சொத்து ,குடும்பம் மற்றும் பணம் விவகாரம் தொடர்பாக காவல் நிலையங்களுக்கு புகார் வந்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்பி தீர்வுகாண வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

சொத்து ,குடும்பம் மற்றும் பணம் விவகாரம் தொடர்பாக காவல் நிலையங்களுக்கு புகார் வந்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்பி தீர்வுகாண வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்புக்குழு உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான சிங்காரவேலன் மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்

,கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.கே.நகர் காவல் நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே ஒரு வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த பார் கவுன்சில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவில் காவல் நிலையங்களில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கவும் வழக்கில் தொடர்பில்லாதோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை தடுக்கும் வகையிலும் சொத்து,பணம் விவகாரம் மற்றும் குடும்ப தகராறு தொடர்பான புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் பாதிக்கப்பட்ட இருதரப்பினரும் மாவட்ட சட்டப்பணி ஆணைகுழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்

இரு தரப்புக்கும் அழைத்து பேசப்பட்டால் சமரசம் ஏற்பட கூடும் அதன் அடிப்படையில் எப்ஐஆர் போடுவதை தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்

பேட்டி
மூத்த வழக்கறிஞர்
சிங்காரவேலன்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்புக்குழு உறுப்பினர்

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CALL ME