Vbalu Advt: ஒரு சுத்தியல் சத்தமின்றி நேசமணிகளின் தலையில் இறங்குகிறது.. எப்போதும் போல கன்னத்தில் தேய்த்த அலை பேசியோடு கடக்கிறான் என் சகோதரன்… இந்த மன்றத்தின் எல்லாக் கூடுகளிலும் இருந்து வாதாடுவதற்கு வழக்கறிஞன் இல்லையா என்ற பறவைகளின் புலம்பல் எந்த்க் காதுகளையும் எட்டவில்லை..

[6/4, 19:09] Vbalu Advt: ஒரு சுத்தியல் சத்தமின்றி
நேசமணிகளின் தலையில் இறங்குகிறது..
எப்போதும் போல கன்னத்தில் தேய்த்த அலை
பேசியோடு கடக்கிறான்
என் சகோதரன்…
இந்த மன்றத்தின் எல்லாக்
கூடுகளிலும் இருந்து
வாதாடுவதற்கு வழக்கறிஞன் இல்லையா என்ற பறவைகளின் புலம்பல் எந்த்க் காதுகளையும் எட்டவில்லை..
வழக்காடிகள் அழுது புலம்பிச் செல்லும் மௌன
ஒப்பாரியின் நீட்சியாய்
புறாப் பிள்ளைகளின் புலம்பல்..
எந்தப் புறாவுக்கென சதையறுத்த சிபியின் ஊரில்
எந்தத் சத்தமின்றி
கதிர்வீச்சு கொட்டும்
நெடுங்கோபுரம்…
சமாதானம் மட்டுமே அறிந்த புறாக்கள் எப்படி
சண்டை போடும்?
என் மன்றத்தின் எல்லா வாயில்களிலும் இனிமேல்
புறாப்பிணம் தாண்டிக் கன்னத்தில் தேய்த்த கைபேசியுடன் கடக்கலாம்..
சிக்னல் இப்போதுதான் சரியாகக் கிடைக்கிறதாம்.
சூழல் அழித்து, வாயற்ற உயிர்களின் வம்சம் அழித்து
என்ன பேசப் போகிறீர்கள்?
அரசியல், சினிமா, வாட்ஸப் வம்புகள்.
தவிர்த்து என்னகிழியப்போகிறது?
அதிலும் கூட அரசுத் துறைக்கு அனுமதி இல்லை..
தனியார் கோபுரம்..
நாளைக்குக் கேள்வி வரும்
அறிவியல் ரீதியாய் ஆதாரம் உண்டா?
கதிர்வீச்சின் அளவைக் கட்டாயம் சொல்கவேண்டும்.. SAR எவ்வளவு என்று?
யாரும் கேட்டு யாரும்சொல்லப் போவதில்லை..
இனி கீழே மரணமுற்றுக் கிடக்கும் புறாவின் சிறகெடுத்துக் காது குடைந்தபடி வழக்கு
நடத்தலாம்.
போய்வாருங்கள் புறாக்களே….

மனிதமற்ற பூமியில்
மனிதனற்ற ஒரு நாளில்,
ஒரு வேளை உங்கள் பாட்டுச்சத்தம்
ரிங்டோனாக இருக்கலாம்…
தண்ணீதில்லாத பூமியில்
கண்ணீர் குடிப்போம்(வே. பாலு.வழக்கறிஞர்)..
[6/4, 20:28] Sekarreporter1: Ok sir

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CALL ME