Madras high court december 6 th order

[12/6, 11:26] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில்

மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத்
பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடு செய்தார்

இதை அவசர வழக்காக இன்று பிற்பகல் 2.15மணி அளவில் விசாரிக்க வேண்டும் கோரிக்கைவைக்கபட்டது

மனு தாக்கல் செய்யுங்கள் விசாரிப்பதாக பொறுப்பு தலைமை முனீஷ்வரநாத் பண்டாரி தெரிவித்தார்
[12/6, 15:32] Sekarreporter 1: மனு தாக்கல் செய்துவிட்டு ஜெயச்சந்திரன் தரப்பில் பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் முறையீடு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான முடிவை இன்று மாலை அதிமுக அறிவிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன என வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் முறையீடு செய்தார். அறிவிப்பை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை. இன்று கடைசி வழக்காக விசாரிக்க கோரிக்கை.

நீதிபதிகள் ஏற்க மறுத்ததுடன், இன்று மனுத்தாக்கல் செய்த பிறகு என்ன மாற்றங்கள் உள்ளது என்பதை சேர்த்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்யுங்கள். ஜெயச்சந்திரன் வழக்கை நாளை காலை விசாரிக்கிறோம்
[12/6, 15:51] Sekarreporter 1: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்க தடை கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், இத்தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிட வில்லை என்றும் கூறியுள்ளார்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளியாவதாக கூறி, இந்த வழக்கை கடைசி வழக்காக அவசரமாக விசாரிக்க வேண்டும் என ஜெயச்சந்திரன் தரப்பில், தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வில் முறையிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாளை விசாரிப்பதாக கூறியதுடன், இன்றைய நிகழ்வுகள் குறித்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
[12/6, 16:01] Sekarreporter 1: ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவருக்கு எதிரான செல்வ வரி தொடர்பான வழக்கில் தீபக், தீபாவை சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008 ,2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
செல்வ வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதிவானது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த கடந்த 2008 ம் ஆண்டு தீர்ப்பாயம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் ஆர் மகாதேவன்,முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது ஜெயலலிதா காலமாகி விட்டதால் ,அவரது வாரிசுகளான தீபக்,தீபாவை வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரம் ஒத்திவைத்தனர்.
[12/6, 17:46] Sekarreporter 1: மக்களவை தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 11.48 கோடி ரூபாய் திமுக எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமானது எனக் கூறி, அதற்கு வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளராக இருந்த கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருடன் தொடர்புடையவர்கள் என தாமோதரன், விமலா ஆகியோர் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது விமலாவின் வீட்டில் 11 கோடியே 48 லட்ச ரூபாயை கைப்பற்றிய நிலையில், அந்த பணம் தன்னுடையது என அவரது சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.

ஆனால் அந்த பணம் கதிர் அணிந்தின் வருமானம் என ஏன் அறிவிக்கக்கூடாது என்று விளக்கம் அளிக்கும்படி வருமான வரித்துறை தரப்பில் அனுப்பிய நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கதிர் ஆனந்த் விளக்கம் அளித்த பின்னரும், அதை நிராகரித்துவிட்டு, அந்த பணம் கதிர் ஆனந்தின் வருமானம் என அறிவித்ததுடன், அதற்கான வரியை செலுத்த வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கதிர் ஆனந்த் தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் உரிமையாளருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கமளித்த பிறகும், நடவடிக்கை எடுப்பதாக கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதி, வரி வசூலிக்கும் வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கு குறித்து வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/6, 18:00] Sekarreporter 1: பெங்களூருவை சேர்ந்த மகேஷ் ரெட்டி தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் தி கிரிமினல் படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த மகேஷ் ரெட்டி என்பவர் தனது கமலா ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் தி கிரிமினல் என்ற திரைப்படத்தை தயாரித்து, கதாநாயக நடிக்கிறார். இந்த படத்தை சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சுதீசிகன் என்பவர் இயக்கிவந்த்தார். படத்தை இயக்க 10 லட்ச ரூபாய் சம்பளமும், பிற மொழிகளில் டப்பிங், ரீமேக் என எடுக்கும்போது, அதற்கான உரிமைத் தொகையில் 25 சதவீதம் இயக்குனருக்கு வழங்குவது எனவும் மகேஷ் ரெட்டி ஒப்பந்தம் செய்தார்.

ஆனால் ஆறுமுகம் என்பவரின் இயக்கத்தில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாடு சினிமா இயக்குனர்கள் சங்கத்தில் சுதீசிகன் கடந்த செப்டம்பர் மாதம் இரு புகார்கள் அளித்தார்.

எவ்வித நோட்டீஸ் கொடுக்காமலும், தகவல் தெரிவிக்காமலும் இயக்குனரை மாற்றிய தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டி வெளியிட திட்டமிட்டுள்ள கிரிமினல் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சுதிசீகன் சென்னை மாவட்ட 24வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், இயக்குனர் சுதீசிகன் தாக்கல் செய்த ஆவணங்களில், குற்றச்சாட்டுக்களுக்கான முகாந்திரம் இருப்பதால் மகேஷ் ரெட்டியின் தி கிரிமினல் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள், விளம்பரப்படுத்துதல், டப்பிங், ரிமேக், திரையரங்கம் அல்லது ஓடிடி வெளியீடு ஆகியவற்றுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு குறித்து நடிகர் மகேஷ் ரெட்டி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/6, 18:30] Sekarreporter 1: கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் விளக்கத்தை பதில்மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், நாளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தும் முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற கட்சி விதிகள் முறையாக பின்பற்றபடவில்லை எனவும், இயற்கை நீதிக்கு எதிராக தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதாகவும், இதனால் கட்சி உறுப்பினர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தங்களுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ளும் உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்துள்ளது தவறு எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே, கட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதார்ர தரப்பில் கட்சியின் உறுப்பினர்களை முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை என்பதால் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய நாராயணன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி மனுதாரர் அதிமுகவில் இருந்து திமுக சென்று அதன் பின் அமமுகவில் இருந்து விலகி தற்போது சசிகலாவுடன் இருப்பதாகவும், அதனை மனுவில் மறைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் கட்சியின் உறுப்பினரே இல்லை என்றும், அவர் இந்த வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவித்தார்.

மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பளர் பதவிகளுக்கு ஓ.பி.எஸ்.மற்றும் ஈ.பி.எஸ்.போட்டியின்றி தேர்வு செய்யபட்டதாக மெமோ தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அணுகலாம் என அறிவுறுத்திய நீதிபதி, மனு தொடர்பாக அதிமுக மற்றும் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விரிவான விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/6, 20:22] Sekarreporter 1: மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்ற
அரசாணையை எதிர்த்து தனியால் கல்வி நிறுவனங்கள் சங்கம் வழக்கு
ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை,
கல்வி கட்டண பாக்கி உள்ளது என்பதற்காக மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வ-ழங்க மறுக்கக்கூடாது என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&
படையெடுப்பு
கொரோனா ஊரடங்கினால் பலர் வேலை இழந்தனர். இதனால், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளி மற்றும் கல்வி கட்டணம் குறைவாக உள்ள பள்ளிகளில் சேர்த்தனர். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 12&ந்தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், கல்வி கட்டணம் பாக்கி உள்ளது என்பதற்காக மாணவர்களின் கல்வி மாற்றுச்சான்றிதழை வழங்க எந்த ஒரு பள்ளி நிர்வாகமும் மறுக்கக்கூடாது என்று கூறியுள்ளது.
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் மாற்றுச்சான்றிதழை கேட்டு பள்ளிகளுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
எதிரானது
ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு மாற்றுச்சான்றிதழ்களை வழங்க வேண்டும். கல்விக் கட்டணத்தை உரிய சட்டத்தை பின்பற்றி பள்ளி நிர்வாகம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி சிவில் கோர்ட்டில், கல்வி கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள பெற்றோருக்கு எதிராக பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர வேண்டும்.
ஆனால், அனைத்து வகையான பள்ளிகளும் மாற்று சான்றிதழை வழங்க வேண்டும் என்று பொதுவான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
தனியார் அரசு உதவி பெறாத பள்ளிகள், மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை கொண்டு செயல்படுகிறது.
தடை வேண்டும்
அதுபோன்ற பள்ளிகளுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
……………….

You may also like...