Chief justice bench order சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  1. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்ட தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனங்களும் மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கான முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் பணி நியமனம் தொடர்பாக தற்காலிக விதிகளை வகுத்து கடந்த ஜூலை 27ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதில், இப்பதவிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்து செய்யக் கோரி அகில இந்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பிலும், ஒரு அரசு மருத்துவர், மருத்துவ மேற்படிப்பு மருத்துவர் ஒருவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்த போது, 2018ம் ஆண்டுக்கு பின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள் உள்ளதாகவும், பலர் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த தற்காலிக விதிகள், ஆசிரியர் பணிக்கு மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக இருப்பதால், இந்த விதிகளின் அடிப்படையில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வரை நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேசமயம், வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று நவம்பர் 10ம் தேதிக்குள் அரசின் விளக்கத்தை தெரிவிக்க அவகாசம் வழங்கிய நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக விதிகளின் அடிப்படையில் எந்த நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...