Jp /பவள* *விழா* *வாழ்த்துக்கள்* *அண்ணன்* *ஆர்.எஸ்.பாரதிக்கு* 💐💐💐 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாளில்  இந்திய திருநாடு விடுதலை திருநாளில் பிறந்து இன்று  *75வது* அகவையில் *பவள* *விழா* காணும்  அன்புக்குரிய 

*பவள* *விழா* *வாழ்த்துக்கள்* *அண்ணன்* *ஆர்.எஸ்.பாரதிக்கு* 💐💐💐 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாளில்
இந்திய திருநாடு விடுதலை திருநாளில் பிறந்து
இன்று
*75வது* அகவையில்
*பவள* *விழா* காணும்
அன்புக்குரிய
பெரியவர், கழகத்தின் அமைப்புச் செயலாளர்,
_ஆலந்தூர்_ *ஆர்.எஸ்.பாரதி* Ex M.P., அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்து மடல்…
💐💐💐

காஞ்சித் தலைவன்
அறிஞர் அண்ணாவின்
வழியில்
மாணவர் பருவத்தில்
ஆலந்தூர்
கிளைக் கழகத்தில்
தொடங்கிய
கழகப் பணியை
*60* ஆண்டுகளுக்கும்
மேற்பட்ட அயராத
உழைப்பால்
காவியத் தலைவர்
கலைஞரால்
கழகத்தின்
அமைப்புச்
செயலாளராய்
நியமிக்கப்பட்டு
இயக்கத்தின்
ஈடு இணையற்ற தலைவர் தளபதியின் தலைமையில்  அண்ணா அறிவாலயத்தில்
ஆற்றலுடன் பணியாற்றும்
கழகத்தின்
உண்மைத்
*தொண்டரே* !

நானிலும் போற்றும்
நகர மன்றத் தலைவராக
தொடர்ந்து மூன்று முறை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முத்திரை பதித்து
சிறந்த நகராட்சி தலைவராக
இந்திய அரசின்
விருது பெற்ற
*சாதனையாளரே* !

உள்ளாட்சி மன்றத்தில்
தொடங்கிய
அரசியல்
பொது வாழ்க்கையை
இந்திய பாராளுமன்ற
உறுப்பினராக
உயர்த்திக்கொண்ட
*உழைப்பாளரே* !

சமூகநீதி பேசும்
திராவிட திருமகனாய்
கொள்கை வழி
நின்ற போதும்
ஆக்கபூர்வ மக்கள்
பணியால்
மனுநீதி போற்றும்
நங்கநல்லூர்
அக்ரஹாரத்து
அவாள்களின்
அன்பை பெற்று
உள்ளாட்சியில்
நல்லாட்சி
நடத்திய
திராவிட மாடல் அரசியலின்
*நாயகரே* !

கால் நூற்றாண்டு காலம்
கழக வழக்கறிஞர்களின்
உரிமை குரலாய்
கழக சட்டத்துறையை
செயலாளராய்
வழிநடத்திய
*செயல்வீரரே* !

தொழிற்சங்கவாதியாய் தொழிலாளர்களின்
துயர்த்துடைத்த
தொழிலாளர்களின்
*தோழரே* !

பல கோடி மதிப்புள்ள டான்சி அரசு கரும்புத் தோட்டத்திற்குள் ஜெயா எனும்
ஊழல் யானை புகுந்து அதனை கபளீகரம் செய்த போது
ஊழல் வழக்கு எனும்
எறும்பாய்
நுழைந்து
நிம்மதியாய்
உறங்கவிடாமல்
ஏவப்பட்ட
அடக்குமுறைக்கு
அஞ்சாமல்
சிறப்பு நீதிமன்றத்தில்
தொடங்கி
உச்சநீதிமன்றம் வரை
குடைந்து
துளைத்து மமதையை அடக்கி டான்சி நிலத்திலிருந்து விட்டால் போதும் என்று ஜெயாவை ஓடவிட்ட
கலைஞரின் வீரியமிக்க
எஃகு
*ஆயுதமே* !

பதவி
சுகத்திற்காக
பாதை மாறும்
காலத்தில்
எதற்கும்
விலை
போகாமல்
இயக்கத்தைக்
காத்து நின்ற
*தூயவரே* !

எம்.ஜி.ஆர்.
இயக்கத்தை பிரித்து
என்னுடன் வா!
உனக்கு ஆனதை
செய்கின்றேன்!
என்ற
பிரிவினை
பேச்சுக்கு
எதிராக
திமுகவிற்கு
இடர் நேர்ந்தால்
கலைஞரின்
படையில்
முதலில்
யார்? யார்? நிற்பார்கள்
என்ற வினா
எழுந்தபோது
பரங்கி மலையில்
முரசு கொட்டி
முதலில் நிற்பவர் _ஆலந்தூர்_ *ஆர்.எஸ்.பாரதி*
என்று தமிழகத்திற்கு
விடை சொன்ன
*வித்தகரே* !

இந்த இயக்கம்
ஆட்சி அரியணை ஏறும்போதெல்லாம்
பதவிகளுக்காக
கூவி திரியும்
கொள்கையற்ற
காகக்
கூட்டங்களுக்கு
மத்தியில்
எப்பொழுதும்
கொள்கைக்காக
கூடிப் பொழியும்
மேக கூட்டமாய்
லட்சக்கணக்கான தியாகமிக்க தூய தொண்டர்களை தலைமைக்கு அடையாளம் காட்டும் *உத்தமரே* !
மகாகவி                                       பாரதியின் பெயரைக்     கொண்டதால்                                  உங்கள் பேச்சில்                                      *தீ*                                                      பறக்கும்                                         விடுதலை நாளில்                பிறந்ததால்                                        உங்கள் செயலில்                          எதற்கும் அஞ்சாத.                      *கம்பீரம்*                               வீற்றிருக்கும்                              பெரியார்,                                      அண்ணா,                                     கலைஞர்                                           வழியில்                                        திராவிடக் கொள்கையை        ஏற்றதால்                          *சுயமரியாதை*                      உணர்வுடன்                         எப்பொழுதும்                                       தலை நிமிர்ந்து                               நிற்கும்                                             உங்கள்

பிறந்த                              இன்நன்னாளில்

வாழ்த்தி வணங்குகின்றேன்!

 

 

*2007*
_மணிவிழா_
கண்டபோது
வாழ்த்தினேன்

இன்று *பவளவிழாவில்* வாழ்த்துகின்றேன்!

எதிர்வரும்
*நூற்றாண்டு*
விழாவிலும்
உங்களை
வாழ்த்திட
எல்லாம்
வல்ல
இயற்கை அன்னை
நல்வாய்ப்பு நல்க
வேண்டுகின்றேன்!
🙏🙏🙏
*வாழ்த்துக்களுடன்* _செந்தமிழ்ச்செல்வன்_
*சி.ஜெயபிரகாஷ்* 💐💐💐💐

You may also like...