லீனாமணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை… ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்த இயக்குனர் சுசிகணேசன் வழக்கில் உத்தரவு….

லீனாமணிமேகலை மற்றும் பாடகி சின்மயிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை… ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்த இயக்குனர் சுசிகணேசன் வழக்கில் உத்தரவு….

 

மீடூ குற்றச்சாட்டை எதிர்த்து ,2019 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை மீது சுசிகணேசன் சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் . வழக்கை இழுத்தடித்து லீனா மணிமேகலை தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வந்த நிலையில் , நான்கு மாதத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது . அடுத்த நாள் , தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார் . தவறான தகவல்களை ப்ரப்புவதாகவும் , உண்மையில் அவரது உயிருக்கு யாரால் ஆபத்து என்பதை கண்டறிந்து , தனக்கு பாதுகாப்பு வழங்குமறு சென்னை காவல் துறையில் சுசி கணேசன் புகார் அளித்திருந்தார் .

இன்னிலையில் தனது அடுத்த தமிழ் படமான “வஞ்சம் தீர்த்தாயடா” அறிவிப்பினையையும் வெளியிட்டிருந்தார் சுசி கணேசன் . இதனைத் தொடர்ந்து ,பாடகி சின்மயி தானாக முன்வந்து சுசி கணேசனுக்கு எதிராகவும் , அவரது படத்தைப் பற்றியும் பணியாற்றும் கலைஞரிகள் பற்றியும் அவதூறு கருத்துக்களை ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அதனை சில பத்திரிக்கைகளும் பிரசுரம் செய்தன. தன்னோடு எந்த விதத்திலும் தொடர்பில்லாத நிலையிலும் சின்மயி தன் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவதூறு பரப்புவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுசி கணேசன் ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் .

லீனா மணிமேகலை , சின்மயி ,தன்யா ராஜேந்திரன் உள்ளிட்டோர் தவிர ஃபேஸ்புக் , டுவிட்டர் கூகுள் – இணைத்து சுசி கணேசன் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு இன்று நீதி அரசர் அப்துல்லா குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . சுசிகணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “அவதூறு வழக்கு சுசி கணேசன் அவர்களால் போடப்பட்டது .ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவர் குற்றவாளி என்பது போல தொடர்ந்து அவதூறு செய்யப்படுவதாகவும் தொழிலுக்கும் பெயருக்கும் தொடர்ந்து லீனா மணிமேகலையும் , சின்மயி- , டுவிட்டர் , பேஸ்புக் தளங்களை பயன்படுத்தி – தொடர்த்து களங்கம் ஏற்படுத்துவதாக முறையிட்டார் .

இந்த வழக்கை விசாரித்த நீதி அரசர் லீனா மணிமேகலை சின்மயி உட்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கமீடியாவில் பேசுவதற்கும் சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவதற்கும் தடை விதித்து ஃபேஸ்புக் ட்விட்டர் கூகுள் நிறுவனங்களுக்கும் சின்மயி லீனா மணிமேகலை லீனா மணிமேகலை பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூ டியூப் சேனல் தன்யா ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் . மேலும் இவ்வழக்கு தொடர்பாக இரு தரப்பும் பத்திரிக்கைகளிலும் , சோசியல் மீடியாகளிலும் பேசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார் .

You may also like...