Madras high court news

[9/16, 07:24] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக 12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா ஆகியோரை கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு நியமித்தது. அதற்கு பிறகு தற்காலிக அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோரை நியமித்துள்ளது.

இந்நிலையில் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அடிசனல் பி.பி. என்று சொல்லக்கூடிய கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்க்ளாக 12 பேரை நியமித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக எம்.பாபு முத்து மீரான், கஸ்தூரி ரவிச்சந்திரன், ஆர்.முனியபராஜ், ஏ.கோகுலகிருஷ்ணன், ஏ.தாமோதரன், .இ.ராஜ் திலக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மதுரை கிளை வழக்குகளில் ஆஜராக கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக எஸ்.ரவி, இ.அந்தோணி சகாய பிரபாகர், ஆர்.எம்.எஸ்.சேதுராமன், ஆர்.மீனாட்சி சுந்தரம, ஏ.திருவடிகுமார், டி.செந்தில்முமார் ஆகியோரை நியமித்த்தும்.உத்தரவிடப்பட்டுள்ளது.
[9/16, 13:20] Sekarreporter: கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு  இறப்பு சான்றிதழ்கள் வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கொரோனாவால் பலியானார் என சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என ஸ்ரீ ராஜலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது ,தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளதாகவும்,அந்த விதிகளின்  அடிப்படையில், மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31க்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து,  அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்..
[9/16, 13:20] Sekarreporter: மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து, 2016ம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்தது.
இந்த சலுகை, பணி வரன்முறைப்படுத்தப்படாத, தற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

ஆனால், இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், பணி வரன்முறைபடுத்தப்படாத, தற்காலிக பெண் பணியாளர்கள், மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும்,அத்தகைய
தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும் கோரியிருந்தார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
மகப்பேறு விடுப்பு வழங்குவதில்
வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சம் ஏதும் காட்டுவதில்லை எனவும்,வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால் விடுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும்,மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரித்து கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்
[9/16, 14:49] Sekarreporter: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து வாதிட வேண்டியுள்ளதால், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரினார்

மேலும் அவர், இந்த சட்டத்தின் அடிப்படையில் கடந்த கல்வி ஆண்டில் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது அரசு பள்ளி மாணவர்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[9/16, 17:00] Sekarreporter: டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு, சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும், அந்த உத்தரவு நாடுமுழுவத்ற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விதிகளை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கு அக்டோபர் முதல் வாரம் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், மும்மப் உயர்நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என கூறும் நிலையில், விதிகளை பின்பற்றும்படி டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் அமைப்பு உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், புதிய தகவல் தொழில்நுட்ப விதியின் 9 வது பிரிவின் 3வது உட்பிரிவு டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள், அந்த பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[9/16, 17:23] Sekarreporter: ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு,
நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது

அந்த மனுவில்,
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி
செலுத்த தேவையில்லை என அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்ததாகாவும்,
நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், நடிகர் விஜய் தரப்பில் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரி கடந்த 2012 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

நடிகை விஜய் வழக்கு தொடர்ந்த போது,
அவரது வாகனத்துக்கு நுழைவு வரி வசூலிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, தற்காலிகமாக 20 சதவீத வரியை செலுத்த உத்தரவிட்டதாகவும்,
அதன் அடிப்படையில் ஏற்கனவே 20 சதவீதம் செலுத்தி விட்டதாகவும்,
ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள போது மற்றவர்கள் வழக்கை கையாண்டதற்கும் ,
நடிகர் விஜய் வழக்கை கையாண்டதற்கும் நிறைய
வேறுபாடுகள் உள்ளதாகவும்,
தற்போது நுழைவு வரி செலுத்த தயாராக இருப்பதாகவும்,
தெரிவிக்கப்பட்டிருந்தது

தொடர்ந்து, 1 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த
நீதிமன்றம், விஜய்
ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதத்தை செலுத்த உத்தரவிட்டது

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம்,சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஜய் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி செலுத்தப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தரப்பிலும்,நடிகர் விஜய் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்

You may also like...