Madras high court orders december 29

[12/28, 10:54] Sekarreporter 1: கோவில் நிலத்தை கண்டறிந்து, மீட்பதற்கு தமிழக அரசின் வருவாய் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோவிலுக்கு சொந்தமாக150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை போலி ஆவணங்களை கொண்டு தங்கள் பெயருக்கு மாற்றும் வகையில் நில அபகரிப்பாளர்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றை தடுக்கக் கோரி தான் அளித்த புகாரில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையில் அடிப்படையில் வருவாய் துறை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், நில உரிமையாளர் என உரிமைகோருவோரின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு, இந்த பணிகளை முடித்து கோவில் நிலங்களை மீட்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, கோவில் நில ஆவணங்களை ஆராய்ந்து, கணக்கெடுத்து, மீட்பதற்கும், அபகரிப்பாளர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசின் வருவாய் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவில் நில விவகாரத்தில் சம்பந்தபட்ட துறைகளை சேர்ந்த உரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தை 6 வாரங்களில் கூட்ட வேண்டுமெனவும், அதில் எடுக்க்ப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிலங்கள் மீட்பதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டு ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.
[12/28, 12:46] Sekarreporter 1: சென்னை ஐகோர்ட் மதுரை ஐகோர்ட் கிளை ஆன்லைன் hearing ரத்து
[12/28, 12:44] Sekarreporter 1: R.o.c.N0,23991-c/2020/c3
NOTIFICATION
In partial modification
[12/28, 12:48] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், வரும் திங்கள் கிழமை முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்…

ஜனவரி 3 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து வழக்குகளும் நேரடியாக மட்டுமே விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு…

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் முதல் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டன…

கடந்த சில மாதங்களாக வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக அனுமதி வழங்கப்பட்டது…

நேரடியாகவும், காணொலி காட்சி மூலமும் என கலப்பு முறையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன…
[12/28, 12:58] Sekarreporter 1: 21 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நேரடி விசாரணை
[12/28, 13:05] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல், சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனைத்து வழக்குகளும் நேரிடையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பதிவாளர் ஜெனரல் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆன்லைன் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது.
அதன்பின்னர், தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, படிப்படியாக, நேரிடை விசாரணை முறைக்கு மாற்றப்பட்டது.

இருப்பினும், வழக்காடிகளின் வழக்கறிஞர்களின் தேவைகளை பொறுத்து, உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2022 ஜனவரி 3 ஆம் தேதி முதல், சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நீதித்துறை நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 முதல் நேரிடையாக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[12/28, 19:07] Sekarreporter 1: மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக சொத்தாட்சியர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்‌ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

அதன்படி கே.டி.ருக்மணி அம்மாளுக்கு சொந்தமாக தியாகராய நகர் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார்.

அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது, அந்த கட்டிடம் சிதலமடைந்து இருப்பதும், அதை சட்டவிரோதமாக 10 பேர் ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு, கட்டிடத்தை அபகரிக்கும் நோக்குடன் நடிகர் மன்சூர் அலிகான் செயல்பட்டு வருவதாகவும் கண்டறிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த கட்டிடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கும் மன்சூர் அலிகான் முயற்சிப்பதையும் கண்டறிந்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு சொத்தாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நடிகர் மன்சூர் அலிகானை எச்சரித்துள்ளார்.

மன்சூர் அலிகானுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும தமிழக அரசின் சொத்தாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...