விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிகளை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிகளை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழக தலைவருமான கே.கோபிநாத் தாக்கல் செய்துள்ள மனுவில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You may also like...