Madras high court last 10 days orders

[11/22, 12:54] Sekarreporter 1: தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம்
நனவாகியுள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக ஆர்.என் ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

நிகழ்ச்சியில் சென்னை நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வாயிலாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்,
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள்,மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர் பெருமக்கள்
கலந்து கொண்டனர்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்

தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,
நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கியுள்ளதாகவும்,
தற்போதைக்கு “வணக்கம்” “நன்றி” என்ற இரண்டு வார்த்தையை தெரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தை தொடர்ந்து பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,
ஆன்மீகத்திற்கும் கோயில்களுக்கும் பெயர் பெற்றது தமிழ்நாடு எனவும், கலாச்சார ரீதியாகவயம் வரலாறு ரீதியாகவும் தமிழ்நாடு மேன்மையானது எனவும்
தெரிவித்தார்

தமிழ்நாடு மீது காதல் கொண்டுள்ளதாகவும், தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம்
நனவாகியுள்ளதாக தெரிவித்தார்

வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ரதத்தின் இரு சக்கரங்கள்,நீதி பரிபாலனத்திற்கு இரண்டு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர்,என் பணியில் பயமோ பாரபட்சமோ இருக்காது என உறுதிபட தெரிவித்தார்

பேச்சை விட செயலில் காட்ட விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதி
அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கூறி நன்றி தெரிவித்தார்
[11/22, 13:54] Sekarreporter 1: மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அறம் அறக்கட்டளையின் தலைவரான ஏ. உமர் பாருக் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கொரொனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியை போட அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் நீட்டிப்பு உத்தரவை பின்பற்றி அரசு துறைகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென வற்புறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

கல்வி நிலையங்களை திறந்து நேரடி வகுப்புகளை அரசு அனுமதித்துள்ள போதும், கட்டாய தடுப்பூசி சுற்றறிக்கையால் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாவதாகவும் மனுவில் குறுப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என மத்திய அரசோ, மாநில அரசோ உத்தரவாதம் அளிக்காத நிலையில், தடுப்பூசி செலுத்த கட்டயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என தெரிவித்தனர். சொந்த காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த விருப்பபடாத ஆசிரியர்கள் மற்றவர்களின் நலன்கருதி வீட்டிலேயே இருப்பதுதான் சிறந்தது எனவும் அறிவுறுத்தினர். மேலும் தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வர வேண்டுமென உச்ச நீதிமன்றம் வலியுறுத்ததை சுட்டிக்காட்டி, இந்த வழக்கு பொது நலனுடன் தொடரப்பட்டுள்ளதாக தெரியவில்லை என தெரிவித்தனர்.

தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[11/22, 16:33] Sekarreporter 1: விசாகா கமிட்டிக்கு எதிராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த வழக்கில், கமிட்டி அறிக்கையை சீலிட்ட கவரில்
தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி,  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல வழக்கு பதிவு செய்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை
தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க வேண்டும் என்று கேட்டதில்,ஜஜி அருண் க்கு பதிலாக ஜோஷி நிர்மல்குமார் நியமிக்கப்பட்ட போதும்,சீமா அகர்வால் தொடர்ந்து கமிட்டியில் இருப்பதாகவும், சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலத்தை கூட கமிட்டி தனக்கு வழங்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். பெண் எஸ்.பி யை இடமாற்றம் செய்யக் கோரியும், அது ஏற்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், விசாகா கமிட்டியின் அறிக்கை கூட தனக்கு தரப்படவில்லை எனவும், விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு,
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி மீண்டும் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது,
அப்போது மனுதாரர் ராஜேஸ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
விசாக கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஒரு அதிகாரி எந்தவித விசாரணையுமின்றி தன்னை தூக்கில் போட வேண்டும் என பேசி உள்ளதாகவும், கமிட்டி நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்

அதேபோல வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதால் அதனை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்

இதற்கு தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாகா கமிட்டியின் அறிக்கையை சீலிட்ட கவரில்
தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
[11/22, 22:33] Sekarreporter 1: மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த 21வயது மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவியின் நிலையை தனக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்ட பகுதிவாசி தினேஷ்குமார் என்பவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்

இதுகுறித்து மாணவியின் தாய் கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது,தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனைப் மற்றும் மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மாணவியின் வாக்குமூலத்தை சைதாப்பேட்டை 18 வது பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பதிவு செய்தார்

மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவி என்பதை கணக்கில் கொண்டு சிறப்பு மொழிபெயர்ப்பாளர் யாரையும் பயன்படுத்தாமல் மாஜிஸ்திரேட் நேரடியாக மாணவியிடமே பெறப்பட்ட வாக்குமூலம் குற்றவாளிக்கு சாதகமாக கூடும் என்பதால் மாஜிஸ்திரேட் பதிவு செய்த வாக்குமூலத்தை ரத்து செய்யக்கோரி மாணவியின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மாணவியிடம் ஏற்கனவே மாஜிஸ்திரேட் பெற்ற வாக்குமூலத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் புதிதாக வாக்குமூலத்தை பதிவு செய்ய வேறு ஒரு மாஜிஸ்திரேட்டை நியமிப்பது தொடர்பாக தலைமை குற்றவியல் நடுவரை அணுக காவல்துறைக்கு உத்தரவிட்டார்

பாதிக்கப்பட்ட மாணவி நடந்தவற்றை விவரிக்க ஏதுவாக, வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதி, மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளரோ அல்லது அந்த மாணவியின் ஆசிரியரோ யார் அந்த மாணவிக்கு சௌகரியமாக இருப்பார்களோ அவர்கள் மாணவி வாக்குமூலம் அளிக்கும் போது மாஜிஸ்திரேட்க்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
[11/22, 22:34] Sekarreporter 1: அரசு நிலங்களைத் தனியாருக்கு சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் ஒதுக்கினால், பொதுச் சொத்துகளை அரசு அதிகாரிகள் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வந்தவாசி தாலுகாவில் உள்ள மடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட கிராம நத்தம் நிலம், அந்தப் பகுதி மக்களுக்காக விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்ததாகவும்,
இந்த இடத்தில் 3 சென்ட் நிலத்தில் ரத்தினவேல் என்பவர் வீடு கட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது, விதிமுறைகளுக்கு முரணாக என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில்,
விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டுவதற்கு சட்டவிரோதமாக சிலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து திருவண்ணாமலை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சிறப்பு வட்டாசியர் தாக்கல் செய்த அறிக்கையில், வீடற்ற ஆதி திராவிடர் மக்களுக்கு வீடு வழங்க மடம் கிராமத்தில் இடம் ஒதுக்குவதற்காக 1964இல் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும்
அதன் அடிப்படையில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் ரத்தினவேலுக்கு வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள இடம் விளையாட்டு மைதானத்திற்கான கிராம நத்தம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், வேறு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும்,
கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்தும் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார். அந்த கட்டுமானத்தையாவது அதிகாரிகள் நிறுத்தியிருக்கலாம் என்றும், அதை அனுமதிப்பது
லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும் என எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்டவிரோதமாக அரசு நிலம் மற்றும் விளையாட்டு மைதானத்தை அதிகாரிகள் ஒதுக்கினால், இந்த அதிகாரிகளால் பொதுச் சொத்துகளைப் பராமரிப்பதற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பொது இடத்தை தனியாருக்கு ஒதுக்குவது லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களை தனியாருக்கு விட்டுக்கொடுத்துவிடாமல் அரசு கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும்,
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் தொடர அனுமதிப்பது மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, ஊழல் வழிகளில் தனிநபர்களுக்கு ஆதரவாக இத்தகைய பொது நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு தைரியத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

எனவே, கிராம மக்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இடத்தை ஒதுக்கிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வீட்டைஒரு மாதத்திற்குள் இடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[11/23, 11:30] Sekarreporter 1: கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உரிய ஆதாரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில்,மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் மருத்துவ பொருட்கள்,ஸ்டேஷ்னரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள்,நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம்வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகமாக உற்பத்தி செய்த தாகவும் ,சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்ட தாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பித்துள்ளதாகவும்,இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர்,மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர்,சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
எனவே  இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ஊழல் தொடர்பாக தணிக்கை அறிக்கை உள்ளதாகவும்,தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள்,புகாரில் என்ன அடிப்படை உள்ளது,உரிய ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை என தெரிவித்தனர். இந்த மனுவை திரும்ப பெற்று உரிய ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தனர்.
[11/23, 14:41] Sekarreporter 1: கபடி விளையாட்டில் நான்கு சர்வதேச தங்கப்பதக்கங்களை வென்ற வீராங்கனைக்கு அரசு வேலை கோரிய வழக்கில் பொதுநலன் இல்லை எனக் கூறி தமிழ்நாடு விளையாட்டு வீரர் சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காமென்வெல்த், ஏசியன் கேம்ஸ் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில், இந்தியாவுக்காக விளையாடி தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுத்த கவிதா என்ற வீராங்கனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்திய கபடி அணி கேப்டனாக இருந்த கவிதா ஆயுதப்படை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பணிக்கு வரவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மனுதாரர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு மூலம் பெற்ற பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் வறுமையில் வாடுவதால், பிற மாநிலங்களைப் போல அவருக்கு அரசு வேலை வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் கோரப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை எனக் கூற முடியாது எனவும், தனி நபருக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/23, 17:17] Sekarreporter 1: Trade mark copy right case full order of Application No.3675 of 2021 in C.S.(Comm.Div.) No.14 of 2021 N. ANAND VENKATESH. J. r of https://sekarreporter.com/trade-mark-copy-right-case-full-order-of-application-no-3675-of-2021-in-c-s-comm-div-no-14-of-2021-n-anand-venkatesh-j-r-of/
[11/23, 17:50] Sekarreporter 1: மைனர் பெண்ணை மணமுடித்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட வாலிபருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், 18 வயது பூர்த்தியாகாத பெண்ணை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் பெண்ணின் தாயார் குன்னம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுரேஷ் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதாகி, பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்

சுரேஷ் சிறையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானதால் வேறு ஒருவருக்கு என்பவருக்கு அவரது பெற்றோர் மணமுடித்தனர்.

இந்நிலையில் தனது மனைவி சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பெண்ணுக்கு வேறு ஒருவருடன் மணமாகிவிட்டதால், வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தினர்.

ஆனால் குடும்பத்தினரின் சட்டவிரோத காவலில் இருக்கும் மனைவியை நேரில் ஆஜர்படுத்தி விசாரித்தால், தன்னுடன் வருவதற்கே விருப்பப்படுவார் எனவும், வழக்கை வாபஸ் பெற முடியாது எனவும் சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த பெண், தாயார், கணவன் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகளிடம், தனது சொந்த விருப்பத்தில், பெற்றோரின் சம்மதத்துடன் தான், வேல்முருகனை மணமுடித்ததாக அந்த பெண் தெரிவித்தார். மேலும், சுரேஷ் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும், சுரேஷின் நடத்தை சரியில்லாததால் அவரை விட்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தன் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சுரேஷ் முகநூலில் வெளியிட்டுள்ளதாக தாய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், அந்த பெண்ணை மீட்க கோரிய சுரேசின் வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், சுரேஷுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அந்த தொகையை 8 வாரத்தில் பெண்ணின் தாயாருக்கு கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
[11/23, 17:56] Sekarreporter 1: [11/23, 13:04] Sekarreporter 1: [11/23, 08:03] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1462972556000985091?t=JrOxE1dlRaGbNFAuA8TXoQ&s=08
[11/23, 08:03] Sekarreporter 1: A Farewell to Chief Justice Sanjib Banerjee – Justice P.N.Prakash Judge, Madras High Court ( Published in 2021 (6) CTC JS 5) https://sekarreporter.com/a-farewell-to-chief-justice-sanjib-banerjee-justice-p-n-prakash-judge-madras-high-court-published-in-2021-6-ctc-js-5/
[11/23, 13:50] Sekarreporter 1: SEKAR REPORTER
Customize
Edit Post
Howdy, Sekar Reporter
Log Out
Skip to content
SEKAR REPORTER
UNCATEGORIZED0
A Farewell to Chief Justice Sanjib Banerjee – Justice P.N.Prakash Judge, Madras High Court ( Published in 2021 (6) CTC JS 5)
BY SEKAR REPORTER · NOVEMBER 23, 2021

A Farewell to Chief Justice Sanjib Banerjee
– Justice P.N.Prakash
Judge, Madras High Court
( Published in 2021 (6) CTC JS 5)

The Madras High Court saw the end of Dhoni’s (A.P. Sahi, C.J.) captaincy on 31st December, 2020 and soon, the tempest, Virat Kohli (Sanjib Banerjee,C.J.) took over the reins on 04th January, 2021. It has been a T-20 series ever since.

Before assuming office as the Chief Justice of the Madras High Court, Justice Banerjee, like his illustrious predecessor, had done his homework. He wasted little time in getting into the groove and coming to grips with the nuances of the judicial and administrative works of this chartered High Court. He would be in his chambers by 9.15 a.m. and would normally leave only around 8.00 p.m. He held a firm grip over the administration and no file ever stagnated. He undertook car yatras to all District Courts in the State and obtained a hands-on understanding of the requirements in each district.

While in Salem, a lady wanted to talk to him desperately. However, as usual, the protocol around the Chief Justice prevented her. She ventilated her grievance in Tamil, which was translated to him by someone nearby. The substance of her complaint was that she had given her property in Edappadi on rent to house the Munsif Court. She complained that rents had not been paid for several months. On his return to Chennai, he called me, being one of the Portfolio Judges for the Salem District and requested me to address her grievance. I felt distraught that being one of the Portfolio Judges, I had failed to take note of such an important issue that was causing legitimate concern to an ordinary citizen who had given her property for rent.

It appears that on the judicial side, he did not suffer fools gladly. Orders were either dictated in open Court and if reserved, delivered within a few days thereafter. His working table was always clean and tidy, with no bundles anywhere. Of course, he is temperamental and his off the cuff remarks, on and off the bench, have ruffled feathers. He is a pucca Bengali badhralok, who would call a spade a spade.

During his tenure, he conducted the Administrative Committee meetings every fortnight and the Full Court meetings every month. He showed zero tolerance to corruption and ruthlessly axed corrupt officers in droves.

What really fascinates me is, he appears to have known of his transfer to Meghalaya even in mid September 2021. However, he continued to work nonchalantly as if he was going to complete his term as Chief Justice. In fact, along with his wife he had hosted a gala family lunch for us on the 3rd ultimo. Even on 9th November, 2021, during my meeting with him at around 5.30 p.m., he told me that he has prepared a Vision Plan – 2025 for the State’s judiciary. Under this Plan, there would be no Court in any rented building in the State by 2025. The very same evening, news of his transfer to Meghalaya was made public. However, the following day was business as usual. No lamentation, ruing or sympathy-seeking.

For a Karma Yogi, Meghalaya is as good as Madras.

Seeing inaction in action,
Seeing action in action,
Such a man is wise among men,
A yogi, doing all action.

– Bhagavad Gita – Chapter 4, Verse 18

Good-bye Justice Banerjee, you will remain in our hearts!

Facebook

Twitter

Email

Blogger

Gmail

LinkedIn

WhatsApp

Pinterest

Tumblr

Share
YOU MAY ALSO LIKE…

0
New Govt advts with law minister
JANUARY 7, 2020

Quash Proceedings U/s 12 Domestic Violence Act Not Maintainable: Kerala HC [Read Order]
0
Quash Proceedings U/s 12 Domestic Violence Act Not Maintainable: Kerala HC [Read Order]
SEPTEMBER 21, 2020
LEAVE A REPLY

FOLLOW:
NEXT STORY
Thamilarasan: Veteran Criminal lawyer, senior most member of the Madras bar association, icon of criminal jurisprudence, kumbakonam A.Balaguru was passed away in his home town Kumbakonam. He arrived in the world on 22/09/1932 ” Freinds of many legal Luminaries”
PREVIOUS STORY
Last two days mhc news
Search for:
Search …
RECENT POSTS
நடிகர் சூர்யா மீதான புகார் முழு நகல் pmk private complaint full copy
[11/23, 11:16] K balu: நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில்… 1. அவதூறு பரப்பியது 2. இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது. 3. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது. உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.! Balu Kaliyaperumal
Vinothpandian: 2000 (8) SCC 740 : Basavaraj R patil vs state of karnataka : provisions of sec 313 of CRPC are not meant to nail the accused to his disadvantage but are meant for his benefit [11/20, 10:22] Vinothpandian: 1969 CRI LJ 654 : Bibhuti bhusan das gupta vs state
Durai Arun: காட்சிக்கு எளியேன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, அணுகுவதற்கு எளிதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தரும் ஆற்றல் கொண்ட வழக்கறிஞராகவும் திகழும் அகில இந்திய பார் கவுன்சில் சங்க துணை தலைவர் பிரபாகரன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
Sanjai Gandhi Dmk Advt: வானுயர்ந்த வர்த்தகத்துறை அமைச்சர்- வணங்குகிறேன்.
MORE
RECENT POSTS
நடிகர் சூர்யா மீதான புகார் முழு நகல் pmk private complaint full copy
[11/23, 11:16] K balu: நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில்… 1. அவதூறு பரப்பியது 2. இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது. 3. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது. உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.! Balu Kaliyaperumal
Vinothpandian: 2000 (8) SCC 740 : Basavaraj R patil vs state of karnataka : provisions of sec 313 of CRPC are not meant to nail the accused to his disadvantage but are meant for his benefit [11/20, 10:22] Vinothpandian: 1969 CRI LJ 654 : Bibhuti bhusan das gupta vs state
Durai Arun: காட்சிக்கு எளியேன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, அணுகுவதற்கு எளிதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தரும் ஆற்றல் கொண்ட வழக்கறிஞராகவும் திகழும் அகில இந்திய பார் கவுன்சில் சங்க துணை தலைவர் பிரபாகரன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
Sanjai Gandhi Dmk Advt: வானுயர்ந்த வர்த்தகத்துறை அமைச்சர்- வணங்குகிறேன்.
SEKAR REPORTER © 2021. All Rights Reserved.

Powered by – Designed with the Hueman theme

You can set your social links here from the live customizer.
Customize now »

Call Now Button
CALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version
[11/23, 20:13] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றத்தில் சென்றுள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிரிவு உபச்சார கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2020 டிசம்பர் 31வரை தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்தபோது கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான அணியை பார்ப்பதுபோல இருந்ததாகவும், அதன்பின்னர் வந்த சஞ்ஜிப் பானர்ஜியின் தலைமை விராட் கோலி தலைமையிலான டி.20 போல விறுவிறுப்பாக இருந்த்தாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் தலைமை ஏற்பதற்கு முன்பாக ஏ.பி.சாஹி இங்குள்ள சூழலை கற்க தொடங்கியதுபோலவே, சஞ்ஜிப் பானர்ஜியும் கற்றதாக தெரிவித்துள்ளார். நீதி பரிபாலனம், நிர்வாகம் என இரண்டிலும் திறம்பட செயல்பட்டதாகவும், தினமும் காலை 9:15 மணிக்கு நீதிமன்றம் வரும் பழக்கம் உடையவர் என்றும், இரவு 8 மணிக்கு மேலே வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை நிர்வாகத்தில் திறம்பட செயல்பட்டதால், கோப்புகள் ஏதும் தேக்கம் அடையவில்லை என்றும், அனைத்து மாவட்ட கீழமை நீதிமன்றங்களுக்கும் சாலை மார்க்கமாகவே சென்று, ஒவ்வொரு மாவட்டத்தின் தேவையை புரிந்துகொண்டு சஞ்ஜிப் பானர்ஜி செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நீதிமன்ற கட்டிடத்திற்கு வாடகை வரவில்லை என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியிடம் கட்டிட உரிமையாளரான ஒரு பெண் நேரடியாக புகார் அளித்தபோது, தன் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முக்கிய பிரச்சினை குறித்து கவனம் கொள்ளவில்லையே என தான் வருத்தம் அடைந்ததாக நீதிபதி பி.என்.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணை அறையில் பிறப்பிக்கப்படும் உத்தரவாக இருந்தாலும், தீர்ப்புகள் தள்ளிவைக்கப்பட்டு பிறப்பிக்கப்படும் உத்தரவாக இருந்தாலும் சில நாட்களிலேயே கிடைத்துவிடும் வகையில், தன் பணியிடத்தில் கோப்புகள் தேங்காத வண்ணம் சுத்தமாக வைத்திருப்பார் என நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

வழக்கு விசாரணையின்போதும், மற்ற நேரங்களிலும் சஞ்ஜிப் பானர்ஜி முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் மெல்லிய இறகு போலத்தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஒரு பக்கா பெங்காலி ஜெண்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதியாக இருந்தபோது மாதமொருமுறை அனைத்து நீதிபதிகள் கூட்டத்தையும், மாதமிருமுறை நிர்வாக குழு கூட்டத்தையும் கூட்டத்தவறாதவர் என்பதையும் நீதிபதி பி.என்.பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது தெரிந்தபிறகும், தலைமை நீதிபதி என்ற பொறுப்புடன் தனது பணியை ஆர்வமுடன் தொடர்ந்தது தன்னை மிகவும் கவஎந்ததாக கடிததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டுமென்ற நோக்குடன் விசன் ப்ளான் 2025 என்ற திட்டத்தை வகுத்திருப்பதாக நவம்பர் 9ஆம் தேதி தன்னிடம் கூறிய அதேநாளில், அவரது இடமாற்றம் குறித்த அறிவிப்பு பொதுவெளியில் வந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அடுத்த நாள் பணியாற்றிபோதுகூட எவ்வித சலனமும் இல்லாமல் பணிபுரிந்ததாக நீதிபதி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு கர்மயோகிக்கு, சென்னையை போல மேகாலயாவும் சிறப்பானதாக இருக்கும் என்றும், எங்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பீர்கள் என்றும் நீதிபதி பி.என்.பிரகாஷ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
[11/23, 21:42] Sekarreporter 1: நீலகிரியில் குலதெய்வம் கோயிலுக்கு 7 வயது சிறுவனை பூசாரியாக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நெடுக்காட்டு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான கெத்தை அம்மன் கோவிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்து வந்த நிலையில், கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த கோயிலுக்கு அதே கிராமத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அதிகாரிக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரி கல்வித் துறை அதிகாரி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், கெத்தை அம்மன் கோயிலுக்கு பல நூற்றாண்டுகளாக 5 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களைப் பூசாரியாக நியமித்து வருகின்றனர் என்றும். பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்குகளை உடைக்க முடியாது என்றும்,
சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு இந்த சமய அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
[11/23, 21:43] Sekarreporter 1: மது அருந்தி விட்டு கணவன் தகராறு செய்ததால் மனமுடைந்து, 2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மம்தா என்பவர், கணவர் அடிக்கடி மது அருந்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததால் விரக்தி அடைந்து தனது குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

கடந்த 2015 அக்டோபர் 8 ம் தேதி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது 12 வயது மகள் யாக்‌ஷி, 7 வயது மகன் குர்ஷித் ஆகியோரை பாவாடை நாடாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர், சர்க்கரை நோய்க்கான மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டு கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக்கொண்டு மம்தா தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் உடனடியாக மம்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சைக்கு பின்பு அவர் வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக மம்தாவுக்கு எதிராக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 5 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த், தாய் மம்தா மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார்.
[11/23, 21:43] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தாக்கல் செய்த வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், நாளை பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
[11/24, 10:55] Sekarreporter 1: ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதிய சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஈஷா யோக மையத்தின் நிர்வாகி கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஈஷா யோக மையம் தரப்பில் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு தேவையான ஆங்கிலம், கணிதம், அடிப்படை வேதம் ஆகியவற்றை குருகுல கல்வி மூலம் கற்பிப்பதாகவும், அர்பணிப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தங்கள் மையத்திற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பபட்டதாகவும், அதை மதித்து குறிப்பிட்ட தேதியில் அனைத்து விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் விசாரணைக்கு ஆஜரான நிலையில், தங்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆணையத்தின் தரப்பில் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு, விசாரணையை முறையாக நடத்தாததால் நீதிமன்றத்தை நாடியதாகவும், அதனடிப்படையில் சம்மனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

ஆணையம் தரப்பில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வரும்போது அதில் சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படும்போது, கேள்விக்குறியாகும்போதும் அதன் மீதான புகாரில் விசாரணை மேற்கொள்ளவோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கவும், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும், அதுபோன்று அனுப்பப்படும் சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும் சம்மன் அனுப்பும் அமைப்பிற்கு அதிகாரம் இல்லாதபட்சத்திலேயே வழக்கு தொடரமுடியும் எனவும் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.

ஆணையம் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு சம்மன் அனுப்பியதால் வழக்கு தொடர்ந்ததாக ஈஷா யோக மையத்தின் தரப்பில் வாதிடப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, நியாமான, நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார். சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார்.

அதேசமயம் புதிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் நான்கு வாரங்களில் சம்மன் அனுப்ப ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு உரிய ஆதாரங்களுடன் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க ஈஷா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விளக்கங்களைப் பெற்ற பின் ஈஷா அறக்கட்டளைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[11/24, 13:13] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான இடங்கள் ஒதுக்க கோரிய வழக்கை விசாரணைக்கு எடுகக்க கோரி முறையீடு வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்

வழக்கறிஞர்
ஆர். பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்த சேர்ந்த பெண்களுக்கு மொத்தமாக 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

மீதமுள்ள 168 இடங்களில் கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்

அதன் அடிப்படையில் 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும் ஆனால் கடந்து 2019 ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசிதழில் 89 இடங்கள் பெண்களுக்கு , ஆண்களுக்கு குறைவாக 79 இடங்கள் ஒதுக்கபட்டுள்ளது

இருவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில் அரசிதழில் பெண்களுக்கு தவறாக கூடுதலாக வார்ட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்

இதை சரிசெய்ய கோரி கடந்த 13 ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையருக்கு மனு அளிக்கப்பட்டது ஆனால் மனு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கை விசாரிக்க கோரி வழக்கறிஞர் கௌதம் என்பவர் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்தார் இந்த முறையிட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர்
[11/24, 13:26] Sekarreporter 1: சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்துக்கோயில் அமைந்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டதை ரத்து செய்து, நிலத்தை மீட்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரைபடங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரை சேர்ந்த பி.சசிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பிரதான சாலையில் அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலை பகுதியில், குலதெய்வமாக வழிபடும் புத்துக்கோயில் இருந்ததாகவும், சமீபத்தில் கோவில் இடிக்கப்பட்டு, பி.சி.பாஷ்யம் என்பவருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு புறம்போக்கில் இருந்த 14 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, 24 நாட்களில் பட்டா வாங்கி, கட்டிடமும் கட்டப்பட்டுள்ளதாகவும்,
கடந்த 1995-1996 சென்னை டவுன் சர்வே பதிவில் அரசு புறம்போக்கு நிலம் என்று இருந்த நிலையில், கடந்த 2020 ஜனவரியில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றிடம் கடந்த ஆண்டு நவம்பர் 17ல் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சம்மந்தப்பட்ட நிலத்தின் வரைபடம் மற்றும் மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[11/24, 14:24] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது.

வேதா நிலையம் அரசுடமையாக்கிய சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா வழக்கு..

3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வாரிசுகள் தரப்பில் வாதம்

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என அரசு வாதம்
[11/24, 15:37] Sekarreporter 1: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது*
==
*வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*
==
*நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது – உயர்நீதிமன்றம்*
==
*வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது*
==
*தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை ஆட்சியருக்கு உத்தரவு*
==
*சாவியை மனுதாரரிடம் ஒப்படைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*
==
*வேதா நிலையம், மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு?உயர்நீதிமன்றம்*
==
*கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம்*
==
*ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை வசூலிக்க வருமான வரித்துறைக்கு அனுமதி*
==
*இழப்பீடாக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட ரூ.67.9 கோடி அரசுக்கு திருப்பி அளிக்க உத்தரவு*
[11/24, 15:46] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லாமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது.

அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தபட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷேசசாயி, வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது எனக்கூறி அதற்காக பிறபிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். மேலும் 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்தார். போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ. 67,90,52,033 இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ரூ. 36,87,23,462யை வசூலிக்க வருமான வரித்துறை தனியாக தொடங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை வாசித்த பின்னர், ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும், கடற்கரையில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது, வேதா நிலையத்தையும் மக்கள் பணத்தில் ஏன் மற்றொரு நினைவிடம் அமைக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார்.
[11/25, 12:08] Sekarreporter 1: தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயார்….

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால் சாத்தியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் முறையீடு

கோயம்பேட்டில் கொரோனாவால் மூடப்பட்ட மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். எனவே தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என அகஸ்ட் மாதம் தொடர்ந்த வழக்கில் இன்று முறையீடு
[11/25, 12:36] Sekarreporter 1: லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சார் பதிவாளர் மீதான துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். 

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, சம்பந்தப்பட்ட பதிவாளர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதை எதிர்த்து, சார்பதிவாளர் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
சார்பதிவாளர் கோபாலகிருஷ்ணன் மீதான துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[11/25, 12:36] Sekarreporter 1: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மைதானத்தை திறந்தால்
ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி மொத்த வியாபாரி சங்கம் முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக தக்காளி விலை அதிகரித்திருக்கிறது.ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு தந்தை பெரியார் மொத்த தக்காளி வியாபாரிகள் சங்கம் சார்பில், வழக்கறிஞர் சிவா என்பவர் ஆஜராகி முறையீடு செய்தார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ஆண்டு மே 5-ந் தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு, பின்னர் செப்டம்பர் 28-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்ட் என்ற மைதானம் உள்ளது என்றும் இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை என்றும், இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றிவரப்பட்ட பதினொரு லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டனர். இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்..
இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும். கிலோ 40 முதல் 50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். எனவே தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற நிலுவையில் உள்ள வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி சுரேஷ்குமார் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
[11/25, 12:37] Sekarreporter 1: திருத்தணி,திருச்சி மலைக்கோயில் உள்ளிட்ட ஐந்து மலைக்கோயில்களில் கேபிள் ரோப்கார் வசதி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில் ஏற்கனவே பக்தர்களின் வசதிக்காக பழனி முருகன் கோவிலில் கேபிள் ரோப்கார் வசதி உள்ளதாகவும் இதேபோல் தமிழகத்தில் உள்ள முப்பத்தி மூன்று மலைக்கோயில்களில் கேபிள் ரோப் கார் வசதி செய்ய தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம் ஏற்கனவே ஐந்து மலை கோவில்களில் கேபிள் ரோப்கார் வசதி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறிப்பாக திருத்தணி மலை திருச்செங்கோடு மலை ,திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை,திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஐந்து மலை கோவில்களில் இந்த வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மற்ற கோவில்கள் எல்லாம் சிறிய மலைகளாக உள்ளதால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார். அந்த மலைகள் கோயில்களில் துறை சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டினார். மேலும் சோளிங்கர் மற்றும் அய்யன் மலை ஆகிய இரண்டு கோயில்களில் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.
[11/25, 12:57] Sekarreporter 1: மாணவிகளுக்குபாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர்பபாவிற்கு சிறப்பு சிகிச்சை அவசியம் என அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து சிறைத்துறை பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா ஜூன் 26ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கண்பார்வை, இதயநோய், நீரழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட தன்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிடக் கோரி சிவசங்கர் பாபா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத்துறை தரப்பில், சிவசங்கர் பாபாவுக்கு அவ்வப்போது உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், போதிய மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதாகவும், சிறப்பு சிகிச்சை தேவைப்பட்டால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் வலியுறுத்தப்பட்டது.

சிவசங்கர் பாபா தரப்பில், கண் தொடர்பான பிரச்சினைகளும், நெஞ்சுவலியும் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும், ஒரு கண்ணில் முழுமையாக பார்வை இழந்துள்ளதாகவும், தனியார் மருத்துவமனையின் சிகிச்சை அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நீதிபதி, அரசு மருத்துவமனையில் சில வசதிகள் இல்லை என கருதினால் அவர்களே வேறு இடத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியதுடன், சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென அரசு மருத்துவர் பரிந்துரைத்தால், அதை சிறைத்துறை பரிசீலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
[11/25, 13:54] Sekarreporter 1: மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாச்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க முடியாது என கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1997 ஆண்டு அரசாணைப்படி
மதமாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரேசாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் – மனைவிக்கு கலப்பு மண சான்று பெற தகுதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்கினால், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
[11/25, 15:02] Sekarreporter 1: ஏரியில் சட்டவிரோதமாக வண்டல் மண் அள்ளப்படுவதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் அகரம் கிராமத்தில் உள்ள ஏரி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளதாகவும், மழை காலத்தில் இந்த ஏரிக்கு அதிக தண்ணீர் வரத்து ஏற்படும் என்பதால் ஏரிக்கரைகளில் வண்டல்மண் அதிகளவில் சேர்ந்துவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதை அகற்றுவதற்காக தனிநபர் ஒருவருக்கு நீர்வளத் துறை செயலாளர் அனுமதி அளித்து கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகரம் ஏரியில் கரையோரத்தில் உள்ள வண்டல் மண்ணை விதிமுறைக்கு முரணாக அதிக அளவில் எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏரியின் கரை பலவீனமாகும் நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வரர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.
[11/25, 18:17] Sekarreporter 1: வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டி வீட்டை சோதனை நடத்தினர் அப்போது அவரிடம் இருந்து டைரி பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்தினர் இந்த விசாரணையை தொடர்ந்து கடந்த 2017 2018 ஆம் ஆண்டுக்கு முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ரூ 82 கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 455 வருமான வரி ஏன் வரி செலுத்த வில்லை என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது இந்த இந்த நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி ஓ பன்னீர்செல்வம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி முன் ஈஸ்வர் பாண்டே நீதிபதி ஆதிகேசவலு அவர் விசாரித்து இந்த வழக்கில் எந்த தடையும் விதி்க்க முடியாது என உத்தரவிட்டு, ,,வருமான வரித்துறை இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வருமான வரிதுறை உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட வேண்டும் என்று உத்தரவிட்டனர்
[11/25, 18:31] Sekarreporter 1: முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், 82 கோடியே 32 லட்சம் ரூபாய் வரி செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு வருமானவரித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

2015 – 16 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாயும், 2017 – 18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசில் மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்தததோடு, வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமானவரித்துறை உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
[11/26, 11:56] Sekarreporter 1: நீர் பயன்படுத்துவோர் சங்கம், நீர் பகிர்மான குழு மற்றும் திட்டக்குழுவின் தேர்த்ல் 2022 ஏப்ரல் முதல்வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பொள்ளாச்சி தாலுகா மகாலிங்கபுரத்தை சேர்ந்த கே.பரமசிவம் தாக்கல் செய்துள்ள மனுவில்

தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை சட்டம் கடந்த 2001ல் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு சமமான முறையில் பாசன வசதி செய்து விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் விவசாய அமைப்புகள் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைகளில் தொடரப்பட்டன. நீரை பயன்படுத்தும் இந்த சங்கங்களுக்கு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த சங்கங்கள் நீர் பகிர்மான குழுவை தேர்வு செய்யும். இந்த குழு திட்ட குழுவின் தலைவரை தேர்வு செய்யும்.
நீரை பயன்படுத்துவோர் சங்கம், நீர் பகிர்மான குழு மற்றும் திட்ட குழுவின் தலைவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இந்நிலையில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் முதல் தேர்தல் 2004ல் நடைபெற்றது. அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகு 2009ல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் 2009ல் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் தலைவர்களின் பதவிக்காலம் ஐந்தரை ஆண்டுகளாக அதிகரித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் 2014 ஜூன் மாதம் முடிந்துவிட்டது. இதையடுத்து, டிசம்பர் 2014ல் இந்த தேர்தலை அரசு நடத்த வேண்டும்.
ஆனால், அரசு இந்த தேர்தலை நடத்த எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. இது தொடர்பாக அரசுக்கு 2015 ஜனவரி 2ம் தேதி கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த சிறப்பு ஆணையரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தேர்தலை அரசு நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாிகள் நீர்பாசன மேலாண்மை சட்டத்தின்படி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், தண்ணீர் பகிர்மான குழு மற்றும் திட்டக் குழுவுக்கான தேர்தலை நடத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராகி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கே.ராமமூர்த்தியின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள் 1566 உள்ளன. 161 ர் பகிர்மான குழுக்களும் 9 திட்டக் குழுக்களும் உள்ளன. இவற்றிற்கான தேர்தலை நடத்த ரூ.2 கோடியே 90 லட்சத்தை ஒதுக்கி கடந்த 2019ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 25 மாவட்டங்களில் இந்த தேர்தலை நடத்த மாவட்ட கலெக்டர்கள் முழு அளவில் செயல்பட்டு வருகிறார்கள். தேர்தலுகான அறிவிப்பை ஜனவரி 2022க்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாள் தொடர்பான பட்டியல் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்
[11/26, 12:16] Sekarreporter 1: சென்னை கொளத்தூரில் துவங்க உள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 18ம் தேதி நேர்முக தேர்வு நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து, அக்டோபர் 13ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து திருச்சியைச் சேர்ந்த முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், காலியிடங்களை அறிவிக்காமல், விண்ணப்பங்களை வரவேற்காமல், இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் சட்டவிரோதமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், கடந்த அக்டோபர் 18ம் தேதி நேர்முகத் தேர்வு முடிந்து, அக்டோபர் 22ம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், காலதாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/26, 15:12] Sekarreporter 1: விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா?????

சி.எம்.டி.ஏ., மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி தக்காளி விற்பனையை மேற்கொள்ள தாற்காலிகமாக அனுமதிக்கலாம். அதற்கு கட்டணத்தை வசூலிக்கலாம் – நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் வழக்கு

லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளது. மைதானத்தில் வாகனங்களை நிறுத்தியதால் மூடப்பட்டது – சி.எம்.டி.ஏ.
[11/26, 15:13] Sekarreporter 1: விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ., மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது,
மனுதாரர் தரப்பில்,
1200 சதுர அடி 2,400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளதாகவும்,
சிறிய கடைதாரர்கள் கிரவுண்டை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது

சி.எம்.டி.ஏ. தரப்பில் லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளதாகவும், அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானது தான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து சரக்கை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்

தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்தி கொள்ள அனுமதிப்பது குறித்து
சி.எம்.டி.ஏ., கோயம்பேடு மார்கெட் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு
வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தள்ளிவைத்தார்.
[11/26, 15:41] Sekarreporter 1: ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு மாற்றாக, கொடைக்கானலில் தேசிய அளவிலான மையத்தை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் அமைக்க அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்து கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஏற்காட்டிற்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே நடைபெற்று வந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (லேம்ப் – LAMP)கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல கொடைக்கானலில் மையம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குளும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,
சேலம் மாவட்டத்தில் மையத்தை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர்,திடீரென கடந்த ஜூலை மாதம் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

முதலில் சேலத்தில் கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்டுவிட்டு, அதன் பின்னர் தான் கொடைக்கானலில் அமைக்கவுள்ள புதிய மையத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டதாகவும், கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக கூறும் நிலையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களே இல்லை எனவும் வாதிட்டார்

நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் கூட சேலத்தில் நடைபெற்று கொண்டிருந்த கட்டுமானங்கள் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்,தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை ஆனால்,அதற்காக மாநில அளவிலான பயிற்சி மையத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய அளவிலான மையத்தை 20 ஏக்கர் பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதென கொள்கை முடிவெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து,தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்ததாக கூறப்படும் ஆணவங்கள் மற்றும் அரசாணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[11/26, 16:54] Sekarreporter 1: ராணுவத்துக்கு சொந்தமான சொத்துக்களை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதற்கு பதில், பாதுகாப்புத் துறைக்கு பயனளிக்கும் வகையில் அவற்றை ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை ரத்தன் பஜார், ஃப்ரேசர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார் ஆகிய இடங்களில் ராணுவத்துக்கு சொந்தமான நிலங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டன. இந்த நிலத்தில் முன்னாள் ராணுவ மேஜர் உள்ளிட்ட மூவருக்கு பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வழங்கியது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.

இந்த நிலங்களுக்கான வாடகை பாக்கி 18 கோடியே 56 லட்சம் ரூபாய் செலுத்தாததால், நிலத்தை காலி செய்யும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ராணுவ சொத்து நிர்வாக அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்தியன் ஆயில் கார்ப்ப்ரேஷன் நிறுவனத்துக்கும், பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போது, இந்த வழக்கை தொடர மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், உரிய காலத்தில் வாடகை பாக்கியை செலுத்தாத இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் எந்த நிவாரணம் கோர உரிமையில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ராணுவத்துக்கு சொந்தமான சொத்துக்களை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, வாடகையை வசூலிக்க இயலாமல் உள்ள பாதுகாப்பு துறை, அந்த சொத்துக்களை ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

அதேபோல குறிப்பிட்ட அந்த பங்க்களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்வதை உடனடியாக நிறுத்தும்படியும், இரண்டு மாதங்களில் அந்த நிலங்களை காலி செய்து ராணுவத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, வாடகை பாக்கியை ராணுவ அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி 12 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அத்தொகையை வசூலிக்க ராணுவம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[11/26, 17:58] Sekarreporter 1: இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

அந்த மனுவில், படத்தை தயாரித்துள்ள
கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை,
ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில்,தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[11/26, 18:00] Sekarreporter 1: கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால்
மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் அதன் செயலாளர் வாசுகி தாக்கல் செய்துள்ள மனுவில்
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் கிராமப்புறங்களை சேர்ந்த பல ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. வசதி படைத்தவர்களின் குழந்தைகள் லேப்டாப், செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கற்று வந்தனர். நடுத்தர மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியும் என்ற போதிலும் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் வேறு இடங்களுக்கு நகர்ந்ததால் அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களின் குழந்தைகளும் கிடைத்த வேலைகளுக்கு செல்லத் தொடங்கினர்.

தொடர்ந்து பள்ளிக்கு சென்றால் இடை நிற்றல் என்ற பேச்சு எழாது. ஆனால், வசிப்பிட மாற்றம், வாழ்வாதாரம் ஆகிய காரணங்களால் ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி இடைநிற்றல் அதிகரித்துவிட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அந்த குழந்தைகளால் மீண்டும் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கல்வி ஆண்டை ‘பூஜ்ய’ கல்வி ஆண்டு என்று அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்காக அவர்கள் வசிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கான ஏற்பாடுகளை செய்து அந்த மாணவர்களின் படிப்பை கண்காணிக்க தகுதியான நபர்களை நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்றம் அப்போதைக்கப்போது பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்களின் படிப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்துள்ளது என்று தெரிவித்தனர்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தற்போது அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. வழக்க முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
[11/26, 18:24] Sekarreporter 1: கோவில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாதமல் இருப்பது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை 1960ல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன், அந்த சொத்துக்கான வாடகையை 17,200 ரூபாயாக உயர்த்தி 2016ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 1960ல் வழங்கப்பட்ட குத்தகை 5 ஆண்டுகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மனுதாரர் ஆக்கிரமிப்பாளர் தான் என்பதால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மூன்று மாதங்களில் மனுதாரரை கோவில் நிலத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு மட்டுமல்லாமல், அறநிலைய தொடர்புடைய பல்வேறு வழக்குகளிலும், கோவில் சொத்துக்களின் வாடகை முறையாக வசூலிப்பதில்லை என்றும், அதிகாரிகளும், அறங்காவலர்களும் கைகோர்த்து செயல்பட்டு, சட்டவிரோத ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, கோவில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புகளுடன் பல உன்னத ஆத்மாக்கள், தங்கள் சம்பாத்தியத்தை மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக எழுதிவைத்துள்ளதாகவும், அவர்களின் விருப்பத்தை கவுரவப்படுத்தாமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என்றும், அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்துள்ளார்.
[11/27, 11:04] Sekarreporter 1: வேதா இல்லத்தின் சாவியை கொடுங்கள்…
சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தீபக்,தீபா மனு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கியது  செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.மேலும்,
3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் ,சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சேஷசாயி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வேதனையை தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சீன அதிபர் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து
மனு அளிக்கப்பட்டது. இந்த மனு குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
[11/27, 12:12] Sekarreporter 1: தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்படுவதை எதிர்த்தும், நிரந்தர அங்கீகாரம் வழங்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நிரந்தர அங்கீகாரம் வழங்க வகை செய்யும் 1994ம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், நவம்பர் 12ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப் பிரிவுகளிலும், மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான விதிகளிலும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் என்பது நிரந்தரமானது என்றும், சட்ட விதிகளின் படி அதை திரும்பப் பெற முடியுமே தவிர, காலக்கெடு நிர்ணயித்து கட்டுப்பாடு விதிப்பது சட்டவிரோதமானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டத்தில் சொல்லப்படாத அதிகாரத்தை அதிகாரிகள் செயல்படுத்த முடியாது என்றும், தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிரந்தரமாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்குவது நிர்வாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாணைக்கு தடைவிதிக்கவேண்டும் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என, தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி துறை இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், தொடக்க கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[11/27, 13:38] Sekarreporter 1: தத்து கொடுக்கப்பட்ட சிறுமியை திரும்ப கேட்டு பெற்ற தாய் தொடர்ந்த வழக்கில், வளர்ப்பு தாயிடமே சிறுமியை ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த சத்யா, சிவக்குமார் இருவரும் உடன் பிறந்தவர்கள். இவர்களில் சத்யா என்பவர் ரமேஷ் என்பவரையும், சிவக்குமார் சரண்யா என்பவரையும் திருமணம் செய்து கொண்டனர்.

சத்யா தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால், தனது மூன்றரை மாத பெண் குழந்தையை, சிவகுமார் கடந்த 2012ம் ஆண்டு தத்து கொடுத்தார்.

இதற்கிடையில் சத்யாவின் கணவர் ரமேஷ் புற்று நோயால் கடந்த 2019ம் ஆண்டு இறந்த நிலையில், தத்து கொடுத்த குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று பெற்ற தாய் சரண்யா, அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போன்று சத்யாவும் புகார் அளித்தார்.

இந்த பிரச்னை காரணமாக சிறுமி காப்பகத்தில் காவல்துறையினர் சேர்ந்தனர்.

இந்த நிலையில் குழந்தையை ஒப்படைக்க கோரி பெற்ற தாய் சரண்யாவும், வளர்ப்பு தாய் சத்யாவும் தனித்தனியே ஆட்கொண்ர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வு, சிறுமியிடம் விசாரித்த போது, இருவரும் வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வளர்ப்பு தாயிடமே குழந்தை வளர்ந்து தற்போது சிறுமி ஆகிவிட்டதால் வளர்ப்புத்தாய் வளர்க்க வேண்டும் என்று கூறி, சிறுமியை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பெற்ற தாயை வாரம் ஒருமுறை சிறுமியை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[11/27, 20:07] Sekarreporter 1: திருமணம் மற்றும் விவாகரத்து பெற்ற விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த போரா முஸ்லீம் தம்பதியருக்கு குடும்ப நல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியது. இதையடுத்து, மனைவிக்கு மாதாந்திர பராமரிப்பு செலவாக 37 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என ஜார்ஜ்டவுண் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, பராமரிப்பு தொகையை அதிகரிக்க கோரி மனைவி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, போரா முஸ்லீம் ஜமாத் விதிகளின்படி, விவாகரத்தான தகவலை திருமண பதிவேட்டில் கணவன்தான் பதிவு செய்ய முடியும். மனைவிக்கு அந்த உரிமை கிடையாது என்று மனைவி தரப்பில் தொிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போரா முஸ்லீம் மத பழக்க வழக்கத்தை பற்றி எந்த ஒரு கருத்தும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, திருமணம் மற்றும் விவாகரத்து விவரங்களை ஜமாத் பதிவேட்டில் பதிவு செய்யும் உரிமையை பெண் என்பதற்காக மறுக்கக்கூடாது எனக் கூறி, மனைவிக்கு வழங்கப்பட்ட விவாகரத்து குறித்து போரா முஸ்லீம் ஜமாத் பதிவேடேட்டில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
[11/28, 19:01] Sekarreporter 1: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக உள்துறை சார்பில் அதன் இணைச் செயலாளர் பத்மநாபன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

You may also like...