Madras high court newsதமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[9/4, 12:46] Sekarreporter: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும், கோயில் யானைகள் பராமரிப்பு தொடர்பாகவும் தாக்கல் செய்யபட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வளர்ப்பு யானைகள் தொடர்பாக வழக்கு தொடர்ந்த எல்சா அறக்கட்டளை சார்பில் யானைகள் பிடிக்கபடும் போது, விதிமீறல்கள் நடைபெறுவது குறித்து புகைபட ஆதாரங்களுடன் விளக்கமளிக்கபட்டது.

ஸ்ரீரங்கம் கோயில் யானைகளை பராமரிப்பது தொடர்பாக காவிரி நதி அருகே கோயிலுக்கு சொந்தமான வனம் போன்ற சூழ்நிலை கொண்ட நிலத்தில் பராமரிக்கப்படும் என்றும், விழா காலங்களில் மட்டும் அவற்றை கோயிலுக்கு அழைத்து வரலாம் என்றும் யோசனை கொடுக்கபட்டது.

இந்த யோசனைக்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் வீடியோ பதிவை தயாரித்தும், அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையும், அவை எப்படி பிடிக்கபட்டு வளர்ப்பு யானைகளாக மாற்றபட்டன?? என்பது குறித்தும், கால்நடை மருத்துவரை நேரில் அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள யானைகளின் உடல் நலன் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வனத்துறை முதன்மை பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[9/4, 12:46] Sekarreporter: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராக இரு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமித்து பிறபித்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரை நியமித்து தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி செங்கல்பட்டை சேர்ந்த ராஜாராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டம் 165ம் பிரிவின் படி ஒரு தலைமை வழக்கறிஞரை மட்டுமே நியமிக்க ஆளுனருக்கு அதிகாரம் உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் ஆஜராவதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, நீதிமன்றங்களில் அரசை யார் பிரதிநிதித்துவபட வேண்டும் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் தலைமை வழக்கறிஞரை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[9/4, 15:08] Sekarreporter: நடிகர் அருண் விஜய் நடிக்கும் பார்டர் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி செலவில் தான் தயாரித்த பார்டர் படத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த தலைப்பை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தணிக்கை சான்று பெற்று, படத்தை வெளியிட உள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பார்டர் என்ற தலைப்பை தான் பதிவு செய்துள்ள நிலையில், அதே தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டால் தனக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என்பதால், பார்டர் என்ற தலைப்பில் அருண் விஜய் நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்..

இந்த வழக்கை விசாரித்த சென்னை 6வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
[9/4, 16:58] Sekarreporter: அரசு துறைகளில் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், திருமணம், பூ புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரை குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவன் கல்வி ஆவணங்கள், இருப்பிட சான்று மற்றும் சாதி சான்று, வருமான சான்று பூர்வீக சான்று பெருவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடபடுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்கபட்டுள்ள நிலையில் சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர்கள் கேட்கபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாத கணவனை இழந்த பெண்கள் செயற்கை முறையில் குழந்தைகள் பெற்றும் கொள்ளும் போது தந்தை குறித்த விவரங்கள கோர முடியாது என்றும் நாட்டை தாய்நாடு மற்றும் மொழியை தாய்மொழி, நதியை பெண்களில் பெயரில் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்களில், விண்ணப்பங்கள் சான்றிதழ்களில் தாய் பெயரை குறிப்பிடும் வகையில் உரிய திருத்த கொண்டு வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

You may also like...