Adv Suryaprakasam APS: 15.11.2020 நீதியின் வெளிச்சம் ஏழைகளில் இல்லங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று உழைத்தவர்.

[11/15, 12:31] Adv Suryaprakasam APS: 15.11.2020

நீதியின் வெளிச்சம் ஏழைகளில் இல்லங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று உழைத்தவர்.

“பொதுமக்களுக்கு பயன் தரக் கூடிய நீதித்துறையை அணுகுவதில் ஒரு போதும் பணம் தடையாக இருக்க கூடாது.”
என்ற இலட்சியத்தோடு செயல்பட்டவர்.

ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி கிடைப்பதற்கு வழிகாட்டியவர்.

“நான் சாதி,மத, இனம்,மொழி என எல்லா பேதங்களுக்கும் எதிரானவன்!”
என்று தன்னை அடையாளப்படுத்தியவர்.
மாண்புமிகு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள்.
இன்று அவரது (நவம்பர் 15)
பிறந்த நாள்.

சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பாலக்காட்டில் 15.11.1915 ல்
பிறந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார்.

புகழ் பெற்ற வழக்கறிஞராக விளங்கிய அவரது தந்தை
வி.வி. ராமா அய்யர் அவர்களிடம் இளம் வழக்கறிஞராக 1937ல் தமது பணியைத் தொடர்ந்தார்.
தலைச்சேரி நீதிமன்றங்களில் வாதாடத் தொடங்கியவர். பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர்களுக்காக வாதாடினார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கிருஷ்ணய்யர் கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டார்.

தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆஜரானதால் கோபம் கொண்ட காவல்துறை, தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் ல் வழக்குப் பதிவுசெய்து 1948 மே மாதத்தில் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது.அதன்பிறகு
பொது வாழ்வில் ஈடுபட்டார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு
1952-ல் அவர் மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.
தனது தொகுதிப் பிரச்சனை மட்டுமின்றி மாகாணம் முழுவதற்குமான பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்தார்.

அதன்பின்னர் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு கேரள சட்டமன்றத் தேர்தலில் வென்று 1957-ல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசில் சட்டம், நீதித்துறை, உள்துறை, நீர்ப்பாசனம், மின்சாரம், சிறை, சமூகநலம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.

அமைச்சராக இருந்த போது
சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் கொண்டு வந்தார்.

‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார்.

சட்ட அமைச்சராக வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார்.

சிறைச் சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகளையும்,
சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்படுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்த போது கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், குடிநீர்த் தேவைகளைத் தீர்ப்பதற்காகவும்,
கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம் முன்வைக்கப் பட்டபோது கேரள முதல்வராக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு அவர்களும், வி.ஆர். கிருஷ்ணய்யரும் சம்மதித்தனர்.
வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கேரள சட்டமன்றத்தில் எழுப்பிய பிரச்சனையை எதிர்கொண்டு வெற்றி கண்டார்.

கம்யூனிஸ்ட கட்சி பிளவுபட்ட பின்னர் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி.ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்த பிறகு
அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார்.

1968 ஜூலை 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்,
1973 ஜூலை 17-ம் தேதி இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார்.

“பொதுமக்களின் அபரிதமான நம்பிக்கையும்,சமூக பொறுப்பையும்,அம்பேத்கர் சட்டத்தின் மீது வைத்திருந்த விசுவாசத்தையும் உணர்ந்து நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.”
என்று நாட்டில் உள்ள நீதிபதிகளுக்கு வழிகாட்டும் வகையில் பணிபுரிந்தார்.

சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

சாதாரண மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய கடிதங்களை அனுப்பி வைத்தால், அது கூட வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அடித்தள மக்களுக்கு அவர் வழங்கிய பல தீர்ப்புகள் பல பின்னர் சட்டமாக இயற்றப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றன.

அவர் சிறையில் இருந்த அனுபவத்தை பயன்படுத்தி,
அமைச்சராகவும், நீதியரசராகவும் இருந்த போது
சிறைகளில் இருந்த அவலங்களைப் போக்கி சிறைகளைச் சீர்படுத்தினார்.

வழக்குரைஞர் பணியாற்றிய போதும்,
சிறைக் கைதியாக அடைபட்ட போதும்,
சட்ட மன்ற உறுப்பினர்,
மாநில அமைச்சர்,
உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர் என்று உயர்ந்த போதும்,
ஏழை மக்களின் இன்னல் தீரவும்,
நாதியற்ற மக்களுக்கும் நீதி கிடைக்கவும் தனது அறிவாற்றலைப் பயன்படுத்தியவர் அதற்காகவே பாடுபட்டவர்.தனது 65 ஆவது வயதில் ஓய்வு பெற்றார்.

வேலைக்குத்தான் ஓய்வு; சேவைக்கு அல்ல,
என்ற இலக்கணத்தொடு
தமது 65 வது வயதில்
1980-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 100 வது வரை தன்னை முதுமை நெருங்க விடாமல் 35 ஆண்டுகள் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று உழைத்தார்.

தொடர்ந்த செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் இந்திய அரசால் 1999 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

“பொதுநலன்” வழக்குகளின் முன்னோடியாக இருந்தவர்… சிறைக் கைதிகளின் நலனிலும் அக்கறை காட்டியவர்.
சுற்றுச் சூழல் காப்பதற்கு வழி காட்டியவர்.
மரண தண்டணைக்கு எதிராக இயங்கியவர்,
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கு
நீதி கிடைக்கவும் வழிகாட்டியவர்,
சுமார் 100 புத்தகங்களை எழுதியவர்.
என்று பன்முகத் தளங்களில் இயங்கிய பெருமகனின்
நூறாவது பிறந்த நாள்
15.11.2014 அன்று கொண்டாடிய ஒருவாரத்தில் கொச்சியில் தனியார் அறக்கட்டளை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு
டிசம்பர் 4ம் தேதி இயற்கை எய்தினார்.

ஆம்
ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக உழைப்பதையே தனது வாழ்கையாக கொண்டு,
சக்தியற்றவர்களின் உரிமைகளுக்காக ஒலித்தவரின் குரல் ஓய்ந்தது.

சிறையில் இருந்தவர்,
சிறைத் துறைக்கே அமைச்சர் ஆனவர்,
உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசராக உயர்ந்தவர்.

எல்லா நிலையிலும்
நீதியின் வெளிச்சம் ஏழைகளில் இல்லங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று உழைத்த மாமனிதர் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களை உண்மையாகப் போற்றுவது என்பது சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் வழங்கப்படும் இலவச சட்ட உதவிகளை அனைவருக்கும் அறியச் செய்வதே ஆகும்.

அன்புடன்,
அ. முகமது ஜியாவுதீன்
[11/15, 12:33] Sekarreporter 1: ..

You may also like...