Madras high court orders oc 3rd ஐகோர்ட் உத்நரவுகள்

[10/2, 13:09] Sekarreporter.: ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செல்லரிக்க செய்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

1500 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல்துறை அதிகாரி பாஸ்கரன் என்பவரை இடைநீக்கம் செய்து காவல்துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்து செய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கை தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வு வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகி விட்டதாக கூறிய நீதிபதிகள் ஊழல் தனது வேர்களை பரப்பி சமுதாயத்தை கரையான் போல் செய்கை செய்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தனர்
[10/2, 14:24] Sekarreporter.: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகள் எப்போது நிரப்பப்படும் என பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் பதிவாளர் மற்றும் தேர்வு க கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளதாகவும் தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் என  புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்ல ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளவரை பதிவாளராக நியமிக்கும் வகையில் நியமனங்கள் நிரப்பபடாமல் தாமதப்படுத்துவதாக  புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த பதவிகள் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்று 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும்,பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,காலியாக உள்ள பதவிகள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 5 ம் தேதி க்கு தள்ளிவைத்தனர்.
[10/2, 15:27] Sekarreporter.: கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியவில்லை என 1989ம் ஆண்டுகளில் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், வன்னியர்கள் உள்ளிட்ட 106 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரின் அறிக்கையின் அடிப்படையில், மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சீர்மரபினர் மற்றும் பிற பிரிவினருக்கு முறையே 7 மற்றும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு எனவும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆய்வு செய்ய நீதிபதி குலசேகரன் கமிட்டி அமைக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யலாமா, வேண்டாமா என்பதை ஆய்வு செய்யவே அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இந்த வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
[10/2, 16:21] Sekarreporter.: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க பொதுச்செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில், பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை எனவும், சட்டத்தை மீறி தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், 1994ம் ஆண்டு அரசாணைக்கு பின் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்சு விட்டதாகவும், 1994ம் ஆண்டு அரசாணை செயலற்று விட்டதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து 1994ம் ஆண்டுக்கு பின் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ஆய்வு செய்த நீதிபதி, பின்னாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் 1994ம் ஆண்டு அரசாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை எனவும், இந்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.
[10/2, 17:00] Sekarreporter.: சென்னை அம்பத்தூரில் ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை ஆணையராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள அம்பத்தூர் நாடார்கள் தர்ம பரிபாலன சங்கத்தின் நிர்வாகிகள் காசிராஜன், காஞ்சிராஜன் பாஸ்கரன், செல்வராஜ் உள்ளிட்டோர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஏலச்சீட்டு தொகையை முறையாக திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதில் 52 பேரிடம் சுமார் 3கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபட்டது.

புகாரின் பேரில் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காசிராஜன் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இவர்கள் தொடர்புடைய காஞ்சிராஜன், செல்வராஜ், செல்வம், பாஸ்கரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் தாங்கள் ஏமாற்றிய ஏலச்சீட்டு பணத்தை முழுவதுமாக முதலீடு செய்தவர்களுக்கு திருப்பித் தருவதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை ஆணையராக நியமிப்பதாகவும், இவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணம் செலுத்தியதற்கான ரசிது உள்ளிட்ட ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் இந்த ஆதாரங்களை வருகிற டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் நீதிபதி ஆணையத்திடம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். உரிய ஆதாரங்களை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான முதலீட்டு தொகையை திரும்ப வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் காஞ்சிராஜன் உள்ளிட்டோர்க்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குவதாகும் இவர்கள் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விசாரணை அதிகாரியிடம் திங்கட்கிழமை அன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[10/2, 19:05] Sekarreporter.: விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்ததில் மரணமடைந்த ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேட்டுக்குப்பம் தைச் சேர்ந்த சொக்கி என்பவரின் மகன் கதிரவன், ஆட்டோ டிரைவராக உள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி மாலை உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கதிரவன், தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார்.

அதன்பின் அவரை மதுரவாயல் காவல் நிலைய காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.

விசாரணை முடிந்து அனுப்பி வைத்து விடுவதாக காவலர்கள் கூறிய நிலையில், கதிரவன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சொக்கி, அங்கு செல்லும் முன் கதிரேசன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சித்ரவதை செய்ததால், தனது மகன் மரணம் அடைந்து விட்டதாக கூறி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜெயக்குமார், ஏட்டுகள் கண்ணப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், கதிரவனின் உடலில் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை காவலர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும், குடிபோதையில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததால் தான் அவர் இறந்து இருக்கிறார் என்பதால், அவரது குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜெயக்குமார் ஓய்வு பெற்றுவிட்டதாலும், ஏட்டு ரவீந்திரன் மரணமடைந்துவிட்டதாலும், மற்ற இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
[10/2, 19:06] Sekarreporter.: போக்சோ மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு, சஸ்பெண்ட் காலத்திற்கான பிழைப்பூதியம் வழங்காமல் இருக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பேரூராட்சிகளில் எத்தனை பேர் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆர்.பெரியசாமி என்பவர் மாநில தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

இதேபோல், பாலியல் கொடுமை தொடர்பாக எத்தனை ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது புகார் வந்துள்ளது. எத்தனை பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது? எத்தனை பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று முருகேஷ் என்பவர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அதிகாரிகள் சரியான பதில்கள் தராததால் இருவரும் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில் பேரூராட்சிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 42 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதர குற்றங்களுக்காக 60 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரவித்தார்.

பள்ளிக்கல்வி துறை பொது தகவல் அதிகாரி இதுவரை பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

லஞ்ச வழக்குகளிலும், போக்சோ சட்டங்களின் கீழும் நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும்போது அந்த காலத்தில் அவர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய தகவல் ஆணையர், சஸ்பெண்ட் செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது என்பதால், ஊழல் மற்றும் போக்சோ குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் அரசு ஊழியர்களின் சஸ்பெண்ட் காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

You may also like...