Madras high court orders

[11/16, 06:38] Sekarreporter1: ஜெய் பீம் பட நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கில் நோட்டீஸ்.

5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி நோட்டீஸ்..

வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும்- பு.தா.அருள்மொழி

24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை.

[11/16, 06:38] Sekarreporter1: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்த தாது மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரி விக்டர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.கடலோர மாவட்டங்களில் இருந்து தாது மணலை எடுப்பதற்கு தடை விதித்தும் ஏற்றுமதி செய்வதற்கு தடைவிதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது… இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வி.சுரேஷ் என்பவரையும் நியமித்தது

அதன்படி வழக்கறிஞர் வி. சுரேஷூம் தனது ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.அந்த அறிக்கையில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதின் காரணமாக அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது ..
அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சுரேசின் அறிக்கையை ஆய்வு செய்து பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு விவி மினரல்ஸ் நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
 
[11/16, 06:38] Sekarreporter1: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சஞ்ஜீப் பேனர்ஜி திடீர் இடமாற்றம், தமிழ் நாட்டின் வழக்கறிஞர் சமூகத்தையும், நீதித்துறையையும், பொதுமக்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பல்வேறு பொதுநலவழக்குகளில் எவருக்கும் அஞ்சாமல் சரியான உத்தரவுகளை அவர் பணிபுரிந்த குறுகிய காலத்தில் பிறப்பித்து அதனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்.
அவரை திடீர் இடமற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பிறப்பித்த உத்தரவு நியாயமனது அல்ல. எனவே அவர் இடமாற்ற உத்தரவை உச்சநீதிமஎன்ற கொலீஜியம் உடனே மறுபரிசீலனை செய்யது,உத்தரவை ரத்து செய்ய வழக்கறிஞர் சமுதாயம் கோருகிறது.
கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15.11.2021 திங்கட்கிழமை மதியம் 1.30 மணிக்கு உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயிலுக்கு வெளியே நடைபெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள்,அமைப்புகள் கலந்து கொள்கிறார்
கள்.நீதிக்கான போராட்டத்தில் பங்கேற்போம்!ஆதரவளிப்போம்!
ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்DAA
மாநிலமையம்
[11/16, 06:38] Sekarreporter1: வாடிக்கையாளர்கள், குடிமக்களின் பரிவர்த்தனைகள் மூலம் ஊதியம் பெறும் வங்கி அதிகாரிகள்,
 வாடிக்கையாளர்களை நல்ல முறையில் நடத்த  வேண்டும் 

வாடிக்கையாளர்களை கவுரவமாக நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  பாரத ஸ்டேட் வங்கிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொறுப்பற்ற முறையில் ஆணவத்துடன் நீதிமன்றத்துக்கு  பதிலளித்த சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி.ஐ பொது மேளாலருக்கு உத்தரவு

 முத்திரைத்தாள்  விற்பனையாளர்கள், அரசுக்கு செலுத்தும் தொகைக்கு, பணம் கையாள்வதற்கான கட்டணம் வசூலிக்க  எஸ்.பி.ஐ. க்கு தடை விதிக்க கோரி முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவு
[11/16, 06:38] Sekarreporter1: இந்து சமய அறநிலைய துறை சார்பில் புதிதாக கல்லூரி கள் துவங்க கூடாது…

ஏற்கனவே துவங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது…

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

அறங்காவலர் இல்லாமல் நீதிமன்ற அனுமதியில்லாமல் கூடுதல் கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்ககூடாது – உயர் நீதிமன்றம்…

கல்லூரி துவங்கிய ஒரு மாதத்துக்குள் இந்து மத வகுப்புகள் நடத்தாவிட்டால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது – உயர் நீதிமன்றம்…

கோவில் நிதியில் கல்லூரி துவங்க தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு…

விசாரணை 5 வாரம் தள்ளிவைப்பு…
[11/16, 06:38] Sekarreporter1: பொது இடங்களில் ஏற்படும் விபத்துக்களில் பலியாவோருக்கு சமச்சீரான இழப்பீடு வழங்க வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம்

இது தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மரம் விழுந்த இரு வேறு விபத்துக்களில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு வழக்கு..

பொது இடங்களில் ஏற்படும் விபத்துக்களில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது- நீதிபதி வேதனை.

ஒரு சிலருக்கு ஒரு கோடி ரூபாயும் ஒரு சிலருக்கு ஒரு லட்சம் என இழப்பீடுகள் வழங்கப்படுகிறது- நீதிபதி.
[11/16, 06:38] Sekarreporter1: ஜெய் பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், 5 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டுமெனவும் வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

படத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட், சூர்யா,ஜோதிகா, இயக்குனர் ஞானவேல், அமேசான் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்

அதில், நவம்பர் 2ஆம் தேதி வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர் சங்கம் மற்றும் அதன் தலைவராக இருந்து மறைந்த குரு ஆகியோரை குறிக்கும் வகையில் காட்சிகளும், கதாப்பாத்திரங்களும் அமைத்து அவதூறு பரப்பி உள்ளதாக அந்த நோட்டீசில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் உண்மை சம்பவத்தில் தொடர்புடைய பெயர்களுடன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், உதவி ஆய்வாளர் அந்தோனிசாமி பெயரை குருமூர்த்தி என மாற்றியதுடன், பின்னணியில் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அமைத்ததாக நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினரின் இந்த செயல் அறியாமல் நடந்துவிட்டதாக கூறி அக்னி குண்ட காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும், உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட காட்சிகளை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளதால், நற்பெயர் கெட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 7 நாட்களில் 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அக்னி குண்டம் காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவறினால் கிரிமினல் அவதூறு வழக்கும், இழப்பீடு கோரி உரிமையல் வழக்கும் தொடர இருப்பதாகவும் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அனுப்பியுள்ள நோட்டீசில் எச்சரிகக்கப்பட்டுள்ளது.
[11/16, 06:38] Sekarreporter1: அறிவியல் திறனறிவு தேர்வை இந்த ஆண்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

அடுத்த ஆண்டு பட்டியலில் உள்ள மாநில மொழிகளிலும் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவு.

மாநில மொழிகளில் திறனறிவு தேர்வை நடத்துவதற்கான செயல்முறை முடிக்க ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் – மத்திய அரசு பதில்

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்படும் திறனறிவு தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவதை எதிர்த்த வழக்கறிஞர் திருமுருகன் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு
[11/16, 06:38] Sekarreporter1: கொரோனா கட்டுப்பாடுகளால் 20 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அதை பின்பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு, சுமார் ஒன்றரை வருட காலமாக மேலாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் காணொலிக் காட்சி மூலமாக நடத்தப்பட்டன.

நீதிபதிகள் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் நேரில் ஆஜராகி வழக்குகளை நடத்திவந்த நிலையில், கொரொனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கை வசதி வழக்குகள், சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்குகள், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளும் காணொளியில் நடத்தப்பட்டன.

இந்நிலையில் காணொலியில் ஆஜராவது சிரமமாக இருப்பதாக வழக்கறிஞர் சங்கங்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளையும், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்

அதன்தொடர்சியாக இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தபட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களின் உதவியாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேநேரம், வழக்கறிஞர் சங்கங்கள், அலுவலக அறைகள், நூலகங்கள் ஆகியவையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

தளர்வுகள் வழங்கப்பட்ட முதல் நாள் என்பதால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவது சற்று குறைவாகவே உள்ளது.
[11/16, 06:38] Sekarreporter1: இன்று நீட் தேர்வில் மனுதார்கள் தான் எழுதிய விடைத்தாளின்படி உண்மையான மதிப்பெண் வழங்காமல் தேர்வு முடிவு அறிவிக்கப்பட் பொழுது வேறுபட்ட மிக மிக குறைந்த மதிப்பெண் வெளியிடப்பட்டதை எதிர்த்தும் தன் உண்மையான மதிப்பெண்ணை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வழக்கு நீதிஅரசர் தண்டபானி அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஒன்றிய அரசு நீட் National Testing Agency மாணவர்களின் உண்மை விடைத்தாளை சமர்ப்பிக்காமல் நகலைமட்டுமே சமர்பித்து சரியான மதிப்பெண்தான் வழங்கப்பட்டது என்று வாதிட்டதை ஏற்காமல்
உண்மையான விடைத்தாளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணைபிறப்பித்து வழக்கை திங்கள் கிழமைக்கு கேட்பிற்கு போட்டுள்ளார்.
இன்று வந்த இரு வழக்குகளில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள்
கனிமொழி மதி மற்றும் மனோகரன்
ஆகியோர் வாதிட்டனர்.
[11/16, 06:38] Sekarreporter1: Suresh anna

ஏன் சனிக்கிழமை இவ்வளவு செய்திகள் போடுகிறீர்கள் என்று கேட்டால் உனக்கு விருப்பம் இருந்தால் போடு….
என்று தெரிவித்ததற்கு நன்றி….
[11/16, 06:38] Sekarreporter1: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் குரல் எழுப்பி வந்த நிலையில், குடியசுத் தலைவர் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெறவுள்ள அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.

‘சார்டர்ட் ஹைகோர்ட்’ என்ற பெருமை கொண்ட பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
அப்படிப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து 3 நீதிபதிகள் மட்டுமே கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு சஞ்சிப் பானர்ஜி மாற்ற பரிந்துரைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியை வெளிப்பபடுத்தினர்

இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் 237 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

அதே போல இந்தியாவின் பழமைவாய்ந்த வழக்கறிஞர் சங்கங்களுள் ஒன்றான மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு சஞ்சீப் பானர்ஜியின்
இடமாற்ற உத்தரவை மறு பரீசிலனை செய்யக் கோரி கடிதம் எழுதியதோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதன் தொடர்ச்சியாக சஞ்சிப் பானர்ஜியின் இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டி இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தின் வெளியே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

கடந்த சில தினங்களாக சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றம் பேசுபொருளாக இருந்த நிலையில், தற்போது சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பை அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

You may also like...