Madras high court april 7th order

[4/7, 10:34] Sekarreporter: 7.5 செல்லும்
[4/7, 10:34] Sekarreporter: 7.5 செல்லும்
[4/7, 10:42] Sekarreporter: 7.5% இட ஒதுக்கீடு செல்லும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மறு ஆய்வு செய்யனும் – HC

MedicalEducation-ல் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசு சட்டம் சட்டத்தை எதிர்த்த வழக்கு
[4/7, 10:43] Sekarreporter: மருத்துவத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சட்டம்

செல்லும்

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி
[4/7, 11:10] Sekarreporter: .

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, ஏற்கனவே தமிழகத்தில் 69 சதவீத இட்ச் ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், மீதமுள்ள 31 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பொதுப்பிரிவில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளதே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இட ஒதுக்கீட்டால் பயனடைந்தவர்களின் குடும்பத்தினர் தான் பயன் பெறுகின்றனர். 70 ஆண்டுகளாகியும் பின்தங்கியவர்கள் பிந்தங்கியவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இதை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், பொதுப்பிரிவினருக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், மொத்த இடங்களில் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியான பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், நீட் தேர்வு தகுதி அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

மேலும் அவர், பொருளாதாரம், கட்டமைப்பு சமநிலையற்ற நிலை என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நீதிபதி குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாது என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட்ச் ஒதுக்கீடு வழங்கியது நியாயமானது எனவும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என பள்ளிகளை இரு வகையாக பிரிப்பது சட்டப்படி அனுமதிக்கத்தக்கது எனவும் அதன் அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்ட அரசு, உதவி பெறும் பள்ளிகளை கவனத்தில் கொள்ள தவறி விட்டது எனவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதைப் போல, இலவச சீருடை, காலணி, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்குவதாகக் கூறிய வழக்கறிஞர், மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

விசாரணையின் போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய தலைமை நீதிபதி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியிருந்தால், நீட் பயிற்சி மையங்கள் அமைக்கும் தேவை இருந்திருக்காது எனக் குறிப்பிட்டார்.

மார்ச் 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

இந்த வழக்குகளில் நீதிபதிகள் நாளை தீர்ப்பளிக்கிறது.
[4/7, 11:18] Sekarreporter: தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர். அதேசமயம் இந்த இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்க வேண்டுமா என்பது குறித்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.
[4/7, 11:40] Sekarreporter: பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைக்கக் கோரி பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தாக்கல் செய்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015, 2017ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு கால அவகாசம் கோரியது. அதை ஏற்று குடியிருப்புகளை காலி செய்ய இந்த கல்வியாண்டு வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், வணிக கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை தொடர வேண்டுமென உத்தரவிட்டது.

இந்நிலையில் பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தரப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது எனவும், புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மெய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்க அரசுக்கு உத்தரவிடும் வகையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தங்களை இணைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில், பிரதான வழக்கில் தான் இடையீட்டு மனுதாரகளாக இணைய முடியும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைக்க முடியாது என கூறி, பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை தொடர்ந்த கூடுதல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[4/7, 12:03] Sekarreporter: சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த, மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும்,
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்களுக்கு பணத்தை வழங்குமாறு தம்மிடம் சிவகார்த்திகேயன் கூறி விட்டு தற்போது இந்த வழக்கை தெடர்ந்துள்ளதாகவும், டி.டிஎஸ் தொடர்பாக சிவ கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் எனவும் டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும் போது மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என நடிகர் சிவ கார்த்திகேயன் தரப்பிற்கு கேள்வி எழுப்பினர்.

பின்னர் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணை வரும் 13ம் தேதி நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்தார்.
[4/7, 14:30] Sekarreporter: முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக #பேரறிவாளன் மட்டுமல்லாமல்
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரின் ஆவணங்களையும் குடியரசு தலைவருக்கு ஆளுனர் அனுப்பியுள்ளார்..
தமிழக அரசு தகவல்..
எந்த தேதியில் அனுப்பப்பட்டது என விளக்கம் தர உத்தரவ
[4/7, 15:45] Sekarreporter: ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும் கூறியுள்ளது.

மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது, 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அனைத்து வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதாக கண்டித்த நீதிபதி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனக் கூறியுள்ளார்.

அறிவு , திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் எனவும், தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் எனவும், இதுசம்பந்தமான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[4/7, 15:45] Sekarreporter: அதிமுக-வை சேர்ந்த வார்டு கவுன்சிலரை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட்டு கூடலூர் நகராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சையது அனுப் கான் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய சகோதரருக்கு சொந்தமான நிறுவனத்தில் தனக்கு பங்கு உள்ளதாகவும், அதை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என கூறி, வேட்புமனுவை நிராகரிக்க கோரி திமுக சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி பாண்டியராஜ் என்பவர் அதே குற்றச்சாட்டுகளுடன் கூடலூர் நகராட்சி ஆணையரிடம் புகார் அளிதத்தாக குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், தன்னை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நீலகிரி நகராட்சி ஆணையர் மார்ச் 29ம் தேதி நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவரின் தகுதியை குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின்படி மாவட்ட நீதிபதிகளுக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டு நகராட்சி ஆணையர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கடிதம் அனுப்பியுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி, ஏற்கனவே கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்ட தன் மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்கபட்டுள்ளதாகவும், எனவே அதன் அடிப்படையில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து கூடலூர் நகராட்சி ஆணையர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
[4/7, 15:49] Sekarreporter: முரசொலி ஆசிரியர் செல்வம் மீது பதியபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

முரசொலி நாளிதழில் கடந்த 2012 ம் ஆண்டு கலைஞர் பதிலகள் என்ற தலைப்பில் அப்போதைய அதிமுக அரசின் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த வைத்தியலிங்கதின் உதவியாளர் காந்தியின் உறவினரான முத்து குமார் தான்,வீட்டு வசதி வாரிய தொடர்பான அனைத்து முடிவுகள் எடுக்கப்படுகிறது என செய்தி வெளியிடபட்டது.

இந்த செய்தியின் அடிப்படையில் முரசொலி ஆசிரியர் செல்வம் மீது, அப்போதைய அமைச்சர் வைத்தியலிங்கம் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி முரசொலி ஆசிரியர் செல்வம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி ஆசிரியர் செல்வம் மீது போடபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
[4/7, 18:55] Sekarreporter: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம்,அரசு பள்ளி மாணவர்களின் பின்புலத்தை ஆராய்ந்ததில்,
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நல்ல நிலையில் உள்ளனர்,ஆங்கில வழி கல்வி பயில்கின்றனர்,
நல்ல தரத்தில் உள்ளனர் எனவே
இந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு விடுபட்டதில் எந்த தவறும் இல்லை…
அரசு முழு மனதையும் செலுத்திதான் சட்டம் இயற்றியுள்ளதால்
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மனுக்கள் தள்ளுபடி …
[4/7, 18:55] Sekarreporter: இந்த சட்டம் நீட் தேர்வினை எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்யவில்லை..

சட்டத்தை கொண்டு வர
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது…

நீட் தேர்வின் அடிப்படையில்தான் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது…

இந்த சட்டம் தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது அல்ல…முரண்பாடானது அல்ல…

இட ஒதுக்கீடிற்கு முன் 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்தது,7.5 ஒதுக்கீட்டிற்கு பிறகு 435 பேருக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது.. இதனால் இந்த சட்டத்தின் உடை நோக்கம் நிறைவேறி உள்ளது…

அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதனால் அவர்கள் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக மேம் படுவார்கள் என்பதனால் இந்த சட்டம் அரசியலமைப்புப் பிரிவு 14 எதிரானது அல்ல…

அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது…

இந்தியாவில் மருந்துவ கல்வி சிறந்த
தாக உள்ளது..இதில் சமூக பொருளாதார பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்பளித்து,
தடைகளை தாண்டி வர உதவுவதால் இது அரசியல் சாசனத்திறகு விரோதமானது அல்ல..

இந்த7.5 இட ஒதுக்கீடு ,
இட ஒதுக்கீடு வரம்பை மீறவில்லை…
அனுமதிக்கத்தக்கது…
[4/7, 18:57] Sekarreporter: 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நீட் தேர்வினை எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்யவில்லை – உயர் நீதிமன்றம் ..

சட்டத்தை கொண்டு வர
மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது…

நீட் தேர்வின் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு நிரப்பப்படுகிறது…

தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது அல்ல…

இட ஒதுக்கீடிற்கு முன் 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்தது…

7.5 ஒதுக்கீட்டிற்கு பிறகு 435 பேருக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது…

சட்டத்தின் நோக்கம் நிறைவேறி உள்ளது…

அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது…

சமூக பொருளாதார பின்தங்கிய மாணவர்களுக்கு வாய்ப்பளித்து,
தடைகளை தாண்டி வர உதவுவதால் இது அரசியல் சாசனத்திறகு விரோதமானது அல்ல..

7.5 இட ஒதுக்கீடு ,
இட ஒதுக்கீடு வரம்பை மீறவில்லை…

சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு…
[4/7, 18:58] Sekarreporter: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை செல்லும் என்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வு, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி மாநில அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை எதிர்க்க முடியாது என்றும், 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

நீட் தேர்வை இந்த சட்டம் நீர்த்துப்போக செய்யவில்லை எனவும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் இந்த இடஒதுக்கீடும் நிரப்பப்படுகிறது எனவும், தமிழக அரசின் சட்டம் தேசிய மருத்துவ ஆணைய விதிகளுக்கு எதிரானது அல்ல என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த சட்டத்தைக் கொண்டு வரும்முன் ஆறு அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபிறகு 435 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மாநில அரசு, ஆணையம் அமைத்து சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அரசு பள்ளியின் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.46,686 ஆக உள்ளது. அதே சமயம் சிபிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4,68,413 ஆகவும், ஐசிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4,77263 ஆகவும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசுப்பள்ளி மாணவர்களைப் பொருத்தமட்டில் 83 சதவீத தந்தையர்களும், 65 சதவீத தாயாரும் தினக்கூலி பணியாளர்கள் எனவும், சமத்துவத்தை தீர்மானிக்கும் போது இந்த அம்சங்களை ஒதுக்கிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகள் அடிப்படையில் மாணவர்களை வகைப்படுத்துவது காரணமற்றது எனக்கூறி விட முடியாது எனவும், சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள், தடைகளை தாண்டி வர ஏதுவாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது அல்ல எனவும், 7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது அந்த இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிக்கவில்லை. அதேநேரம் அனைத்து பிரிவிலும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த பலன் சென்றடையும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோரை விட, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வருமானம், சமூக பின்னணி ஆகிய அம்சங்களை ஆராய்ந்ததில் அவர்கள் நல்ல நிலைமையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி படிப்பதையும், அவர்களின் பெற்றோரின் சமூக, கல்வி நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படவில்லை எனக் கூறி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஆணையத்தின் பரிந்துரைப்படி 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும், 5 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த இடஒதுக்கீட்டைத் தொடராத வகையில் இடைப்பட்ட காலத்தில் அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...