Madras high couet orders december 16

[12/16, 12:46] Sekarreporter 1: மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு கால நீட்டிப்பு கேட்கும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கிளாஸ் 1 ஓப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவரான சென் வர்கீச் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பான 2019-2020ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்பட்டு, அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகள் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிறப்பிக்கப்பட்டன. டெண்டர் பணிகளை 6 முதல் 12 மாதங்களில் முடிக்க வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கபட்டதாகவும், ஆனால் மார்ச் 3வது வாரத்திலிருந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2020 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், ஒப்பந்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வாழ்வாதாரத்திற்காக சொந்த ஊர்களுக்கு பெயர்ந்ததாகவும், பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதில் சிரமம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு, தேர்தல், பணியாளர்கள் இல்லாமை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை தங்கள் சங்க உறுப்பினர்களால் முடிக்க முடியாததால், 50 சதவீத கால அவகாசம் வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சியிடம் கடந்த அக்டோபர் மாதம் கோரிக்கை மனு அனுப்பியதாக மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சங்கம் தரப்பில் வழக்கறிஞர் வை.இளங்கோவன் ஆஜராகி தங்களை போல பாதிக்கப்பட்ட சாலைப் பணி துறை சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மழை நீர் வடிகால் துறை சார்பான ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படவில்லை என வாதிட்டார். மேலும், பணியை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காதது தொடர்பாக அபராதம் வசுலிப்பதிலிருந்து மட்டும் தங்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பணிகளை முடிப்பதற்கான கால நீட்டிப்பு கோரிய மனுவை நான்கு வாரங்களில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
[12/16, 13:01] Sekarreporter 1: அரசு பள்ளி மைதானத்தை அரசு பள்ளிமாணவர்ரகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச்சேர்ந்த சாந்தி விஜய் பெண்கள் பள்ளி என்ற தனியார் பள்ளி ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.அந்த வழக்கில் இந்த பள்ளிக்கு அருகிலேயே அரசு பள்ளிக்கு சொந்தமான 2.40 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.அந்த மைதானத்தை அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும்
நேரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தாலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில்,கொரோனா காலகட்டத்தில் மேற்படி மைதானம் வணிக பயன்பாட்டிற்கு வந்து விட்டதாகவும் உழவர் சந்தை பட்டாசு கடைகள் வைக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். விளையாட்டு அல்லாத பல நிகழ்வுகள் அந்த மைதானத்தில் நடைபெற்று வருவதாகவும் எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார் . இந்த வழக்கு தலைமை நீதிபதி அம்முனிவர் நான் பண்டாரி நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் மைதிலி சந்ரு ஆகியோர் ஆஜராகி,
விளையாட்டு மைதானத்தில் இதர வணிகப் பயன்பாடு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்றும், இரண்டு பள்ளிகள் மட்டுமே விளையாட்டுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்யளனர்.
மேலும் அந்த மைதானத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் அதைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர் தனியார் பள்ளி மாணவர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்
[12/16, 15:51] Sekarreporter 1: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தலைமைச் செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னும் மீண்டும் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக தகுந்த உத்தரவை பிறப்பிக்க ஆலோசனைகளை வழங்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில், மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும், இணையதளத்தில் சர்வே எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலைகளின் விவரங்கள் தெரிய வருகிறது என்பதால், நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

அனைத்து தரப்பு வழக்கறிஞர்கள் கருத்துக்களை கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[12/16, 16:52] Sekarreporter 1: ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு மாற்றாக, கொடைக்கானலில் தேசிய அளவிலான மையத்தை அமைக்கும் அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு

தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

கூட்டுறவு சங்கங்களில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டத்தில் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது

சேலத்தில் நடைபெற்ற பணிகளை நிறுத்திவிட்டு,
கொடைக்கானலில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (லேம்ப் – LAMP) கூட்டுறவு சங்கத்தின் தலைவர்
ஜி. சென்றாயன் தொடர்ந்த வழக்கு
[12/16, 17:17] Sekarreporter 1: நாட்டின் எந்தெந்த மாநகராட்சிகளில் மண்டலவாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்படுகின்றன என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும்.

ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .

இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி அரசியல் சட்டத்தின் 243 டி உட்பிரிவு 3,
மூன்றில் ஒரு பகுதிக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்வதாகவும், அந்த வகையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

ஆனால், வார்டு வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பிரபாகரன் குறிப்பிட்டார்.

இதையடுத்து, வார்டு வாரியாக இல்லாமல், மொத்தமாக மாநகராட்சியை ஒரு யூனிட்டாக கருதி ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மண்டல வாரியாக எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்காக நாளை (டிசம்பர் 17) வெளியிடுவதாக இருந்த வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என தேர்தல் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் சங்கமான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளை வகுத்து உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பில், தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 25 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணியாற்றி இருக்க வேண்டும் எனவும், ஆண்டுக்கு 50 வழக்குகளில் ஆஜராகி வாதிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சங்கத்தின் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிட உள்ளதால் மறு ஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், ஜி.ராஜேஷ், சத்யபால், காணிக்கைநாதன் ஆகியோர் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வில் முறையிட்டார்.

முறையீட்டை ஏற்று, ஜனவரி 7ம் தேதி மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், நாளை வெளியிட இருக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிடக் கூடாது என தேர்தல் குழுவுக்கு அறிவுறுத்தினர்.

 

 

 

 

 

 

You may also like...