Madras high court january 25 th orders ஜனவரி 25ம் தேதி ஐகோர்ட் உத்தரவுகள்

  1. [1/25, 10:55] Sekarreporter 1: நீட் தேர்வு ஓ.எம்.ஆர்.  விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தேசிய தேர்வு முகமை தொடர்ந்த வழக்கை தனி நீதிபதியே விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் திருத்தப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் 5 ம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது.

    அப்போது, 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன்  மதிப்பெண்களை 248 ஆக  குறைத்து மற்றொரு ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாகக் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற  மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    594 மதிப்பெண் என்ற புகைப்பட ஆதாரங்கள் மாணவன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த  பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை(Special investigation team) அமைத்து விசாரிக்க கோரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சைபர் குற்ற வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    தனி நீதிபதியின் எதிர்த்து தேசிய தேர்வு முகமை, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மதிப்பெண் குளறுபடி குறித்து மத்திய அரசே விசாரித்துவரும் நிலையில், சிபிசிஐடி விசாரணை தேவையற்றது எனவும்,  அதனால் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதி அமர்வு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது இந்த நிலையில்,
    வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் பரேஷ்உபாத்யா, சத்தி குமார் குரூப் அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை தனி நீதிபதியே பிரதான மனு மீது மீண்டும் விசாரித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்..
    ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்க விட்ட நிலையில் தனி நீதிபதி விசாரணை முடியும் வரை தடை தொடரும், மனுதார்ர மாணவன், தொடர்ந்து படிக்கலாம் ,தொடர்ந்து படிப்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர் .
    [1/25, 11:07] Sekarreporter 1: நீட் தேர்வு ஓ.எம்.ஆர்.  விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்க்கும் தேசிய தேர்வு முகமை கோரிக்கையை தனி நீதிபதியே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், சத்திகுமார் அமர்வு

    ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்க விட்ட நிலையில் தனி நீதிபதி விசாரணை முடியும் வரை தடை தொடரும் – நீதிபதிகள்

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தடையை நீக்குவது குறித்து தனி நீதிபதி முடிவெடுக்கவும் உத்தரவு

    நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு

    அதிக மதிப்பெண் எடுத்த திருத்தபட்ட விடைத்தாளை மாற்றி, குறைந்த மதிப்பெண் விடைத்தாள் பதிவேற்றபட்டதாக கோவை மாணவன் மனோஜ் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது
    [1/25, 11:17] Sekarreporter 1: இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கில், நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    தேசிய கல்விக் கொள்கை இந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவில்லை என்றும், தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அன்னிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கும்போது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல்சட்டத்துக்கு விரோதமானது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை மாநில அரசு முடிவெடுக்கலாம் என்ற போதும், இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது எனவும், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றுவதால், கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த தமிழக தலைமை வழக்கறிஞர், இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    [1/25, 11:48] Sekarreporter 1: டில்லியில் நாளை நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாட்டின் 73 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தலைநகர் டில்லி ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பில், முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

    இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் விண்ணப்பித்த நிலையில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் நாளை நடக்க உள்ள அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும், நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு, எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், கடைசி நேரத்த்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    [1/25, 13:14] Sekarreporter 1: உள்ளாட்சி தேர்தல் வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு கூறப்பட்டு வருகிறது
    [1/25, 13:42] Sekarreporter 1: தேர்தல் அறிவிப்பாணை தயாராக உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் – மாநில தேர்தல் ஆணையம் தகவல்

    தேர்தல் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

    மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 27ஆம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் – நீதிபதிகள்

    அரசியல்சாசன சட்ட கடமையை மாநில தேர்தல் ஆணையம் செய்ய தவறியதால் தான், தேர்தலை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது – நீதிபதிகள்

    திரையரங்குகள், வணிக வளாகங்கள் இயங்கும்போது, உரிய கட்டுப்பாடுகளுடன் தேர்தலை மட்டும் ஏன் நடத்தக்கூடாது – நீதிபதிகள்

    தேர்தல் பணியில் ஈடுபடுவோர், வேட்பாளர், வாக்காளர், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். பொதுக்கூட்டம் நடத்தவில்லை என்றாலும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாலும் கொரோனா தொற்று பரவும். ரிஸ்க் எடுப்பதைவிட தள்ளிவைப்பது நல்லது – மனுதாரர்கள்

    ஒமைக்ரான் பாதிப்பு , டெல்டா பாதிப்பு ஆகியவையும் உள்ளது. பள்ளி கல்லூரிகள் நீதிமன்றங்கள் மூடியிருப்பதே தேர்தலை தள்ளிவைப்பதற்கான சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். நேற்று கூட 30 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது – மனுதாரர்கள்

    கொரோனா பரவல் காரணமாகத்தான் குடியரசு தினத்தன்று நடத்தபட வேண்டிய கிராம சபை கூட்டங்களை தமிழக அரசே ரத்து செய்துள்ளது – மனுதாரர்கள்

    பரிசோதனைக்கு செல்லத் தேவையில்லை என மருத்துவர்கள் அறிவுறித்தவும் சில காரணங்கள் உள்ளன – நீதிபதிகள்

    மூன்று பேருடன் மட்டுமே வேட்பாளர் வாக்கு சேகரிக்க வீடுவீடாக செல்ல வேண்டுமென ஏற்கனவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளன – நீதிபதிகள்

    பொறுப்புத் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்
    [1/25, 14:31] Sekarreporter 1: நடிகர் விஜய் குறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கம் – சென்னை உயர் நீதிமன்றம்

    தனி நீதிபதி கருத்துக்களை நீக்கக்கோரும் நடிகர் விஜய் மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு

    நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு

    ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம் – விஜய்

    வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்த்வதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற் கருத்துக்கள் – விஜய்

    இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது. குற்றவாளி போல காட்டியுள்ளது – நடிகர் விஜய்
    [1/25, 14:58] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது..- சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது- நீதிபதிகள்.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அனுக வேண்டும்- நீதிபதிகள்

    தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அனுகவில்லை- நீதிபதிகள்

    கொரோனா தடுப்பு விதிமுறையாக பின்பற்றி தேர்தல் நடத்த வேண்டும்..

    வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்- நீதிமன்றம்.

    வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்து இருப்போம்; விதிமுறைகள் முறையாக பின்பற்ற படுகிறதா என்பதை கண்காணிப்போம்.

    விதிமீறல்கள் இருந்தால் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்- நீதிபதிகள்.
    [1/25, 15:14] Sekarreporter 1: *தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு*

    நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள் முடித்துவைப்பு

    அறிவிப்பு வெளியிட உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதற்கு முரணாக உத்தரவிட முடியாது

    *கொரோனா பேரிடர் என்பது ஒரு காரணமாக உச்ச நீதிமன்றம் முன்பு முன்வைக்கப்படவில்லை.*

    மனுதாரர்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்ற கேள்வியும்.எழும்புகிறது.

    உச்ச நீதிமன்றத்தில் கால நீட்டிப்புக்கோரி மனுத்தாக்கல் ஏதும் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யபடாத நிலையில், அங்கு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்ற வேண்டும்.

    தேர்தலை நடத்துவதில் உள்ள தாமதத்தை கருத்தில்கொண்டுதான் உச்ச நீதிமன்றம் கெடு நிர்ணயித்துள்ளது.

    மூன்று பேருக்கு மேல் வேட்பாளருடன் வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    *கொரோனா பரவலை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டிற்குரியது.*

    *கொரோனா தடுப்பிற்க்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்க அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும்.*

    கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றபடுகிறதா அல்லது மீறப்படுகிறதா என்பது குறித்து நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரலாம்.

    தள்ளிவைக்க உத்தரவிட முடியாது.

    வழக்குகள் முடித்துவைப்பு.

    தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பத்து நாட்கள் கழித்து வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்.
    [1/25, 15:36] Sekarreporter 1: இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கின் உத்தரவில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது.

    இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு,
    நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்

    அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல் முறையிட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, நிலுவை வரித்தொகையான 32 லட்சத்தை 30 ஆயிரத்தை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தியாதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார். நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். நடிகர்கள் நுழைவு வரி செலுத்தவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.

    சினிமாத் துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்ததாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு என்றும், நீதிபதியின் கருத்துக்கள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

    நீதிபதிகள் கடும் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், சில வழக்குகளில் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும், அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம் என்றும், ஆனால் இந்த வழக்கில் தேவையில்லை என வாதிடப்பட்டது. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது குற்றவாளி போல காட்டியுள்ளது என நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கபட்னது.

    இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

    இந்த வழக்கில் சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக், இறக்குமதி கார் வழக்கில், நடிகர் விஜய் குறுத்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்குவதாக தீர்ப்பளித்தனர். மேலும் நடிகர் விஜய் மேல் முறையீட்டு மனுவை ஏற்பதாகவும் தீர்ப்பளித்தனர்
    [1/25, 15:37] Sekarreporter 1: டில்லியில் நாளை நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், நாட்டின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தலைநகர் டில்லி ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பில், முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடத்தப்படுவதாக கூறியுள்ளார்.

    இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் விண்ணப்பித்த நிலையில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் நாளை நடக்க உள்ள அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும், நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு, எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், கடைசி நேரத்த்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    [1/25, 15:59] Sekarreporter 1: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி என அறிக்கை வருகிறது எனவும், கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக வாதிட்டனர்.

    தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது நடத்த அவசரமில்லை எனவும் கொரோனா மூன்றாவது அலை தணியும் வரை காத்திருக்கலாம். திருமணம், இறுதிச்சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும் குடியரசு தினத்தை ஒட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

    பொது தேர்தலை பொறுத்தவரை வாக்களிக்க இயலாத மாற்றுத் திறனாளிகள், முதியோர், கொரோனா பாதித்தவர்களுக்கு தேர்தலில் பங்களிக்க வகை செயப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலில் இதுபோன்ற விதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.

    விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

    அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

    2 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர் மூன்று பேருக்கு மேல் செல்லக் கூடாது என கொரோனா தடுப்பு வெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

    மாநிலதேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் அறிவிக்கப்படவேண்டும் எனவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும். மாநில அரசுடன் கலந்து பேசி தான் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நான்கு மாதங்களில் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி, மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கும்படி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், அடிப்படை உரிமை, சட்ட உரிமைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றாலும், நீதித்துறை ஒழுங்குபடி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என விளக்கம் அளித்தனர்.

    மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேர்தலை தள்ளிவைக்க கோரலாம் என்றும், அதற்கு எந்த தடையும் இல்லை என்றும், மாநில தேர்தல் ஆணையம் தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    உச்ச நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட எவர் வேண்டுமானாலும் அங்கே அணுகலாம் என்றும், ஏற்கனவே கொரோனா தடுப்பு விதிகளை கடந்த டிசம்பர் 10ஆம் தேதியே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க மாநில தேர்தல் ஆணையம் கோரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

    மனுதாரர்கள் உச்ச நீதிமன்றம் அணுகவில்லை என்பதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தேர்தல் நடத்துவதில் தாமதத்தை கருத்தில் கொண்டு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்.

    மனுதாரர்கள் வாதத்தை ஏற்று தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பிரச்சாரத்துக்கு கட்டுப்பாடுகள், தனிமனித விலகல் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவற்றை முறையாக பின்பற்ற அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.

    வேட்பாளர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளதை கருத்தில் கொண்டு செயல்படவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    தேர்தலை தள்ளிவைக்கக் கூடாது என்ற மாநில அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

    விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி வழக்குகளை முடித்துவைத்தனர்.

    பொதுமக்கள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை. அதை தொடரக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

    தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

    தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களுக்கு பின் வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
    [1/25, 16:18] Sekarreporter 1: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் போதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக செயலாளர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குயினத்தவர்களுக்குபிட ஒதுக்கீடு வழங்கி ஜனவரி 17ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகள், பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினத்தவர்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதேபோல, 138 நகராட்சிகளில் 20 நகராட்சி தலைவர் பதவிகள் மட்டும் பட்சியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    490 பேரூராட்சிகளில் 85 பேரூராட்சிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 3 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், அரசியல் சாசன விதிகளின்படி பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    [1/25, 17:47] Sekarreporter 1: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நுழைவு வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்த நிலையில், நடிகர் விஜய் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டார் எனக் கூற முடியாது என்பதால், அவருக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தேவையற்றது என கூறி, நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கி உத்தரவிட்டது.

    மேலும், நீதித்துறையின் உண்மையான பலம் என்பது மக்களின் நம்பிக்கையே தவிர, நீதிமன்ற அவமதிப்பில் ஒருவரை தண்டிப்பது அல்ல எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
    [1/26, 10:57] Sekarreporter 1: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சேவைகளை பெற வலியுறுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் அட்டையை பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    [1/26, 12:20] Sekarreporter 1: சாலை விபத்தில் பாதிக்கபட்டவர்களை, 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் மருத்துமவமனைகளுக்கு கொண்டு செல்வதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மோட்டார் வாகன விபத்து தொடர்பாக போலி காப்பீடு கோரிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2021ல் உத்தரவு பிறப்பித்திருந்து.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு, ஓசூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் 11கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 84 வழக்குகள் வாபஸ் பெறப்படுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களை அழைத்து அவர்களின் ஒப்புதலுடன் தான் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளைத் திரும்ப பெற்றார்களா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணையக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

    விசாரணையின் போது, சாலை விபத்துகளில் சிக்குபவர்களை 108 ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதாக வழக்கறிஞர் விஜயராகவன் புகார் தெரிவித்தார்.

    108 ஆம்புலன்ஸ் சேவைக்கு எதிரான இந்த புகார் குறித்து காப்பீடு மோசடி குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து ஏப்ரல் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    [1/26, 14:32] Sekarreporter 1: தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால் இதுகுறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2019ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இதன்படி, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பளித்துள்ளது.

    தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொதுமக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்றும், அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் எனச் சுட்டிக்காட்டி, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமையை வழங்க முடியாது என முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

    அசாதாரண காரணங்களுக்காக பரோல் வழங்க விதிகள் வகை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம் என்றும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
    [1/26, 16:33] Sekarreporter 1: நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்க நீதித்துறை பணிகள் தேர்வு விதிகளில் எந்த தடையும் விதிக்காத நிலையில், மாவட்ட நீதிபதிகள் தேர்வில் நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்வில், நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.

    நேர்முகத்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாததால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட லாரன்ஸ், சுந்தரி ஆகிய இருவரும், குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்ததை எதிர்த்தும், பிரதான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சேர்த்து கணக்கிட்டு தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு நீதித்துறை பணிகள் தேர்வு விதிகளில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் தரப்பில், விதிகள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்காத போதும், விண்ணப்பங்கள் வரவேற்று வெளியிட்ட அறிவிப்பில், நேர்முகத்தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின், குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயித்ததை எதிர்த்து வழக்கு தொடர முடியாது எனவும் வாதிடப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்க தமிழ்நாடு நீதித்துறை பணிகள் தேர்வு விதிகள் எந்த தடையும் விதிக்காத நிலையில், குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனத் தெரிவித்து, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    [1/26, 17:50] Sekarreporter 1: வனவிலங்குகளின் மரபணு ஆராய்ச்சி தொடர்பான ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் கொள்முதல் செய்து விட்டதாகவும், அறிவியலாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு, விரைவில் ஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வன விலங்குகளின் மரபணு தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பிற மாநிலங்களை அணுக வேண்டியுள்ளதால், வனவியல் தடயவியல் ஆய்வகங்களை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர், காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அப்போது அவர்கள், ஆய்வகம் அமைப்பதற்கு தேவையான அனைத்து இயந்திரங்களையும் அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும், சோதனைகள் நடத்துவதற்கு, தகுதியான அறிவியலாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும், கொரோனா பேரிடர் காரணமாக சற்று தாமதமாவதாகவும், விரைவில் அவர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தனர்.

    இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
    [1/26, 22:28] Sekarreporter 1: வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்க, கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், சாலைகளில் வாகனங்கள் மோதி விலங்குகள் பலியாவதை தடுக்கவும் உத்தரவிடக் கோரிய வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    மேலும், கடந்த பத்து ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி மூன்று சிறுத்தைகள் உள்பட 152 வன விலங்குகள் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாகவும், வேக கட்டுப்பாட்டு விதிகளை ஓட்டுனர்கள் கடைபிடிக்காததால், வாகனங்கள் மோதி விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

    சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெங்குமரஹடா கிராம மக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தெங்குமரஹடா மற்றும் பவானி பிரதான சாலை புலிகள் சரணாலயம் வழியாக செல்வதாகவும், இந்த பகுதியில் 30 சதவீத புலிகள் நடமாட்டம் இருப்பதாகவும், இந்த பகுதி தான் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இனப்பெருக்க பகுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கிராமத்தை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் போது, விலங்குகள் சுதந்திரமாக நடமாட முடியும் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.

You may also like...