகளை உருவாக்குவதற்கு முன்பே, கோவில்களில் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நியமனத்துக்கான காலக்கெடுவும் நியமிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். கோவில்களை நிர்வகிக்கும் உரிமை அறங்காவலர்களுக்கு மட்டுமே உண்டு என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே செயல் அலுவலர்களின் நியமனங்களை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், இதுபோல வழக்கு தொடர்வதற்கு மனுதாரருக்கு எந்த உரிமை இல்லை என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் எதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/23, 12:51] Sekarreporter 1: பொறுப்பு மாஜிஸ்திரே என்பதால் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்று மாஜிஸ்திரேட் கூறினார்.
இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜெயகுமார் தரப்பு மூத்த வக்கீல் ஏ.நடராஜன. வாதம்.
அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடியவை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதம்.
[2/23, 12:51] Sekarreporter 1: அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும் என வாதம்.
[2/23, 12:51] Sekarreporter 1: சிறையில் முதல் வகுப்பு தரவில்லை என்று ஜெயகுமாரின் வழக்கறிஞர் வாதம்.
ஜாமீன் தரக்கூடாது என்று பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் மனு தாக்கல்.
[2/23, 12:51] Sekarreporter 1: பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று வாதிட்டார்.
[2/23, 12:51] Sekarreporter 1: அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கை 307ஆக மாற்றியுள்ளோம். தகவல்தொழில் நுட்ப பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு ஜெயகுமார் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை. அதற்கான முகாந்திரம்மும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை.
காயம் எதுவும் இல்லை. எந்த அடிப்படையில் 506 (2) பிரிவை சேர்த்தார்கள்?
கொலை மிரட்டலே இல்லை என்றபோது கொலை முயற்சி எப்படி வரும் என்று ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டார். அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறஞர் என்.ஆர்.இளங்கோ, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் தீர்பை தள்ளிவைத்தார்.
[இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வரும் சுரேஷ்
[2/23, 12:51] Sekarreporter 1: அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியுள்ளார். அடிங்கடா என்று தெரிவித்தார். கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்ச்சியாகும் என்று வாதிட்டார்.
[2/23, 12:51] Sekarreporter 1: புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடவில்லை.
[2/23, 13:14] Sekarreporter 1: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு 62 ஊழியர்களை தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உதவிப் பொறியாளர், தட்டச்சர், டிரைவர், நாதஸ்வர கலைஞர் உள்பட 62 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கோவில் இணை ஆணையர் கடந்த ஜனவரி 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

இதை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ்தேசிய மக்கள் கட்சி தலைவர் சிவபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், அரசு வேலைவாய்ப்பிற்கான நடைமுறைகளை மூலம் இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரப்பப்பட வேண்டிய இடங்களை, விதிகளை பின்பற்றாமல் நிரப்பும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்டவிரோதமானது என குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பணி சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எப்படி பொது நல வழக்கு தொடர முடியும் எனவும், விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என, நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/23, 13:35] Sekarreporter 1: திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் தள்ளி வைத்துள்ளனர்.*

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியாகி, அதனடிப்படையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடீயோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜெயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அ.தி.மு.க-வினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தி.மு.க பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்து ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணா ஆனந்த் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது வழக்கில் அவரை கைது காட்டுவதற்காக பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை கைது காட்ட போலீசார் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னை ஜார்ஸ் டவுன் நீதிமன்றத்தில் 15வது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால் 16-வது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்துள்ள முடியாது என கூறினார்.

அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பொறுப்பாக பணியாற்றி வரும் நீதிபதி தவுலத்தம்மாளிடம் 16-வது மாஜிஸ்திரேட் தயாளனே விசாரிக்க அனுமதி வழங்க கோரி ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கேட்கபட்டதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது.

முன்னதாக சென்னை ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டு ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரானஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், ஜெயக்குமார் மீது அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்கு பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும் எனவும், புகார் கொடுத்தவரை மனுதாரர் ஜெயக்குமார் தொடவில்லை என வாதிட்டார்.

பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அன்றைய தினம் நரேஷை கொலை செய்திருப்பபார்கள். அந்த வகையில் சம்பவம் நடந்தது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 1000 பேர் முன்பு மிரட்டியுள்ளார் என்றும் “சாவடிங்கடா” என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சியாகும் என்பதால் தான் இந்த வழக்கை 307ஆக மாற்றியுள்ளதாகவும், தகவல்தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை எனவும், அதற்கான முகாந்திரம்மும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார்.

எதன் அடிப்படையில் 506 (2) பிரிவை சேர்த்தார்கள்? கொலை மிரட்டலே இல்லை என்றபோது கொலை முயற்சி எப்படி வரும் என்று ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிட்டார்.

அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் நீதிபதி தீர்பை தள்ளிவைத்தார்.
[2/23, 15:23] Sekarreporter 1: | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி
[2/23, 16:04] Sekarreporter 1: திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக தகவல் வெளியாகி, அதனடிப்படையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையிலான அ.தி.மு.க-வினர் அங்கிருந்த தி.மு.க பிரமுகர் ஒருவரைப் பிடித்து தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் லைவாக காட்டிய நிலையில் அந்த வீடீயோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் பாதிக்கப்பட்ட நரேஷ் என்ற தி.மு.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீசார் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உட்பட 113 அ.தி.மு.க-வினர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த வழக்கில் நீதிமன்ற காவலில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வரை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அதேபோல அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை மீண்டும் ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது வழக்கில் போலீசார் ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 15வது மாஜிஸ்திரேட் நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் விடுமுறை என்பதால் 16-வது மாஜிஸ்திரேட் நீதிபதி தயாளன் தன்னால் விசாரணைக்கு எடுத்து கொண்டு விசாரித்தார்.

முன்னதாக சென்னை ராயபுரத்தில் அரசு உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டு ராயபுரம் போலீசார் பதிவு செய்த வழக்கில் மார்ச் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரானஅரசு முன்னாள் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ஜெயக்குமார் மீது அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வகையில் வழக்கு பதியபட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை பார்த்தால் உண்மை தெரியும் என வாதிட்டார்.

பாதிக்கப்பட்ட நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன், ஒரு முன்னாள் அமைச்சர், சட்டம் படித்தவர் இதுபோன்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் புகார் கொடுத்தவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் பாதிக்கப்பட்டவரை 100 பேர் முன்பு மிரட்டியுள்ளார் என்றும் “சாவடிங்கடா” என்று கொலை மிரட்டல் விடுத்தார். இது கொலை முயற்சி என்பதால் அவர் மீது 307 பதியபட்டுள்ளதாவும் மேலும் தகவல் தொழில் நுட்ப பிரிவு வழக்கும் ஜெயக்குமார் மீது சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் 307 பிரிவுக்கான குற்றமே நடக்கவில்லை எனவும், அதற்கான முகாந்திரம்மும் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்றார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[2/23, 17:36] Sekarreporter 1: பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா காலணி டெண்டரில் புதிய நிபந்தனையை சேர்த்ததை எதிர்த்து காலணி தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வியாண்டுக்கு விலையில்லா காலனி வழங்கும் திட்டத்திற்காக 25 லட்சத்து 89 ஆயிரம் ஜோடி வெல்க்ரொ சாண்டல் காலணிகளை கொள்முதல் செய்ய 110 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு டெண்டர்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழகம் ஜனவரி 29ஆம் தேதி அறிவித்தது.

இந்த டெண்டரில் பங்கேற்க தகுதியாக, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஜோடி காலணிகளை அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பல்கலைகழகங்களுக்கு வினியோகித்திருக்க வேண்டும் என நிபந்தனை திருத்தப்பட்டது.

இதை எதிர்த்து ஜெய்ப்பூரை சேர்ந்த லெஹர் புட்வேர், மஹாவீர் பாலிமர், டெல்லியை சேர்ந்த பி.என்.ஜி. பேஷன்ஸ் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.

இந்த மனுக்களில், திருத்தப்பட்ட நிபந்தனைகளை ரத்து செய்து, தங்கள் நிறுவனங்களையும் டெண்டரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட 5 நிறுவனங்களை மட்டுமே பங்கேற்க வைக்கும் நோக்கில் நிபந்தனைகள் திருத்தப்பட்டதாகவும், தமிழக அரசை தவிர வேறு மாநில அரசுகள் வெல்க்ரோ காலணிகளை கொள்முதல் செய்வதில்லை என்றும் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எல்.சோமயாஜி, நீரஜ் மல்கோத்ரா ஆகியோர் வாதிட்டனர்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றுவதற்காகவே டெண்டர் நிபந்தனைகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும், டெண்டரில் பங்கேற்காத நிலையில் அந்த நடைமுறைகளை எதிர்த்து மனுதாரர் நிறுவனங்கள் வழக்கு தொடர முடியாது என வாதிட்டார்.

மேலும், கோரிக்கையை பரிசீலிக்கக் கோரிய நிறுவனங்களின் மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், டெண்டரை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நிறுவனங்கள் அரசை அணுகி மீண்டும் மனு அளித்தால் அவற்றை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[2/23, 17:37] Sekarreporter 1: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனும் என்.சி.இ.ஆர்.டி. பாட திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளதால், இப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்களால் தேசிய அளவில் நடத்தப்படும் ஐ ஐ டி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுவதால், என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், சமச்சீர் கல்வி திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, என்.சி.இ.ஆர்.டி பாட திட்டத்தை தான் மாநில அரசு பின்பற்ற வேண்டும் என எந்த சட்டப்பிரிவு கூறுகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பாததால் தான் அரசு பள்ளிகள் மேம்படவில்லை எனத் தெரிவித்தனர்.

மேலும், எந்த பாடத்திட்டத்தை பின்பற்றுவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், அரசு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், சமச்சீர் கொள்கையை பின்பற்றுவது தொடர்பான அரசு கொள்கை முடிவில் எந்த விதிமீறலும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/23, 17:51] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வார்டு மறுவரையறை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மக்கள்தொகை அடிப்படையில் வார்டு பிரிக்கும் போது நகரின் மையப் பகுதியில் வார்டுகள் சிறியதாகவும், பிற பகுதிகளில் பெரியதாகவும் இருக்கும் எனவும், அந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை சமமான அளவில் மேற்கொள்வதில் சிக்கல் எழும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, தேர்தல் நடவடிக்கை தொடங்கிய பிறகு தொடரப்பட்ட வழக்கு என்பதால், தொகுதி மறுவரையரை குறித்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[2/23, 20:40] Sekarreporter 1: Use this

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததுடன், சித்ரவதை செய்து துன்புறுத்தியவருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கருணாகரன், கடந்த 2015-ம் ஆண்டு, சூளை தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். பின், சிறுமி மீது சந்தேகம் அடைந்து மது போதையில் அடித்து துன்புறுத்தி உள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை சிகரெட்டால் உடலின் பல்வேறு பகுதிகளில் சூடு வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த அவர், கத்தியால் சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கருணாகரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் (போக்சோ) உள்ளிட்ட 6 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ராஜலட்சுமி, கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனையும், 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனையும் (14 ஆண்டுகள்), கடத்தல் குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டு, கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டு,குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை, கத்தியால் அறுத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஓராண்டு, ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி சூடு வைத்த குற்றச்சாட்டுக்காக 7 ஆண்டு என மொத்தம் 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின்பு கடைசியாக ஆயுள்தண்டனையை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...