Madras high court nov 23 order

[11/23, 12:30] Sekarreporter 1: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலமாக நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசும், மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் தொடர்ந்துள்ள வழக்கு மனுவில், மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள் என்றும், நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர் என மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.

மருத்துவ கவுன்சில் வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவரிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருவதாகவும், கடந்த மூன்று தேர்தல்களில் இதே நடைமுறையை பின்பற்றி தகுதியான வேட்பாளர்களை வீழ்த்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்பதால், தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவை 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[11/23, 17:07] Sekarreporter 1: ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் மனு தாக்கல் செய்துள்ளார்.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19 ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதில்,சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடமாகும், யானைகள் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படுகிறது, இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 150 க்கு மேற்பட்ட யானைகள் இறந்துள்ளது, மேலும் யானைகள் தாக்கியதில் சுமார் 160க்கு மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர் என்றும், இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் டிஸ்கோ நடனம் நடத்தி, சினிமா நடிகர்கள் சிவராத்திரி இரவுகளில் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.அதிக டெசிபல் ஒலியால் அப்பகுதியை மாசுபடுத்துவதாகவும் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுகிறது,எனவே ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களை எதிர்மனுதராக சேர்க்க கோரிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணை வந்தது. வழக்கு விசாரணையை வரும் 28 ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
[11/23, 17:08] Sekarreporter 1: தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

சட்டம் ஒழுங்கு சூழலை காட்டி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி செப்டம்பர் மாதம் 9ம் தேதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமலும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[11/23, 17:31] Sekarreporter 1: சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக காவல்துறையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது எனவும், எந்த ஆதாரமும் இல்லாமல் காவல்துறையினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு காரணமாக காவல்துறை தங்கள் சட்டபூர்வமான கடமையை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போகிறது என்றும், காவல்துறையினருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் அதன் உண்மை தண்மை குறித்து விசாரித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

சட்டம் – ஒழுங்கு பராமரிக்கும் போது ஏராளமான பிரச்னைகளை சந்திக்கும் காவல்துறையினர், தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாக செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்ததுடன், ஏழு காவல்துறையினருக்கு தலா ஐந்து ஆயிரம் ரூபாய் வழக்கு செலவாக வழங்க மனுதாரருக்கு உத்தரவிட்டார்.

35 ஆயிரம் ரூபாயை காவல்துறை ஆணையரிடம் நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் அதனை காவல்துறை ஆணையர் சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
[11/23, 18:48] Sekarreporter 1: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் பதில் மனுவில் குறைகள் இருந்தால் திருத்தம் செய்து தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.
இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இதுவரை கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் ((செப்டம்பர் 5 மற்றும் 25 ஆம் 2016 )) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே அதில் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.

அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால் அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபடும் என சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பார்க்க எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம் விசாரணை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
[11/23, 21:05] Sekarreporter 1: சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவகுறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்கும்படி அருகில் உள்ள நில உரிமையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர்கள் என அனைத்து பிரிவினருக்கும் தனித்தனி மயானங்கள் உள்ள நிலையில், வண்டிப்பாதையில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடலை தோண்டி எடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முத்துசாமி, அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் சாதிய கட்டுக்களை உடைத்தெறிய முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளது.

மதச்சார்பற்ற அரசும், சாதிய ரீதியாக தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றி, மாற்றத்தை அரசு துவங்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
[11/23, 21:11] Sekarreporter 1: சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை…..

சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம்…..

மயானங்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஆலோசனை….

சேலம் மாவட்டம் நவகுறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க பிறப்பிக்கபட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வு உத்தரவு

மதச்சார்பற்ற அரசும், சாதிய ரீதியாக தனித்தனி மயானங்களை வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – நீதிமன்றம்

சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி பாடியுள்ள நிலையில், ஒரு மனிதன், படைத்தவனை நோக்கிய பயணத்தின் போதாவது சமத்துவத்தை துவங்க வேண்டும் – நீதிமன்றம்

மாற்றத்தை அரசு துவங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவை ரத்து – நீதிமன்றம்

You may also like...