வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

[8/12, 08:26] Sekarreporter: வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன.
இதில் சில வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வணிக வரித்துறை அதிகாரி ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு ஏராளமானோர் நுழைவு வரி செலுத்தாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அப்படி எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, ஆலந்தூர் உதவி ஆணையர் அதிகாரத்துக்கு உட்பட்டதில் 2 வழக்குகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம்,
பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கிக் கொண்டு நுழைவு வரியை செலுத்தாமல், வழக்கு தொடர்ந்துள்ளனர், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டபோதும், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினார். தமிழ்நாடு நிதி அமைச்சர் கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதிகாரிகள் ஒழுங்காக வரியை வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

வரியை வசூலிக்காமல் இழுத்து அடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டதன்படி, எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது??
வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு காலதாமதமாக வருவாய் வருகிறது.
ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, வெள்ளிக்கிழமைக்குள் ((ஆகஸ்ட் 13)) சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் எண்களை வணிக வரித்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அந்த வழக்குகள் அனைத்திலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
[8/12, 08:40] Sekarreporter: ராணிப்பேட்டை கனகராயர் ஏரிக்குள் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அப்புறப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கண்ணம்மா என்கிற 80 வயது மூதாட்டி தாக்கல் செய்துள்ள வழக்கில்,
1982ஆம் ஆண்டு 4 ஏக்கர் 26 சென்ட் நிலம் வாங்கி, விவசாயம் செய்து வருவதாகவும், அதற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் கனகராயர் நீர்வீழ்ச்சி என்ற ஏரி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்மூலம் ஏராளமானோர் விவசாயம் செய்து வந்த நிலையில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், அவர்கள் ஏரிக்குள் செல்ல பாதை இல்லாததால் தன்னுடைய விவசாய நிலத்தை போக்குவரத்து பாதையாக பயன்படுத்தி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ள ஏரியை ஆக்கிரமித்ததுடன், அடிக்கடி தகராறு செய்வதாகவும், தற்போது ஏரிக்குள் 5 வீடுகள் கட்டுப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் வசித்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வ-ழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏரியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும். ஒருவேளை வீடுகள் இருந்தால் அந்த வீடுகளை கட்டியவர்கள், மனுதாரர் ஆகியோருக்கு வாய்ப்பு அளித்து, அவர்களிடம் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை குறித்த அறிக்கையை 12 வாரத்துக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
[8/12, 08:50] Sekarreporter: கடந்த 2006ல் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர், காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில், அப்போதைய உதவி ஆய்வாளருக்கு எதிரான விசாரணையை முடித்து 3 மாதங்களில் இறுதி உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜ் என்பவரின் மகன் அருண் பரத்தை, 2006ம் ஆண்டு மிரட்டல் புகார் குறித்து விசாரிப்பதற்காக சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக அவரை அவரது வீட்டில் வைத்து உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் கடுமையாக தாக்கியுள்ளார்.

காவல் நிலையத்துக்கு சென்றதும், வாகனத்தில் இருந்து இறங்கிய அருண் பரத், அங்கு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அருண் பரத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்ட காவல் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அருண் பரத்தின் தந்தை டேவிட் இன்பராஜ், மனித உரிமை ஆர்வலர்கள் ராமச்சந்திரன், ஹென்றி திபேன் ஆகியோர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், அப்போதைய உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 மாதங்களில் முடித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மற்ற ஐந்து காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறிய மனித உரிமை ஆணையம், அவர்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.

மேலும், பலியான அருண் பரத்தின் தந்தைக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், அத்தொகையை உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமாரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

You may also like...