Madras high court feb 25th orders ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 15

[2
[2/15, 11:53] Sekarreporter 1: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் https://sekarreporter.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a/
[2/15, 12:02] Sekarreporter 1: திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. https://sekarreporter.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d/
[2/15, 15:10] Sekarreporter 1: https://sekarreporter.com/tnpsc-exam-case-full-order-before-the-madurai-bench-of-madras-high-court-dated-14-02-2022-coram-the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-md-no-2597-of-2022and-w-m-p-md-no-2303-of-2022/
[2/15, 15:10] Sekarreporter 1: [2/15, 15:06] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493519633797713922?t=7nKzv6r7Ibf51kSwk-oisw&s=08
[2/15, 15:07] Sekarreporter 1: https://sekarreporter.com/tnpsc-exam-case-full-order-before-the-madurai-bench-of-madras-high-court-dated-14-02-2022-coram-the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-md-no-2597-of-2022and-w-m-p-md-no-2303-of-2022/
[2/15, 17:50] Sekarreporter 1: [2/15, 17:48] Sekarreporter 1: Please send ur web order copy with ur photo for my wedsite
[2/15, 17:48] Sekarreporter 1: 🌹
[2/15, 17:50] Sekarreporter 1: For my sekarreporter app
[2/15, 18:01] Sekarreporter 1: [2/15, 18:00] Sekarreporter 1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.No.764 of 2014 1.Bharathi @ Bharathiyar. V. For Petitioners : Mr.Sarath Chandran For Respondent : Mr.L.Baskaran Government Advocate (Criminal Side) Therefore considering the plea made, I am inclined to reduce the sentence in respect of the offence under Section 376 read with 511 of Indian Penal Code from a period of four years Rigorous Imprisonment to that of Rigorious Imprisonment for a period of three years and six months. The other part of the sentence shall remain unaltered. https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-no-764-of-2014-1-bharathi-bharathiyar-v-for-petitioners-mr-sarath-chandran-for-respondent-mr-l-baskaran-gover/
[2/15, 18:00] Sekarreporter 1: Please read and send audio or video
[2/15, 18:30] Sekarreporter 1: [2/15, 18:28] Sekarreporter 1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.Nos.971 and 938 of 2014. Corruption case. The sentence of imprisonment for a period of 6 months is set aside. The punishment of fine alone is confirmed. Of the fine amount paid by the accused, a sum of Rs.2000/- is ordered to be paid as compensation to the respondent complainant. https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-nos-971-and-938-of-2014-corruption-case-the-sentence-of-imprisonment-for-a-period-of-6-months-is-set-aside-the-punishment-of-fine-al/
[2/15, 18:28] Sekarreporter 1: Please send short notes or audio or video interview regarding this order
[2/15, 19:15] Sekarreporter 1: Madras high court orders ஐகோர்ட் உத்தரவுகள். Feb 15 https://sekarreporter.com/madras-high-court-orders-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-feb-15/
[2/15, 19:16] Sekarreporter 1: Madras high court orders ஐகோர்ட் உத்தரவுகள். Feb 15 https://sekarreporter.com/madras-high-court-orders-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-feb-15/
[2/15, 19:26] Sekarreporter 1: Justice Anand Venkatesh’ Exemplary Verdict as a Vaccine to Pendency Pandemic Narasimhan Vijayaraghavan https://sekarreporter.com/justice-anand-venkatesh-exemplary-verdict-as-a-vaccine-to-pendency-pandemic-narasimhan-vijayaraghavan/
[2/15, 19:29] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493585386483830787?t=8_sxmp5kT8OKTp8iQ8vmTA&s=08
[2/15, 19:35] Sekarreporter 1: Civil dispute can’t be converted into a criminal case. Full order. THE HONOURABLE MR.JUSTICE K.MURALI SHANKAR CRL.OP(MD)Nos.3506 and 4418 of 2019 and Crl.M.P(MD) Nos.2003 and 2688 of 2019 https://sekarreporter.com/civil-dispute-cant-be-converted-into-a-criminal-case-full-order-the-honourable-mr-justice-k-murali-shankar-crl-opmdnos-3506-and-4418-of-2019-and-crl-m-pmd-nos-2003-and-2688-of-2019/
[2/15, 19:35] Sekarreporter 1: Elobrate discussion about protest petition. Full order. HONOURABLE MR.JUSTICE K.MURALI SHANKAR Crl.O.P.(MD)No.15358 of 2019 and Crl.M.P.(MD)Nos.9152 & 9153 of 2019 1.Senthilkumar https://sekarreporter.com/elobrate-discussion-about-protest-petition-full-order-honourable-mr-justice-k-murali-shankar-crl-o-p-mdno-15358-of-2019-and-crl-m-p-mdnos-9152-9153-of-2019-1-senthilkumar/
[2/15, 19:35] Sekarreporter 1: Writ Petitions filed under Article 226 of the Constitution of India praying this Court to issue a writ of certiorarified mandamus to call for the records with respect of the proceedings in vide memo No.CE/C/TR/SF/CII/TR/EEC/A3/F Profile /D.862/18 dated 26.10.2018 on the file of the 3rd Respondent granting approval of erection of over Head 110 KV Dc line https://sekarreporter.com/writ-petitions-filed-under-article-226-of-the-constitution-of-india-praying-this-court-to-issue-a-writ-of-certiorarified-mandamus-to-call-for-the-records-with-respect-of-the-proceedings-in-vide-memo-n/

/15, 11:59] Sekarreporter 1: திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை முழுமைமையாக தெரிவிக்கவில்லை என்றும், அந்த வேட்புமனுவை ஏற்றது தவறு என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது. உரிய நேரத்தில் வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி தரப்பில் தெரிவிக்கபட்டது.

உதயநிதி தரப்பில் மனுத்தாக்கல் செய்தபோது செலுத்த வேண்டிய வைப்பு தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாபஸ் பெற அனுமதிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
[2/15, 12:07] Sekarreporter 1: பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் வார்டு வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை போத்தனூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.

அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து புறப்பட கூறினர். ஆனால் தான் பிரசாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதை தடுக்க கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவர் 3-வது முறையாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன்னை பிரச்சாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோருடன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மனுதாரருக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் ,பதட்டமான பகுதிகள் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் வழக்கில் பல தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
[2/15, 12:12] Sekarreporter 1: கோவை மாநகராட்சி தேர்தலில் 95வது வார்டில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்ததாகக் கூறி, பா.ஜ. தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது இப்ராஹிமின் மனுவை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய சிறுபான்மைச் செயலாளர் சையது இப்ராஹிம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல கோவை மாநகராட்சியில் 95வது வார்டில் பிரச்சாரம் செய்யச் சென்ற தன்னை ஆளுங்கட்சி தூண்டுதல் பேரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதாகக் கூறி, தன்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க கூடாது என உத்தரவிடக் கோரி சையது இப்ராஹிம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதட்டமான பகுதிகளில் பிரச்சாரம் செய்ய செல்ல வேண்டாம் என கடிதம் அனுப்பியும் அதை மீறி பிரச்சாரம் செய்ததாக சையது இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த விவரங்களை மனுவில் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க எவ்வித காரணங்களும் இல்லை எனக்கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அபராதத் தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[2/15, 12:30] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களின் 110 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதியை முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்கள் தொடர்புடைய நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட வைப்பு நிதி ஆவணங்கள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 2017ஆம் ஆண்டிற்கு பிறகு கே.சி.பி. இன்ப்ரா நிறுவனத்தின் 109 கோடி ரூபாய் மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனத்தின் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் என 110 கோடியே 80 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி செலுத்தி இருப்பதாக, தெரிவந்திருப்பதால் அவற்றை முடக்கும்படி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல் அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள 110 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதிகளை முடக்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
[2/15, 13:48] Sekarreporter 1: பொது அமைதியை குலைக்கும் வகையில் டிவிட்டர் பதிவிட்டதாக பதிவான வழக்கின் முன் ஜாமீன் கோரிய பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வத்தின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளைவைத்துள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது டிவிட்டர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியை பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வினோஜ் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி இந்து முன்னணி கண்டனத்தை செய்தியாக வெளியிட்ட தினமலர் செய்தியை மேற்கோள் காட்டி மட்டுமே ட்விட்டர் பதிவிட்டதாக தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி செய்தியை பகிர்ந்ததை தாண்டி அரசின் செயல்பாட்டைதும், தேர்தல் பிரச்சாரமாகவும் செய்துள்ளார் எனவும், அவரது பதிவிற்கு அவரது பாலோயர்கள் கருத்து தெரிவித்ததையும் கவனத்தில் கொண்டே வழக்குப்பதிவு செய்யபட்டதாக தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகளுடன் மதத்தை தொடர்புபடுத்தி பதிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து வினோஜ் பி. செல்வத்தின் முன் ஜாமீன் மீதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளைவைத்துள்ளார்.
[2/15, 16:16] Sekarreporter 1: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் கனரக வாகனப் போக்குவரத்து காரணமாக விலங்குகள் பலியாவதாக கூறி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்க கோரி சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இச்சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பிப்ரவரி 10ம் தேதி முதல் அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி பவானிசாகர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. – பி.எல்.சுந்தரம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுத்தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டது எனவும், அதை அமல்படுத்தும்படி மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவித்த நீதிபதிகள், சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும் என்றனர்.

டேராடூன் – ஹரித்வார் இடையில் உள்ள சாலையில் யானைகள் கடப்பதால் விபத்துகளை தவிர்க்க மேல்மட்ட சாலை அமைக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதுபோல மேல்மட்ட சாலை அமைக்கலாம் எனத் தெரிவித்தனர்.

இரவு நேர போக்குவரத்து தடை உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மேலும் வாகன போக்குவரத்து தடை அமலில் உள்ள நேரத்தில் பள்ளிகள் ஏதும் செயல்படுவதில்லை என்று தெரிவித்தனர்.

மாற்று வழித்தடத்துக்கு ஏதும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி இடையீட்டு மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
[2/15, 16:55] Sekarreporter 1: ஆக்கிரமிப்புகள் வரன்முறைபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 2 ஆயிரம் 839 ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை தொகுத்து தாக்கல் செய்துள்ளதாகவும், அடுத்தகட்டமாக இது அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2015ம் ஆண்டு இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த போது 111 ஆக்கிரமிப்புகளே இருந்துள்ளன என்றும், 30 ஆயிரம் பேர் வசிப்பதாக தற்போது கூறுவது தவறு எனவும் தெரிவித்தார்.

பெத்தேல்நகர் குடியிருப்போர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், 25 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளன என்றார்.

அரசு மாற்று இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தைப்காலி செய்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தனிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் கருத்துக்களை பெற்று தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

ஆனால், ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அப்படி வரன்முறைப்படுத்த அனுமதித்தால், அது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பதைப் போன்றது எனத் தெரிவித்தனர்.

தற்போது மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், மேய்ச்சல் நிலங்களாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளே வெள்ளத்துக்கும், மழையில்லா காலங்களில் தண்ணீர் பஞ்சத்துக்கும் காரணமாகின்றன எனக் குறிப்பிட்டனர்.

அதிக நீர்நிலைகளைக் கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம், தமிழகம் எனக் கூறிய நீதிபதிகள், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என திட்டமிட்டு, ஒவ்வொரு கோவிலிலும் குளங்கள் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பாளர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவது கூட மறைமுகமாக் ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது எனக் கூறிய நீதிபதிகள், நில மாபியாக்கள், ஆக்கிரமிப்புகளில் ஏழைகளை குடியமர்த்தி, அரசிடம் வரன்முறை செய்து பின் அவர்களை வெளியேற்றி விடுவதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டாலும், அது தவறாக பயன்படுத்துவதால் தான் ஒடுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை என்று கூறியதுடன், தவறை அங்கீகரிக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் அளித்த விவரங்களை ஆய்வு செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைத்தனர்.

வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[2/15, 18:46] Sekarreporter 1: சென்னை, பிப். 16: பட்டியலின மக்களை இழிபடுத்தி பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
பட்டியலின மக்களை இழிவாக பேசி டுவிட்டரில் பதிவிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டரில் பதிவில் பட்டியலின மக்களை மிக கேவலமாக திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். பட்டியலின சமூகத்தையே மிக கேவலமாகவும், மோசமான வார்த்தைகளாலும் திட்டியது மட்டுமல்லாமல் திரைப்பட துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ பதிவிட்டார். எனவே அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பலதடவை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் இறுதி அவகாசம் தந்தது.
இதையடுத்து, வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, நீதிமன்றத்திற்கு வராமல் இருந்ததால் மீரா மிதுனின் ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார். அப்போது, மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கு வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

You may also like...