லீனா மணிமேகலை தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரங்கள் 1. தன் மீது லீனா மணிமேகலை தனிப்பட்ட விரோதத்தால் ஆதாரமில்லாமல் மலிவான விளம்பரத்திற்காக மீ டூ

 

லீனா மணிமேகலை
தொடர்பான நீதிமன்ற வழக்கு விவரங்கள்

1. தன் மீது லீனா மணிமேகலை தனிப்பட்ட விரோதத்தால் ஆதாரமில்லாமல் மலிவான விளம்பரத்திற்காக மீ டூ குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதாக , 2018 ஆண்டு , சுசி கணேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மான நஷ்ட அவதூறு வழக்கு தொடர்ந்த்ர்.
2. சுசி கணேசனின் குறுக்கு விசாரனை பாதியில் இருக்கும் போது , canada வில் இருக்கும் yolk university சினிமா படிப்பதற்கு புலம்பயர்வதாக facebook- ல் லீனா அறிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து சுசி கணேசன் சென்னை உயர் நீதி மன்றத்தில் விரைவாக வழக்கை நடத்திட உத்தரவிட முறையிட்டார் . 9 மாத்ங்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்க 2020 ஆகஸ்ட்டில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
3. உயர் நீதிமன்ற உத்தரவு இருந்தும் விசாரணை தாமதம் ஆனது . இத்ற்கிடையே , கனடாவிற்கு செல்லப்போவதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் லீனா மனு செய்த்தார் . கிரிமினல் வழக்கு விசாரணையை தாமத்திக்கும் நோக்கில் , வெளி நாட்டுக்கு தப்பியோடும் முயற்ச்சியை தடுக்கும்படி , பாஸ்போர்ட்டை முடக்க பாஸ்போர்ட் அதிகாரிக்கு சிபாரிசு செய்ய உத்தரவிடக் கோரி சுசி கணேசன் மனு செய்தார் . Sep 2021 – ல் சைதாப்பேட்டை நீதிமன்றம் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை முடக்குவதற்கு பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டது .
4. அந்த உத்தரவை எதிர்த்து லீனா உயர் நீதி மன்றத்தை நாடினார் . லீனாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்ததோடு , கிரிமினல் வழக்கில் ஆஜர் ஆகத் தேவையில்ல என்ற விலக்கும் கிடைத்தது.
5. சுசி கணேசன் சுப்ரீம் கோர்ட்டை நாடினார் . 6 மாதம் படித்துவிட்டு வருவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கேட்டார் லீனா. அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் 4 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்க உத்தரவிட்டது .
6. மே 23 , 2022 – ல் , கனடாவில் இருந்து திரும்புவதாகவும் இடைப்பட்ட மாதங்களில் தனது வழக்கறிஞர்கள் வழக்கை நடத்துவார்கள் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உத்ரவாதம் அளித்துவிட்டு , பிப்ரவரி மாதத்தில் கனடாவிற்கு சென்றார்.
7. சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நீதிமன்றத்தில் , சைதாப்பேட்டை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் லீனா. அதன் அடிப்படையில் , சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருந்த்ஹும் , விசாரணையை நடத்தமுடியாமல் , தொடர்ந்து கீழமை நீதி மன்றம் வாய்தா கொடுத்தது .
8. சென்னை செசன்ஸ் கோர்ட் , லீனாவின் மனுவை தள்ளுபடி செய்தது . தவறான தகவல்களை தந்ததோடு , ஆதரமில்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக கண்டித்ததோடு , வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்திட உத்தரவிட்டது
9. செசன்ஸ் கோர்ட் உத்தர்வை எதிர்த்து , சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் லீனா. வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் , சைதாப்பேட்டை நீதிமன்றம் வாய்தா மேல் வாய்தா கொடுத்துக்கொண்டிருக்கிறது
10. ஒரு நாள் விசாரண கூட நடக்காமல் , சுப்ரீம் கோர்ட் கொடுத்த 4 மாத கெடுவும் ஜூன் 6 – ம் தேதியோடு முடிந்து விட்டது . இடையில் , கனடாவில் தனது படிப்பின் காலம் நீடிக்கப்பட்டதாகவும் , தன்னால் , செப்டம்பர் மாதத்தில்தான் இந்தியா திரும்பமுடியும் என சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் மனு செய்திருக்கிறார் லீனா.
11. கோர்ட் வழக்கில் ஆஜர் ஆகாமல் , சோசியல் மீடியாவில் வழக்கை நடத்துவதாகவும் , லீனா மீதும் பாடகி சின்மயி மீதும் 1.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு , சென்னை உயர் நீதிமன்றத்தில் சுசி கணேசன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்ப்பாக பத்திரிகைகளிலோ , சோசியல் மீடியாக்களிலோ பேசக்கூடாது என உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்தது.
12. உயர் நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல் , லீனா மீண்டும் பத்திரிகையில் பேட்டி கொடுத்ததால் ,மே மாதம் உயர் நீதி மன்றத்தில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி , லீனா மணிமேகலை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது . காளி தெய்வம் சிகரெட் குடிப்பது போல லீனா மணிமெகலை கனடாவில் போஸ்டர் வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இன்றைய விசாரணை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது

You may also like...