Madras high court orders december,15

[12/15, 11:30] Sekarreporter 1: Old

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக தரப்பில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்தது.

அந்த அறிவிப்பை செயல்படுத்திம் விதமாக, வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதேபோல, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது.

வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த 24ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுக்களில், புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல என்றும், உலக தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதி கருத்துக்கள் தேவையற்றவை எனவும், இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களை புண்படுத்தியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, வேதா நிலையம் இல்லத்தின் சாவியை ஒப்படைத்தது, கட்சிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை அமைத்ததன் நோக்கம் வீழ்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், பொது பயன்பாடு இல்லை என தனி நீதிபதி முடிவுக்கு வந்திருக்க கூடாது என்பதால், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள்,பரேஷ் உபத்தாயா,சத்திகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
[12/15, 12:16] Sekarreporter 1: *விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு திரும்பபெறபட்டதையடுத்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.*

நாமக்கல்லில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு தனது காரில் வந்த பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு எதிராக சிபிசிஐடி, பிப்ரவரி 27ஆம் தேதி பதிவு செய்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ஆம் தேதி 1300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அதை மனதை செலுத்தி படித்து முடிவெடுக்காமல், விசாரணை வரம்பை கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்ற அழுத்ததிலேயே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த டிஜிபி-யாக பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள தன்னை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன், தனக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகார் மீதான விசாரனை தொடங்கியுள்ளதால் வழக்கை திரும்ப பெற உள்ளதாக ராஜேஸ்தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை வாபஸ் பெற நீதிபதி அனுமதியளித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
[12/15, 12:54] Sekarreporter 1: தலைமை செயலாளர் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி வருவாய் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில் 313 தாலுக்காக்கள் உள்ளதாகவும், அதில் உள்ள நீர்நிலைகள் குறித்த விவரங்களை முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே இந்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக தலைமை செயலாளர் வெ.இறையன்பு நாளை ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதிகள் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரியையும் நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
[12/15, 13:28] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்காத வழக்கில் தமிழக தலைமை செயலாளர் நாளை நேரில் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டிசம்பர் 16ஆம் தேதி ((நாளை ))நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி வருவாய் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக தலைமை செயலாளர் வெ.இறையன்பு நாளை ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கூடுதல் மனு தாக்கல் செய்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் தலைமை செயலாளர் ஆஜராக வேண்டுமென்ற உத்தரவிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர். மேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள முகவரியையும் நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
[12/15, 15:49] Sekarreporter 1: டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து கொண்டு வழக்கறிஞரானவர் உள்ளிட்ட இரண்டு வழக்கறிஞர்களை பணியாற்ற தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

பூந்தமல்லி
வழக்கறிஞர் விமல்குமார், என்பவர் விதவைப்பெண்ணை ஏமாற்றி, பணம் பறித்ததாகவும் மற்றும் பூந்தமல்லி வழக்கறிஞர் சங்கத்தில் நுழைந்து தகராறு செய்ததாக 2 புகார்கள் அவர் மீது தெரிவிக்கப்பட்டது.
அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்ற வழக்கறிஞர் டாஸ்மாக் கடையில் வேலைபார்த்து கொண்டு வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு வழக்கறிஞர்களையும், பணிபுரிய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
[12/15, 16:37] Sekarreporter 1: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீதான தமிழக அரசின் நிலைபாடு என்ன? என்பதை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை ஆணைய அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சூரப்பா தொடர்ந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.

இதையடுத்து நீதிபதி, சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணையத்தின் மீதான தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்றும், முன்னாள் துணை வேந்தர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கைகளை தொடர போகிறீர்களா? மனுதாரர் தொடர் அச்சத்திலேயே இருக்க முடியுமா? இது ஊழலாக இருந்தால் விட மட்டோம் என்றும் இது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறியதை அடுத்து, விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
[12/15, 16:38] Sekarreporter 1: தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக ஆறு வாரங்களுக்கு எந்த முடிவும் எடுக்க கூடாது என தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வைப்பீடு வைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் நகைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கோவில் நகைகள் கணக்கெடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.
[12/15, 17:05] Sekarreporter 1: நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக மீண்டும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு விரிவான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2019ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்,
தமிழகம் முழுவதும் உள்ள சம்மந்த மாவட்ட ஆட்சியர்கள் நீர்நிலைகளை அடையாளம் கண்டு, வருவாய் துறை ஆவணங்களில் அடிப்படையில் நீர் நிலைகளில் பட்டியலை தயாரித்து சமர்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்..
தமிழ் நிலம் என்ற இணையதளத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக புள்ளி விவரங்கள் திரட்டபட்டு பரப்பளவு, சர்வே எண், வகைகள் வாரியாக புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.. அதன் அடிப்படையில் குடியிருப்பு பகுதிகளில் 10, 556.41 ஏக்கர் அளவிற்கு நீர் நிலைகளும் , வணிக பகுதிகளில் 1500.08 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும், விவசாய பகுதிகளில் 32024.91 ஏக்கர் நீர் நிலைகளும், அரசு கட்டிடங்களில் 1311.54 ஏக்கர் நீர் நிலைகளும் மற்றவைகளில் 2414.58 ஏக்கர் நீர் நிலைகள் என மொத்தமாக 47807.52 ஏக்கர் அளவிற்கு நீர் நிலைகள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மொத்தமாக 4, 862 அரசு கட்டிடங்கள் 1311.54 ஏக்கர் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாக
அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு குளங்கள் பாதுக்காப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதேபோல, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டத்தின் கீழ் அரசு நிலங்களில் உள்ள அங்கீகரிக்கபடாத ஆக்கிரமிப்புகளை ஆறுகள் குளங்கள் குட்டைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்க ஒருங்கிணைந்த சட்ட திருத்த வரைவு மசோதா வரும் சட்டமன்ற கட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள கட்டிடங்களுக்கு பத்திர பதிவு செய்யப்படமாட்டது, மேலும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்படமாட்டாது என்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கப்படமாட்டாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
[12/15, 17:37] Sekarreporter 1: கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகளை நிறுத்த இடமளித்தும் பெருமளவில் விலை குறையவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

நவம்பர் மாத இறுதியில் தக்காளி விலை உச்சம் அடைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மூடிக்கிடக்கும் தக்காளி கிரவுண்டை திறக்க வேண்டும் என்று தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்ந்தது. அதில், தக்காளி கிரவுண்டை திறப்பதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளிகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி, குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளியை விற்பனை செய்ய முடியும் என்று கூறியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டு, இடத்தின் பயன்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்ததவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் நீதிமன்ற உத்தரவுப்படி ஓரு ஏக்கர் நிலம் ஒதுக்கவில்லை என்றும், 50.1 செண்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்கெட் கமிட்டி தரப்பில் தாக்கல் செய்யபட்ட அறிக்கையில், 94 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், கடைகளுக்கு அருகில் வாகன நிறுத்த வசதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தக்காளி இறக்கும் இடத்தில் விற்பனை செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இரு அறிக்கைகளையும் ஆய்வு செய்த நீதிபதி, ஒதுக்கப்பட்ட இடத்தில் தக்காளி இறக்குவதை தவிர, வேறு எந்த பணியும் நடைபெறவில்லை என்பதை வியாபாரிகள் உறுதிசெய்ய வேண்டுமென்றும், அப்படி நடந்தால் அதற்கு மனுதாரர் பொறுப்பேற்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும் லாரிகளில் வரும் தக்காளியை இறக்கி ஏற்றுவதற்கான இடம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலும், தக்காளி விலை ஏன் பெருமளவில் குறையவில்லை என கேள்வி எழுப்பினார்.

வியாபாரிகள் சங்கம் தரப்பில் தென் மாநிலங்களில் கன மழை காரணமாக விளைச்சல் இல்லை என்றும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்தும் வரத்து குறைவாகத்தான் உள்ளாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாவிட்டாலும் விலை ஓரளவு குறைந்துள்ளதால், தக்காளி மார்கெட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்துவதற்கு பொங்கல் வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். விலையை கட்டுப்படுத்த கூடுதல் எண்ணிக்கையில் லாரிகளை வரவழைக்கலாம் எனவும் அறிவுறுத்தினார். .

தக்காளி இறக்கி ஏற்றும் இடத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை செய்யக் கூடாது என்றும், மீறினால் அந்த வாகனங்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[12/15, 17:57] Sekarreporter 1: தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஆரணி சேர்ந்த 55 வயதான சமையல்காரர் சேகர் தனது மனைவி ஆரவள்ளியுடன் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தாம்பத்தியத்திற்கு அழைத்தப்போது, மனைவி மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த சேகர், ஆரவள்ளியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சேகருக்கு எதிரான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
[12/15, 17:57] Sekarreporter 1: பணி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 10 ஆயிரம் ரூபாய் அனுப்பிய வழக்கில் போக்குவரத்துக்கழக ஊழியரை விடுவிக்க சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றிய பாலசுப்பிரமணியன், ஒழுங்காக பணிக்கு வரதாதல் அவர் பணி நீக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை வேலையில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக்கூறி அந்த நபர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 2018-ம் ஆண்டு தபால் மூலம் ஒரு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவுடன் 10 ஆயிரம் ரூபாயையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நீதி பரிபாலனத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், சாதகமான உத்தரவை பெற தலைமை நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறி போக்குவரத்துக்கழக பணியாளர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறி, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவர் தரப்பில் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், மனுதாரர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், மனுதாரருக்கு தன் மீதான குற்றச்சாட்டு குறித்தும், நீதிமன்ற விசாரணை குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது என்றும், நினைவாற்றால், சிந்தனை, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் போன்றவை போதிய அளவில் உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

மருத்துவரின் இந்த அறிக்கையை ஏற்று, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி போக்குவரத்து கழக பணியாளர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...