Madas high court sep 28th order judge durai samy took new post tribunal

[9/28, 11:55] Sekarreporter1: ரூட் தல எனக்கூறி சக மாணவர்ளுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தி யைகாட்டி மிரட்டிய மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்யுமாறு நிபந்தனை விதித்துள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்ற மாணவன், ரூட் தல எனக் கூறிக்கொண்டு சக மாணவர்களுடன், புறநகர் ரயிலில் வருபவர்களிடம் கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக குட்டி என்ற மாணவன் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி மாணவனின் தந்தையை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில்
அவர் ஒரு சிறிய ஹோட்டலில் காசாளராகப் பணியாற்றி தனது மகனை சிரமத்துடன் படிக்க வைப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து,
நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னையில் உள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மித்ரா மறுவாழ்வு மையத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுக்கு,
பராமரிப்பதில் உதவ வேண்டும் என்ற நிபந்தனையோடு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்..
ஒவ்வொரு வாரமும் அதற்கான அறிக்கையை விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்கவும் மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தையும் உணர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.
மாணவனின்
கல்வி கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிவாரணம் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
[9/28, 13:52] Sekarreporter1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது…

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு திட்டவட்டம்…

ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மேல் முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என விளக்கம்…

குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தகவல்…
[9/28, 14:57] Sekarreporter1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனவும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது எனவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை தனி நீதிபதி இளந்திரையன் ஏற்க மறுத்து விட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் திருமாவளவன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டைக் கேட்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், தனி நீதிபதி உத்தரவை திரும்ப பெற கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் மேல் முறையீடு தான் தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

இந்த முறையிட்ட கேட்ட நீதிபதிகள், ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்திருந்தது.

உணவு இடைவேளைக்கு முன் இதுகுறித்து விளக்கம் அளித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள் குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும் அது விசாரணைக்கு உகந்ததல்ல என விளக்கம் அளித்தனர்.
[9/28, 15:08] Sekarreporter1: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ள ஒரு இசையமைப்பாளர், அந்த உரிமையை சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளருக்கு வழங்கி விட்டால், சேவை வரியில் விலக்கு அளிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர் 2019ஆம் அண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020 ஆண்டு பிப்ரவரியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், 6 கோடியே 79 லட்சம் ரூபாய் வரி செலுத்தவில்லை என கூறி, 6 கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படியிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கவில்லை என்பதும், அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
[9/28, 16:16] Sekarreporter1: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருவள்ளூர் காவல் துறையினருக்கும், உள்துறை செயலாளர், டிஜிபி-க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் செப்டம்பர் 27ம் தேதி நிராகரித்துள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனுமதி மறுக்க எந்த அதிகாரமும் இல்லை எனவும், அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[9/28, 17:24] Sekarreporter1: நடிகை மீரா மிதுன், தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால் பிடி வரண்ட பிறப்பிக்க பட்ட அவரை கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜரகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் எம்.சுதாகர், பிடி வாரண்ட் பிறப்பிக்கபட்ட மீரா மீதுன் பல இடங்களில் காவல்துறை தேடி வருவதாகவும், அவர் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்துவருவதாகவும்,
பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அங்கிருந்து வேறு இடத்திற்கு அவர் சென்றுவிட்டார். செல் பேன் என்னையும் அடிக்கடி மாற்றி வருவதாகவும் விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்ய உரிய நடவடிக்கை காவல்துறை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்து விரைந்து கைது செய்ய காவல்துறைக்கு அறிவுத்தி வழக்கின் விசாரணையை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
[9/28, 17:26] Sekarreporter1: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்
தலைவராக நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பேற்பு…

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற எம். துரைசாமி தமிழக அரசால் நியமனம்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் போன்ற யூனியன் உள்ள ரியல் எஸ்டேட் ஆணையங்களின் தீர்ப்பை எதிர்த்து இந்த தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்
[9/28, 17:28] Sekarreporter1: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்
தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி எம். துரைசாமி கடந்த வாரம் ஓய்வுபெற்றார். அவரை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி எம்.துரைசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தீர்ப்பாயத்தின் நிர்வாகத் துறை உறுப்பினர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி லீனா நாயர், நீதித்துறை உறுப்பினரான் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பத்மநாபன் ஆகியோருடன் சேர்ந்து வழக்குகளை விசாரிக்கிறார்.

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்குகள் இந்த தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட 192 வழக்குகளில் 36 வழக்குகள் தீர்ப்பு அளித்து முடித்து வைக்கப்பட்டுள்ளன.

வீடு கட்டும் பிரச்சினை மட்டுமல்லாமல், தொழிற்சாலை தொடர்பான கட்டிடங்கள் கட்டுவதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் இந்த தீர்ப்பாயம் விசாரிக்கும்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் போன்ற யூனியன் உள்ள ரியல் எஸ்டேட் ஆணையங்களின் தீர்ப்பை எதிர்த்தும் இந்த தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
[9/28, 18:07] Sekarreporter1: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் 64 வயது முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆண்டு நவம்பரில் சென்னையில் தின்பண்டம் வாங்க சென்ற 11 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை போக்ஸோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழ்க்கில் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், முருகனுக்கு போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகளும், இந்திய தண்டனை சட்டப் பிரிவில் 5 ஆண்டுகளும் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[9/28, 20:48] Sekarreporter1: யோகா பயிற்சிகளும் மனித வாழ்வை முன்னேற்ற கூடிய கல்வி என்ற அடிப்படையில், அதன் கட்டடங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக ஈஷா அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஈஷா அறக்கட்டளை தரப்பில் கல்வி நிறுவனம் என்ற அடிப்படையில் விலக்கு அளித்து 2020ஆம் ஆண்டிலேயே அறிவித்த பிறகும், மாநில அரசால் நோட்டீஸ் அனுப்பபட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்வி நிறுவனம் என்பது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒருவரின் வளர்ச்சியை முன்னேற்றமடைய செய்வதாக இருக்க வேண்டும் என்றும், ஈஷா அறக்கட்டளை வளாகத்தை பொறுத்தவரை கல்வி கற்பிக்கும் கல்வி நிலையங்கள், தங்கும் விடுதி ஆகியவற்றிற்கான கட்டடங்கள் மட்டும் அல்லாமல், யோகா வகுப்புகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருவதாலும் அந்த கட்டங்களுக்கும் கல்வி நிலையம் என்ற அடிப்படையில்.விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (செப்டம்பர் 30) நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

You may also like...