Court news top news

 

[7/30, 11:24] Sekarreporter: கிருஷ்ணகிரி மற்றும் வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த தேர்தல் வழக்குகளுக்கு பதிலளிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகத்திலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது

இரு தேர்தல் வழக்குகளையும் விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கு தொடர்பாக செப்டம்பர் 6 ம் தேதிக்குள் பதிலளிக்க இரு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டார்.
[7/30, 14:54] Sekarreporter: நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான வழக்கு

நடப்பு கல்வியாண்டில் 85 % கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..

ஊரடங்கு, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாணவர்களுக்கு 75 % செலுத்தலாம்…

சென்னை உயர்நீதிமன்றம்
[7/30, 15:42] Sekarreporter: தனியார் பள்ளிகள் 85 சதவீதம் வரை கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் கட்டணம் செலுத்தவில்லை அல்லது தாமதமாக செலுத்துகிறார்கள் என்ற காரணத்திற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, முறையே 40 மற்றும் 35 சதவீதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் எனவும், தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நடப்பு 2021-22ம் கல்வியாண்டிலும், 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து, ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில பள்ளிகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது எனவும், தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் எனவும், கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தனியார் பள்ளிகள் 2019-20ல் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 85 சதவீதத்தை வசூலிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்திலும் வருமானம் இழக்காத துறைகளில் பணியாற்றும் பெற்றோர்களிடமிருந்து 85 சதவிதம் வரை வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். வருமானத்தில் இழப்பு ஏற்பட்ட பெற்றோர்களிடமிருந்து 75 சதவீதத்தை வசூலிக்கவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் இந்த தொகையை 6 தவணைகளாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 1அம் தேதிக்குள் செலுத்தலாம் எனவும் கால அவகாசம் வழங்கியுள்ளார்.

கொரோனா தாக்கத்தால் வேலை இழப்பு, தொழில் முடக்கம் போன்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர், கட்டணத்தில் சலுகை கோரி அந்தந்த பள்ளிகளை நாடும்படியும், அதில் பள்ளிகள் முடிவெடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

2020-21ஆம் கல்வியாண்டில் நிலுவை கட்டணம் இருந்தால் அதை பள்ளிகள் வசூலித்துக்கொள்ளவும் அனுமதித்துள்ளார். எந்த ஒரு மாணவரும் கட்டணம் செலுத்தவில்லை அல்லது தாமதம் என்ற காரணத்திற்கான அவர்களுக்கு வழங்கப்படும் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகளில் பங்கேற்பதில் தடை ஏதுமிருக்கக் கூடாது எனவும் பள்ளிகளுக்கு அறிவுறித்தி உள்ளார். அதுதொடர்பான புகார்களை தீவிரமாக கருதி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்த முடியாததால் தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களை அனுகினால் அவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவிட்டுள்ளர்.

கட்டண சலுகையில் பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் பிரச்சனை எழுந்தால் மாவட்ட கல்வி அதிகாரிக்கு மனு அளிக்கவும், அதை 30 நாட்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுடைய கட்டண விவரங்களை இணையதளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என நீதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை 8 வாரங்களில் நிரப்ப வேண்டும் எனவும், 85 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதித்து திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கையை தமிழக அரசு 2 வாரத்தில் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
[7/30, 16:12] Sekarreporter: அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை , பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலா தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு 4வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பிரதான வழக்கில் இருந்து தினகரன் விலகியதால், அவரது பெயரை நீக்கி திருத்த மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது குறித்த விசாரணையை நீதிபதி, ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[7/31, 14:13] Sekarreporter: தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கில் விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை தலைவர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில்,, திறந்த நிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
[7/31, 14:13] Sekarreporter: திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை என்னும் கிராமத்தில், 160 ஏக்கர் பரப்பில் உலக தரம் வாய்ந்த துணைக்கோள் நகரம் அமைக்க அரிஹந்த் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் அந்த பகுதியில் உள்ள கோவில் நிலம் மட்டுமல்லாமல் திருவாழி குட்டை மற்றும் அம்பாள் ஏரிக்களுக்கிடையே 60 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த ராஜா மற்றும் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், கோவில் நிலம் மற்றும் நீர்நிலைகளை தங்களுக்கு சொந்தம் எனக்கூறி தனியார் நிறுவனம் சாலை அமைக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

நீர் நிலைகளை வணிக பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதை கவனித்தில் கொள்ளாமல் அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், ஏரி மற்றும் கோவில் நிலத்தில் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி தமிழ் செல்வி அடங்கிய அமர்வு, ஏரிகள் மீது சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டது.
[7/31, 15:16] Sekarreporter: லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை 423 கோடி ரூபாய்க்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலனுக்கு வழங்கும் நடவடிக்களுக்கு ஒப்புதல் அளித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

பிரபல தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமியின் அப்பு ஹோட்டல் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்று இருந்தது . அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அப்பு ஹோட்டல் நிறுவனம் திவாலானதாக கருதி, சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களையும், கும்பகோனத்தில் உள்ள ரிவர்சைட் ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்து.

அதை விசாரித்த தீர்ப்பாயம் அந்த சொத்துக்களின் மதிப்பை கணக்கிடுவதற்கும், அவற்றை வாங்குவதற்கான நபரை கண்டறிவதற்கும் தீர்வாளரை நியமித்தது. இந்த சொத்துக்களின் மதிப்பு 730.88 கோடி ரூபாய் எனவும், 569.33 கோடி ரூபாய்க்கு வாங்குபவர்களுக்கு விற்கலாம் எனவும் தீர்வாளர் ((resolution professional)) முடிவெடுத்தார். அவற்றை வாங்குவதற்கு மாதவ் திர், எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்கே ராஜகோபாலன், கோட்டக் ஸ்பெஷல் சிச்சுவேஷன் ஆகியவை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த 423 கோடி ரூபாய்க்கு அவற்றை விற்கலாம் என அளித்த பரிந்துரையை ஏற்ற தீர்ப்பாயம், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் உள்ளிட்ட 4 சொத்துகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவன எம்.கே.ராஜகோபாலனிடம் மாற்ற அனுமதித்து.

இதை எதிர்த்து அப்பு ஹோட்டல் நிறுவனத்தின் இயக்குனர் பழனி ஜி பெரியசாமி, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் எம். வேணுகோபால், தொழில்நுட்ப வல்லுநர் உறுப்பினர் வி.பி.சிங் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அப்போது இந்த வழக்கில் பழனி ஜி. பெரியசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், ராஜீவ் ரஞ்சன், வழக்கறிஞர்கள் கே.சுரேந்தத், செந்தூரி புகழேந்தி ஆகியோர் ஆஜரானார்கள். தீர்வாளர் தர்மராஜன் ராஜகோபாலன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், வழக்கறிஞர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். எம்.கே.ராஜகோபாலன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜி சீனிவாசன், வழக்கறிஞர் தேவசிஷ் பருக்கா ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்பு ஹோட்டல்ஸ் தரப்பில் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், தங்கள் நிறுவன கடனை அடைக்க மற்ற வங்கிகள், நண்பர்கள் மூலம் 450 கோடி ரூபாயை ஏற்பாடு செய்ய தயாராக இருப்பதாகவும், அதனால் தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

தீர்வாளர் ராதாகிருஷ்ணன் தர்மராஜன் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ராஜகோபாலன் ஆகியோர் தரப்பில் மதிப்பீடு முறையாக செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்று தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் தவிற் ஏதும் இல்லை என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் வழக்கு குறித்து இருவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை அப்பு ஹோட்டல்ஸ் சொத்துக்களை எம்.கே.ராஜகோபாலனுக்கு மாற்றும் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த தீர்ப்பாய உத்தரவிற்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
[7/31, 15:16] Sekarreporter: திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், திறந்தவெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கில் விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை தலைவர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில்,, திறந்தநிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
[7/31, 15:16] Sekarreporter: திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

துணைக்கோள் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு.

கோவில் நிலம் மற்றும் நீர்நிலைகளை தங்களுக்கு சொந்தம் எனக்கூறி தனியார் நிறுவனம் சாலை அமைக்க அனுமதி பெற்றுள்ளது. – மனுதாரர்.

நீதிபதி கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

You may also like...