Madras high court december 2 order

[12/2, 11:55] Sekarreporter 1: போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரிய சமத்துவ மக்கள் கட்சி மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருட்களின் பயன்பட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் நாளை (டிசம்பர் 3) ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி அளிக்க கோரி தமிழக டிஜிபி-யிடம் மனு அளிக்கப்பட்டது.

காவல்துறை அனுமதி அளிக்காததால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாள செந்தில் முருகன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கோரி ஒட்டுமொத்தமாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்ததாகவும், அதனால் அனுமதி அளிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறையிடம் விண்ணப்பித்தால் மனுக்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.கபிலன் ஆஜராகி, நவம்பர் 18ஆம் தேதியே மனு அளித்தும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கவில்லை எனவும், மாவட்ட வாரியாகவும் மனுக்கள் அளிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, மாவட்ட வாரியாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
[12/2, 13:50] Sekarreporter 1: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும், தன்னை பற்றி அவதூறாக பேசுவதற்கு தடைவிதிக்கக்கோரியும்
அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நிறுவனத்திற்க்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை எனவும் மேலும் டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை எனவும் வாதிடப்பட்டது.

தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி வாதிடப்பட்டது.

அறப்போர் இயக்கம் சார்பில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரை தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று எனவும் அதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடி நாதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2018-19 ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் போடுவதற்காக ரூ 276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும்
அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், டெண்டர் குறித்த முக்கிய் கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பு எனவும் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிச்சாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
[12/2, 15:05] Sekarreporter 1: சென்னை- பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில், கடந்த முறை அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, வட்டாட்சியர் மீனா ஆகியோர் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு ஆஜராகினர்.அப்போது நீதிபதி, போலி ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை திரும்பப் பெறாவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகையான 20 கோடியே 52 இலட்சம் முழுவதும் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும், நீதிமன்ற வழக்கு கணக்கில் விரைவில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், இந்த திட்டத்திற்காக 190 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், 20 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக் தமிழக அரசு தெரிவிப்பதாகவும், மீதமுள்ள தொகை எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி,அரசிடம் செலுத்தபட்ட இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது என இவ்வளவு காலம் கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றம் தீவிரம் காட்டியபிறகுதான் நெடுஞ்சாலை ஆணையம் கவனத்தில் கொள்ளுமா என கேள்வி எழுப்பினர்.

அதன் பின்னர் 190 கோடி ரூபாய் இழப்பீடு எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்களை தற்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேசமயம் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கிய முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
[12/2, 15:15] Sekarreporter 1: *2011-2019*

*வருமான வரி ஏய்ப்பு*

*விஜயபாஸ்கரின் குவாரி செலவு மற்றும் வருமான கணக்கு:*

*குவாரி செலவு:*

12204835
17520641
38884862
69287294
131159800
177724564
188807699
29395700

*மொத்தம்*
ரூ.664984945

*குவாரி வருமானம்:*

128267697
66275129
1031265215

*மொத்தம்*
ரூ.1225808041

*குவாரி ப்ளூமெட்டல் விற்பனை மறைத்த தொகை:*

333412176

*குவாரி இருப்பு மறைத்தல்:*

135728000

*மொத்தம்*
ரூ. 469140176

*மொத்தம் குவாரியில் வரி ஏய்ப்பு:*
ரூ. 2359933162

2. *சேகர் ரெட்டி*

ரூ. 854575765

3.*குட்கா*

ரூ. 24000000

4.*ஆர்.கே.நகர் தேர்தல்*

ரூ.184096000

5.*விஜயபாஸ்கரின் வீட்டில் பறிமுதல்*:

ரூ. 2508350

*ஆக மொத்தம்*

ரூ. 342, 82, 03, 277
[12/2, 18:07] Sekarreporter 1: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தகுதியில்லாதவர்களுக்கி வீடுகள் ஒதுக்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சேர்ந்த சேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் கையாடல் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்க தேவையில்லை என அரசு தரப்பில் அழகு கவுதம் ஆஜராகி தெரிவித்தார்.

இதையடுத்து, தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு மற்றும் வேலை உறுதி திட்ட நிதியில் கையாடல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுவதால், இதை தீவிரமாக கருத வேண்டுமென கூறிய நீதிபதிகள், ஊரக வளர்ச்சி துறை செயலளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

பின்னர், சட்டவிரோதமாக வீடுகள் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டுமென ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உண்மை தன்மை குறித்து சரிபார்க்கவும், வேலை உறுதி திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்திற்கு குறையாத அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...