Judge nirmal kumar j 2011 சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது

2011 சட்டமன்ற தேர்தலின்போது நடைபெற்ற தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஏப்ரல் 11ஆம் தேதி சென்னை கொடுங்கையூரில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவை சேர்ந்த ((மாவட்ட செயலாளர்)) பி.கே.சேகர்பாபு, லோகநாதன், கணேசன், சரஸ்வதி, பிரபு ஆகியோரை அதிமுகவை சேர்ந்த குமார், ஜெயபால், லதா, சீனிவாசன் ஆகியோர் தடுக்க சென்றபோது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

இரு தரப்பும் அளித்த புகாரில் இரு தரப்பினர் மீதும் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கு 2019ஆம் ஆண்டு எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட ஆஜராக விலக்கு கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுகவை சேர்ந்த ஐவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர்பாபு உள்ளிட்டோர் ஆஜராக விலக்கு அளித்தும், விசாரணைக்கு தடைவிதித்தும் உத்தரவிட்டதுடன், காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...