_திருவாரூர்_ _திராவிட_ _இயக்கத்_ _திருமகன்_ _அண்ணன்_ *அ.அ* . *ஜின்னா* EX.M.P *அவர்களுக்கு*  *வீரவணக்கம்* !   ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தின் திருவாரூரில் பிறந்து மாணவர் பருவத்திலேயே திராவிட

_திருவாரூர்_ _திராவிட_ _இயக்கத்_ _திருமகன்_ _அண்ணன்_ *அ.அ* . *ஜின்னா* EX.M.P *அவர்களுக்கு*  *வீரவணக்கம்* !   ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தின் திருவாரூரில் பிறந்து மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்க உணர்வில் வளர்ந்து திமுகழகத்தின் ஆற்றல் செயல்மிகு வீரராய் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக கழகப் பணியாற்றி இன்று உடல்நலக்குறைவின் காரணமாக இயற்கை எய்தியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் அ.அ.ஜின்னா அவர்களின் நினைவை போற்றி அவர்தாம் இயக்கப் பணியை  பகிர்கின்றேன்.  _________________ *அண்ணாவின்* *சிலையும்* *அ.அ.ஜின்னாவின்* *பணியும்* ____________________________1967 ஆண்டு காலத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும் பொழுது தனது கழகப் பணியால்  பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட இயக்கத்தின் மூத்த முன்னோடிகளின் பாராட்டைப் பெற்று  கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் மாணவர் கழகத்தின் வேட்பாளராக களம் இறக்கப்படுகிறார். காங்கிரஸ் பேரியக்கம் வலிமையாக திகழ்ந்த மாணவர் காங்கிரஸ் இயக்கத்தின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு அனைத்து தரப்பு மாணவர்களின் ஆதரவோடு மாணவர் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தான் வெற்றி பெற்றால் வரலாற்று சிறப்புமிக்க சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் தமிழர்களின் தன்மானத்தை மீட்டெடுத்து தலை நிமிரச் செய்திட்ட பேரறிஞர் அண்ணாவின் சிலையை அமைப்பேன்! என்று வாக்குறுதி வழங்குகின்றார். தமிழகத்தின் முதல்வராக மகுடம் சூடிய அண்ணாவிடம் அவர்தம் சிலையை நிறுவவும் அச்சிலையை அண்ணாவே திறக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றார். ஆற்றல் மிகு தம்பியின் அன்பு வேண்டுகோளை  அறிவுலக மாமேதை அறிஞர் அண்ணாவும் ஏற்கின்றார். மாணவர் காங்கிரஸை சார்ந்தவர்கள் சிலையை அமைக்க கடும் எதிர்ப்பை தெரிவித்த போது எதற்கும் அஞ்சாமல்  கல்லூரி வளாகத்தில் அமையப்போகும் அண்ணாவின் சிலையை அழகுற வடிவமைக்க அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழினத் தலைவர் கலைஞரின் ஆலோசனையை ஏற்கின்றார்.சிலை வடிவம் பெறுகின்ற போது அண்ணா உடல் நலிவுற்று மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள நேருகின்றது. சிகிச்சை முடித்து தாயகம் திரும்பிய அண்ணாவின் திருக்கரங்களால் சிலையை திறப்பு விழா தேதிக்காக எதிர் நோக்குகிறார். அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்று வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த உலக தமிழ் மக்களின் எண்ணத்தில் இடியாய் பேரறிஞர் 1969பிப்ரவரி  திங்கள் மூன்றாம் நாள் பேரறிஞர் பெருந்தகை மறைவு செய்தி எட்டுகிறது. இளம் மாணவர் தலைவன் ஜின்னாவின் கனவும் தகர்கின்றது. மனம் தளராத மாணவர் ஜின்னா அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற அவர்தாம் ஆருயிர் தம்பியாம் அன்றைய தமிழக முதல்வர் தலைவர் கலைஞரின் திருக்கரத்தால் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் திறக்கப்பட்ட அண்ணாவின்  முதல் சிலையாக சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் 12.03.1969 சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆற்காடு இரட்டையர்கள் என்று போற்றப்பட்ட மருத்துவர் ஏ.லட்மணசாமி முதலியார் அவர்களின் முன்னிலையில் சிலை அமைப்புக்குழு தலைவராக இருந்து திறப்பு விழா நடத்துகிறார்.( அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது 01.01. 1968 ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றதை முன்னிட்டு நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஏற்பாட்டில் சார் ஏ. ராமசாமி முதலியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது). சென்னை சட்டக் கல்லூரியில் அண்ணாவின் சிலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராடுவோம் என்று அன்றைய காங்கிரஸ் மாணவர் இயக்கத்தினர் போராட்டம் அறிவித்த போது கர்மவீரர் காமராஜர் போராட்டத்தை திரும்ப பெற்று அண்ணாவின் சிலை திறப்பிற்கு எந்தவித இடையூறும் காங்கிரஸ் மாணவர் இயக்கத்தினர் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டதாக செய்தி).  _____________________________
*மிசா* *கொடுஞ்சிறையும்* *அன்னையின்* *இறப்பும்* __________________
மிசா சிறையில் இன்றைய கழக தலைவர் மாணவர்கள் முதல்வரோடு அண்ணன் ஜின்னா 1976 நெருக்கடி நிலையில் இயக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட மாபெரும் அடக்கு முறையின்  வடிவமாய் ஏவப்பட்ட மிசா கருப்பு சட்டத்திற்கு கொடும் சிறையில் தள்ளப்பட்ட இயக்கத்தின் ஈடு இணையற்ற தலைவர் இன்றைய தமிழக முதல்வர் அவர்களோடு அண்ணன் ஜின்னா அவர்களும் பிசா சிறையில் அடைக்கப்படுகின்றார் தான் சிறையில் இருக்கும் பொழுது அவருடைய ஆருயிர் என் உயிர் இழக்க அவரின் இறுதிச் சடங்கிற்கு சிறையில் இருந்து பரோலில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சிறை கொட்டடியில் அடைக்கப்படுகின்றார். அப்படிப்பட்ட தியாக மறவர் தான் அண்ணன் ஜின்னா. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கழகத்தினர் மீது போடப்பட்ட எண்ணற்ற வழக்குகளுக்கு எதிராக இலவசமாய் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக வழக்கறிஞராய் மிக நீண்ட காலம் பணியாற்றிய தூய தொண்டர். ___________________________*அண்ணா* *இருந்த* *மேலவைக்கு* *தம்பியை* *அனுப்பிய* *கலைஞர்________________* இயக்கத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அவரின் தியாகத்தை போற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் திமுக கழகத்தின் முதல் மேலவை உறுப்பினராக பொறுப்பேற்ற 03.04. 1962 நாளில் அண்ணன் ஜின்னா அவர்களை அறிஞர் அண்ணா ஆறாண்டுகள் அலங்கரித்த அதே இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக 03.04.2008 ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அனுப்பி வைத்தார். தன் வாழ்நாளில் இறுதி மூச்சு வரை இயக்கத்திற்காக உழைத்தவர் அண்ணன் ஜின்னா வருகிற 26.11.2022 அன்று கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரின் பொற்கரங்களால் அவர் எழுதிய நூல்களை வெளியிட நாள் குறித்து காத்திருந்தது பொழுது தன் இன்னுயிரை இழந்துவிட்டார். கழக வழக்கறிஞராய் தேர்தல் களத்தில் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது அவரின் கரகரத்த குரலால் ” *உயர்* *நீதிமன்ற* *வழக்கறிஞர்களாகிய* *நாங்கள்* *உங்களுடைய* *உதயசூரியன்* *சின்னத்தில்* *வாக்கு* *கேட்டு* *வந்திருக்கின்றோம்*” என்று முழங்கும் அவருடைய கொள்கை முழக்கம் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இயக்கத்தின் வெற்றிக்கு எள்ளளவும் எள் முனையளவும் உழைக்காமல் கழகம் ஆட்சி பொறுப்பிற்கு வருகின்ற பொழுதெல்லாம் எது கிடைக்கும் என்று அலையும் சந்தர்ப்பவாதிகள் மத்தியில் இயக்கத்தின் வெற்றிக்காக உழைத்து விட்டு தலைவரின் தலைமையில் நல்லாட்சி அமைந்தால் போதும் என்று எதையும் எதிர் நோக்காத அண்ணன் அ.அ.ஜின்னா போன்ற தூய தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவராலும் அசைக்க முடியாது என்பது தின்னம். இயக்கத்தின் மீது பாரா பற்றும் தமிழினத் தலைவர் கலைஞரின் வழியில் தலைவர் தளபதியின் உற்ற தோழராய் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இயக்க பணியாற்றிய அவரின் நல்லொடலுக்கு காலையில் கடும்மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்று விட்டு மாலையில் இயக்கத்தின் ஈடு இணையற்ற வீரராய் விளங்கிய அண்ணன் ஜின்னாவிற்கு அஞ்சலி செலுத்தி அவரின் தூய பணியை போற்றிய *மாண்புமிகு* *தமிழக* *முதல்வர்* அவர்களுக்கு கழக வழக்கறிஞர் அணியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணன் அ.அ.ஜின்னா எனும் மாபெரும் தொண்டனை போற்றிப் புகழ்ந்து அவர் புகழ் நீடித்து நிலைத்திட தலைவரின் வழியில் வணங்கி வேண்டுகின்றேன்!
*வீர* *வணக்கத்துடன்* _செந்தமிழ்செல்வன்_ சி. ஜெயபிரகாஷ் 🙏🙏🙏

You may also like...