Category: Uncategorized

நிலம் விற்பனை தொடர்பான பிரச்சினையில் ஒரு குடும்பத்தை வீட்டை விட்டு  விரட்டியதாக காவல்துறை  உதவிஆய்வாளர்  மீதான புகாரை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர்  விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் தன் மகனுடன் சேர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்  திருவாரூர் மாவட்டம், பொதக்குடி கிராமத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசப் நாசியா ஆகியோர் நிலத்தை வாங்க முன் வந்தனர். இதற்காக முன்தொகை தந்தனர். இதன்பின்னர் விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி பணத்தை திருப்பிக் கேட்டனர்.   பணத்தை உடனே திருப்பிக் கொடுக்க எங்களால் முடியவில்லை. இதையடுத்து எங்கள் மீது கூத்தாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.   புகாரை பெற்ற உதவிஆய்வாளர் தங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்தார். 3 வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி வெற்றுக்காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.   இதுகுறித்து திருவாரூர் காவல்துறை துணை கண்கானிப்பாளரிடம்  புகார் செய்ய முயற்சித்தோம். ஆனால், கடந்த நவம்பர் 18ம் தேதி, உதவிஆய்வாளர் மற்றும் நிலத்துக்கு முன்தொகை கொடுத்த 3 பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர்.   உதவிஆய்வாளர் என் கணவரையும், என்னையும் அடித்து எங்களது வீட்டை விட்டு விரட்டினார். தற்போது எங்கள் வீட்டை அவர்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்திக் கொண்டனர்.   இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவும், எங்கள் வீட்டை எங்களிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த மாதம் 27ம் தேதி தபால் மூலம் புகார் அனுப்பியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.அவரது வீடும், வீட்டுக்குள் உள்ள விலை உயர்ந்த பொருட்களும் சட்டவிரோதமாக கையகப்படுத்தி விட்டனர் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக கூத்தாநல்லூர் உதவிஆய்வாளறுக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதால், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர்  விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த உத்தரவில், வீட்டுக்குள் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுக்கக்கூடாது என்பதை நினைவுப்படுத்துகிறேன். என்று தெரிவித்த நீதிபதி வழக்கு விசாரணையை  16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

நிலம் விற்பனை தொடர்பான பிரச்சினையில் ஒரு குடும்பத்தை வீட்டை விட்டு விரட்டியதாக காவல்துறை உதவிஆய்வாளர் மீதான புகாரை திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் தன் மகனுடன் சேர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு...

வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த அவதூறு கருத்துக்களை வெ

கண்ணகி – முருகேசன் ஆணவ கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜகவை சேர்ந்த தடா பெரியசாமி, முருகேசன் தந்தை சாமிக்கண்ணு, வழக்கறிஞர் பி.ரத்தினம் உள்ளிட்டோருக்கு சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக தொல். திருமாவளவன் தொடர்ந்துள்ள...

சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென

சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள்...

Honor and Remembrance’

Honor and Remembrance’

[12/2, 09:54] Thamilarasan: “In Honor and Remembrance’ The Delda’s most famous criminal lawyer, Rationalist, Octogenarian Shri A. Balaguru, who has left for his heavenly abode, on 20/11/2021, His portrait opening ceremony will be held...

மீரா ஆறுமுகம் வழக்கறிஞர்  அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள். அறிவோமா ஆன்மீகத்தில் இன்று..

மீரா ஆறுமுகம் வழக்கறிஞர் அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள். அறிவோமா ஆன்மீகத்தில் இன்று.. மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: 1168 – 75 -> சுவாமி கோபுரம் 1216 – 38 -> ராஜ கோபுரம் 1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்...

Ponichery election case

Ponichery election case

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறி, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுத்ததை எதிர்த்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது....

Encroachment acj order

Encroachment acj order

மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகள் குறித்தும் அந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள்,...