Madras high court news sep 8

[9/7, 08:25] Sekarreporter: கைவிடப்பட்ட குவாரியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி பலியான இரு சிறுவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த குவாரிகளுக்கு வேலி அமைப்பதை உறுதி செய்யும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், அணைகட்டு தாலுகாவில் உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தில் குத்தகை காலம் முடிந்து கைவிடப்பட்ட குவாரி நீரில் குளிக்கச் சென்ற ஜிடோன், மோசஸ் ஆகிய இரு சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

அரசின் அஜாக்கிரதையால் தங்கள் குழந்தைகள் இறந்து விட்டதாக கூறி, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சிறுவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி மகாதேவன், குவாரி குத்தகையைப் பெற்ற தனியார் நிறுவனம், வேலி அமைக்காததால், அந்நிறுவனம் செலுத்திய 25 லட்சத்து 31 ஆயிரத்து 250 ரூபாயை மாவட்ட நிர்வாகம் முடக்கி வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, வேலி அமைத்து விபத்துக்களை தடுக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததால், பறிமுதல் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து உயிரிழந்த இரு சிறுவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டார்.

மேலும், குத்தகை காலம் முடிந்த பின் குவாரிகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள், அங்கு வேலி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
[9/7, 12:24] Sekarreporter: குட்கா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை வழங்கியது.

தமிகத்தில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் வழக்கு, சென்னை 8வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சிபிஐ-யை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 2018ஆம் ஆண்டு வழ்க்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

அமலாக்கத் துறை உதவி இயக்குனர் தயாரித்துள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், குட்கா சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்று இருந்தது.

மேலும், ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த வழக்கில் தமிழக காவல்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள், உணவு பாதுகாப்புதுறையை சேர்ந்த இரு அதிகாரிகள், வணிக வரித்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள், கலால் வரித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி என 7 அரசு ஊழியர்களும் இந்த 30 பேரில் அடங்குவர் என்றும், இவர்கள் உள்ளிட்ட பலர் அரசு ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுசதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, 2013 மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639 கோடியே 40 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அந்த பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும் அசையா சொத்துக்களை தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதால் 30 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு இருந்தது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் மூலம் 246 கோடியே 10 லட்ச ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜராகியிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்ட 27 பேருக்கும், 3 நிறுவனங்களுக்கும் அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. கொடுங்கையூரை சேர்ந்த சீனிவாசன் ஆஜராகாததால் பை வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
[9/7, 12:33] Sekarreporter: மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் சீர் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 460 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் மூலம், 45 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[9/7, 12:34] Sekarreporter: பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தமிழக முதல்வரை பாராட்டுகிறோம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, பழனிச்சாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்க கூடாது. எனவே, ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, முந்தைய முதல்வர்கள் படங்கள் அச்சடிக்கப்பட்ட சுமார் 65 லட்சம் புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், தமிழக முதல்வருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவில், \” பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் பொது ஊழியர்களின் படங்கள் அச்சடிப்பது பொது நிதியை வீணடிப்பதாகும். அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கா இதுபோன்று மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தற்போதுள்ள அரசு மாணவர்களுக்கான நோட்டு, புத்தக பைகளில் முதல்வரின் புகைப்படம் அச்சிடப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பொது நிதி இதுபோன்ற விளம்பரங்களுக்காக பேனர்கள் உள்பட பயன்படுத்தக் கூடாது. இதை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்\” என்று உத்தரவிட்டனர்.
[9/7, 20:36] Sekarreporter: நீட் தேர்வு எழுத 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
நீட் தேர்வு எழுத 17 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று விதியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவி ஹரிணி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பிவைத்தார் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்து என்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் மத்திய அரசின் விதிமுறைப்படி 17 வயது பூர்த்தியான மாணவ மாணவிகள் மட்டும் நீட் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் என்று தீர்ப்பு கூறுகிறோம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி 17 வயது பூர்த்தி மட்டும்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம் என்று என்று தீர்ப்பில் கூறி உள்ளார்கள் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண ராமசாமி சில கருத்தை பதிவு செய்திருந்தார் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் கூறியதை ஏற்றுக் கொள்கிறேன் அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் பரிசீலனை செய்து ஒரு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார்
[9/7, 21:12] Sekarreporter: 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீட் தேர்வெழுத குறைந்த பட்ச வயது வரம்பு 17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16 வயதான மாணவி ஒருவர் தன்னை சிபிஎஸ்யி சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுத அனுமதித்து விட்டதாகவும்,
தன்னை நீட் தேர்வெழுதவும் அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவியை நீட் தேர்வெழுத அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்

இதனை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா,கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது

விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
நீட் தேர்வெழுத டிசம்பர் 31 2020ன் படி
17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்று விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை தனி நீதிபதி கணக்கில் கொள்ள மறுத்துவிட்டதாகவும், இதுபோன்ற கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார்

தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மாணவரின் அறிவுத் திறனுக்கும் பக்குவத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும், மருத்துவ படிப்பிற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதிர்ச்சி தேவை எனவும்,
ஒருவரின் அறிவுத்திறனை வைத்து முதிர்ச்சியை கணக்கிட முடியாதெனவும் வாதிட்டார்

மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை
எதிர்க்க வில்லை எனவும், மாணவியின் அறிவுத்திறனை கணக்கில் கொண்டு
விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வயது வரம்பின் காரணமாக நீட் தேர்வெழுத ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்

குறைந்தபட்சம் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவ படிப்பில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் வாதிட்டார்

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒருவருக்கு நல்ல அரசியல் புரிதல் இருக்கிறது என்பதற்காக 18 வயது பூர்த்தி அடையாமல் அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியுமா எனகேள்வி எழுப்பியதோடு, தற்போது சம்பந்தப்பட்ட மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதன் தாக்கம் அவரை மன ரீதியாகப் பாதிக்கும் என தெரிவித்து,
நீட் தேர்வெழுத அனுமதிக்க கோரி 16 வயது மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

You may also like...