[10/9, 14:09] Kalaimani Mhaa: 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அடக்கமும், அன்பும் ஒருங்கிணைந்த ஒரு மனிதநேயப்பண்பாளர் திரு.நீதியரசர் மணிக்குமார் அவர்கள் நலமுடன் நீடுவாழ்க!! ================= எனது வழக்கறிஞர் அறை எண்.13க்கு ஒரு அறை தள்ளி அவரது அறை எண்.17 இருந்தது. அவரது தந்தை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சாமிதுரை அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவரின் மகன் இவர் என தெரியா வண்ணம் அடக்கத்துடன், புன்னகைத்து அறையில் அமர்ந்திருப்பார். நான் அவ்வறையை கடக்கும்போது இருவரும் புன்னகைத்து வணக்கத்தை பரிமாறிக்கொள்வோம். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்ல ஒரு நாளில் பலமுறை என் அறையை அவர் கடக்கும் போது எல்லாம் இப்படி நடக்கும். சிலமுறை நேரில் வந்து வழக்கு பற்றி கேட்பார். அன்று எப்படி அவருடைய குணம் இருந்ததோ, அதில் சிறிதளவும் மாற்றமில்லா தன்மை அவர் நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னும் இருந்தது வியப்பான ஒன்று. நான் 91ல் விடுதலைப்புலிகளின் வழக்குகளை ஒருவனாகவே இருந்து அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் ஆஜரான நிலை வந்தபோது நேரமின்மை என்னை அழைக்கழித்துக்கொண்டிருந்தது. அக்காலத்தில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் வைத்து திரு.விருப்பலிங்கம் என்பவரை கள்ளச்சாராய வியாபாரி எனக்கூறி குடும்பத்தோடு கைது செய்து வைத்து, அவர் மட்டும் சித்தரவதை செய்து கொல்லப்பட்டார். திரு.விருப்பலிங்கம் சமூக நல்லிணக்கத்திற்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்றவராக இருந்து கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடியவர் என்பதால் உணர்வுப்பூர்வமான போராட்டத்தில் இறங்கினேன். அவரின் சடலத்திற்கு மறு கூராய்வு உத்திரவு வாங்கி வழக்கின் முடிவில் அக்காவல் நிலையத்தில் அப்போது பணிபுரிந்த ஆய்வாளருக்கும், துணை ஆய்வாளருக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக்கொடுத்தோம். இந்த வழக்கிற்கு முன் ஒரு கொலைவழக்கில் விருப்பலிங்கம் உட்பட அவர் குடும்பத்தினர் 11 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு பிணையில் இருந்தனர். கொலை செய்யப்பட்டவர் அப்போது அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களின் உதவியாளர் என்பதால் வழக்கு விஸ்வரூபம் எடுத்திருந்தது. இச்சமயத்தில்தான்இந்த மேற்படி விருப்பலிங்கம் காவலில் கொல்ல பட்ட வழக்கும் நடந்தது. பின்னாளில் நான் நடத்திய மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் விருப்பலிங்கம் இறந்து விட்டதால் அவரை நீக்கி உத்தரவிடும்போது, அவர் உயிரோடிருந்தால் எப்படி விடுக்கப்பட்டிருப்பாரோ அந்த நிலையை அவரது குடும்பம் பெறவேண்டும் என்ற என் வேண்டுகோள் உயர்நீதிமன்ற அமர்வால் ஏற்கப்பட்டது. இந்த வழக்கை நீதியரசான பின்னும் நினைவில் கொண்டு, ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் முன் கூறி என்னை கூச்சப்படுமளவுக்கு திரு.மணிக்குமார்புகழ்ந்து பாராட்டுவார். மணல் கொள்ளை வழக்கு உச்சத்தில் இருந்த நிலையில் திரு.மணிக்குமார் அவர்களின் சமூக அக்கரையின் உச்சத்தை கண்டேன். நான்கு மாவட்ட ஆட்சியர், தலைமை வழக்கறிஞர்கள் என நீதிமன்ற கூடமே நிறைந்திருக்க, நான் வேறு வழக்கிற்காக அமர்ந்திருந்த போது இம்மேற்கண்ட குள்ளஞ்சாவடி வழக்கை குறிப்பிட்டு, நான் வெட்கப்படுமளவில் என்னை புகழ்ந்து பாராட்டிய தன்மை வேறு யாருக்கும் வராது. தலைமை வழக்கறிஞர் மூலம் என்னிடம் ஆவண புகைப்படங்களை நீதிமன்றத்தில் காட்டச்செய்து, உங்களை இவ்வழக்கில் வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கிறேன் என்று கூறியதும் நான் பதட்டமடைந்தது கண்டு, பின் அதனை தவிர்த்தார். ஒவ்வொரு முறையும் சந்திக்க நேரிடும் போதெல்லாம் பாராட்டி அடுத்தவருக்கு அறிமுகம் செய்யும் பெருந்தன்மை அவருக்கு மட்டுமே உரித்தானது. சமீபத்தில் மெகா லோக் அதாலத் நடந்தபோது அதுபோன்றே மற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மத்தியில் வைத்து பாராட்டிவிட்டு, அவர்கள் ஆயுள்தண்டனை ரத்தானதற்கு வருத்தம் தெரிவித்தார். இவ்வளவுக்கும் அவர் காவல்துறை அதிகாரிகள், அவர்களின் சீருடைகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர். அவரே அப்படி அங்கலாய்த்த போதுதான் அந்த வழக்கில் எவ்வளவு கரிசனம் காட்டியிருந்தார் என்பது எனக்கு புரிந்தது. உண்மைதான்! மேல்முறையீடு நடந்தபோது சம்பந்தப்பட்ட உறவினர் மேல்முறையீட்டு வழக்கில் பங்குபெற வேண்டாம் என்று கூறியதால், நான் தயாராக இருந்தபோதும் தலையிடமுடிய வில்லை. இவ்வளவையும் நான் எழுத நேரிட்டதற்கு தனக்கு சம்பந்தமே இல்லா வழக்கில் காட்டிய அக்கறையும், அதில் பங்குபெற்ற வழக்கறிஞரையும் பாராட்டி வெளிப்படுத்திய தன்மை உண்மையான மனிதநேயம் உடையவரை தவிர வேறு யாருக்கும் வராது. இம்மேற்படி மணல் கொள்ளை வழக்கின்போது அவர் என் மீது வைத்திருந்த, காட்டிய தரிசனத்தை, மதிப்பை கண்ணுற்ற சில வழக்கறிஞர்கள் அவர்கள் பதிந்த வழக்கில் என்னை ஆஜராக கேட்டபோது நான் மறுத்துவிட்டதோடு அல்லாமல் அவர் மன்றத்தில் நான் எந்த வழக்கையும் வராமல் தவிர்த்தேன். நீதியை நேர்மையுடன் கடைபிடிக்கும் நல்லதொரு நீதிபதிமீது வேறு தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற அச்சம் ஒரு காரணம். எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், மதிப்பீட்டுக்கும் அசராத மன வலியைக் காட்டி, புன்னகையுடன், நேர்மையுடன் நீதி வழங்கிய அவரது பண்பு என்றென்றும் நினைவிலிருக்கும். நீதியின் வரலாற்றிலுமிருக்கும். அவரது தந்தைக்கு முன் பல வழக்குகளை நடத்தியுள்ளேன். அவரையும் இவரையும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடு காட்டுவது தவறு. காலங்கள் வேறுபட்டவை. இன்றைய நீதிமன்ற வழக்குகள் போல அக்காலத்தில் அமைந்திருக்கவில்லை. அவ்வளவில் மிகச்சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். அவரது பணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முடிந்தாலும் இந்தியாவின் நமது அண்டை மாநில மக்களுக்கு சென்று சேர்ந்த அவரது உயரிய பண்பும், எண்ணங்களும் விரைவில் உச்சநீதிமன்றம் வரை சென்று சேரும் என்ற நம்பிக்கையுடன் அவ்வாறே அமைய வாழ்த்துகிறேன். அண்மையில் பெரியார் சிலைகளில் உள்ள கல்வெட்டுகளை அகற்றக் கோரிய வழக்கை, அவ்வாறு கருத்து வேறுபாடுகளை தெரிவிக்க அவருக்கு உரிமையுண்டு என்ற தீர்ப்பை கூறி தள்ளுபடி செய்த துணிவு தனிப்பட்ட முறையில் எவரையும் கவரும் செயல்தான். என் மீது அவர் வைத்திருந்த தனிப்பட்ட அன்பும், பாசமும் என்னை என் இறுதிக்காலம் வரை நெகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். என் தலைமுடிக்கு சற்று கருமை தேவை என்றும், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்தது போன்றே இப்போதும் உடலமைப்பை வைத்துள்ளீர்கள் என்றும் சுட்டிக்காட்டி பாராட்டிய அக்கரை நன்றிக்குரியது. எனது வயது மூப்பினால் அவரை நல்ல உடல்நலத்துடன், மகிழ்ச்சியுடன் நீடு வாழ்ந்து, எங்கிருப்பினும் நீதிப்பணியுடன், சமூகப்பணியும் ஆற்ற பேரன்புடன் வாழ்த்துகிறேன்! [10/9, 14:09] Sekarreporter1: Super வாழ்த்து sir

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CALL ME