வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார். [9/17, 20:35] Sekarreporter: 💐💐

[9/17, 20:35] Vijayaraj Special PP ADMK: உள்ளிக்கோட்டை பொய்யாமொழிக்கு இரட்டை ஆயுள் தண்டனை.
பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

கடந்த 25.12.2005 அன்று, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், கீழதிருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை காலை 9.30 மணி அளவில், சுந்தரக்கோட்டை மெயின் ரோட்டில் வைத்து பொய்யாமொழி, வக்கீல் இளங்கோவன், செல்வம், ஆசைதம்பி ஆகிய நால்வரும் வெட்டி கொன்றனர். இதில் பொய்யாமொழி தமிழ்செல்வனின் வலது கையை தனியாக வெட்டி எடுத்து சென்று விட்டார்.
இது குறித்து பரவாகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர், சிலர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

இந்த வழக்கில் கீழ்கண்ட 9 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1. பொய்யாமொழி
2. S.இளங்கோவன்
3. செல்வம்
4. ஆசைதம்பி
5. பத்மாவதி
6. கனிமொழி
7. கயல்விழி
8. R.இளங்கோவன்
9. அமுதரசன்

ஜாமினில் வந்த பலர் தலைமறைவாகி விட்டனர். ஒருவர் இறந்து விட்டார்.
தனியாக பிரிக்கப்பட்டு நடந்த வழக்கில், வக்கீல் இளங்கோவன் மற்றும் டிரைவர் அமுதரசன் ஆகியோருக்கு கடந்த 30.9.2019 அன்று பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. மூன்று பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த உள்ளிக்கோட்டை சேர்ந்த பொய்யாமொழி கடந்த 23.11.2019 அன்று கைது செய்யப்பட்டார். பொய்யாமொழி மீதான வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில்
30 அரசு சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 14 பொருட்களும், 50 ஆவணங்களும்
குறியீடு செய்யபட்டது.

இந்த நிலையில் இன்று (17-09-2021) தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், பொய்யாமொழி மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளும் அரசு தரப்பில் நிரூபிக்கபட்டுள்ளதாக தெரிவித்து கீழ்க்கண்ட தண்டனைகளை வழங்கினார்.

1. 120 (B) (குற்றசதிஆலோசனை)- ஆயுள் தண்டனை மற்றும் 25,000 அபராதம்

2. 302 (கொலை) -ஆயுள் தண்டனை.மற்றும் 25,000 அபராதம்

3. பிரிவு 6 வெடிபொருள் சட்டம் பிரிவு – 7 வருடம் கடும்காவல் தண்டனை மற்றும் 25,000 அபராதம்

4. 201 IPC- (தடயத்தை மறைத்தல்)- 7 வருடம் கடும்காவல் தண்டனை
மற்றும் 25,000 அபராதம்.

மொத்தமாக ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்துள்ளார். அதில் 50000 ரூபாய் இறந்து போன தமிழ்செல்வனின் மனைவி மஞ்சுளாவிற்கு கொடுக்க உத்தரவு.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செல்வம் மற்றும் ஆசைதம்பி ஆகியோர் இன்னும் தலைமறைவாக இருகின்றனர்.

இந்த வழக்கிலும், ஏற்கனவே வக்கீல் இளங்கோவன், அமுதரசன் ஆகியோர் மீது நடந்து ஆயுள் தண்டனை கிடைத்த வழக்கிலும் அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் N.விஜயராஜ் ஆஜரானார்.
[9/17, 20:35] Sekarreporter: 💐💐

You may also like...