பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்து சாலையில் தடுமாறி விழுந்தார். இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயராமனை 12 நாட்கள் கழித்து கைது செய்தது. இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்பு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்து சாலையில் தடுமாறி விழுந்தார்.

இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயராமனை 12 நாட்கள் கழித்து கைது செய்தது.

இச்சூழலில் சுபஸ்ரீயின் தந்தை ரவி, தனது மகளின் உயிரிழப்பு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை வைக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CALL ME