யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை கிளை பதிவாளருக்கு உத்தரவு. உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பற்றி சவுக்கு சங்கர் அவதூறாக டுவிட் செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு.

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை கிளை பதிவாளருக்கு உத்தரவு.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பற்றி சவுக்கு சங்கர் அவதூறாக டுவிட் செய்துள்ளார் என்பது குற்றச்சாட்டு.

நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுக்கும் வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவு

பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

சவுக்கு சங்கர் மீது இதுவரை பெற்ற புகார் விவரங்களை பிரமாணப்பத்திரமாக உரிய அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:-

சவுக்கு சங்கர் என்பவர் ஒரு யூடியூபர்,விமர்சகர்,

தனிநபர்கள் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவைகளை கடுமையாக தாக்கி செயல்படுகிறார்.

அவர் கடந்த சில மாதங்களாக என் மீதும் எனது தீர்ப்புகள் குறித்தும் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதாவது யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுவை உரிய முறையில் விசாரித்து அவர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்தேன்

இதை சவுக்கு சங்கர் மோசமான வார்த்தைகளில் கண்டித்திருந்தார்

எனது தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு அவரது புண்படுத்தும் கருத்துகள் மூலம் எனது நேர்மையை கேள்விக்கு ஆளாக்கியுள்ளார்.

நான் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்று 5 ஆண்டுகள் ஆகின்றன.

இதுவரை 70,014 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளேன்.

நான் பெறும் சம்பளம் மற்றும் சலுகைகளை அனுபவிப்பதற்கு முழுமையாக பணியாற்றி உள்ளேன் என நம்புகிறேன்.

இதற்காக காலை 9.30 மணிக்கெல்லாம் பணிகளை தொடங்கி, கடுமையாக உழைத்துள்ளேன்.

ஆனால் சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி உதவித்தொகை பெறுவதாக கூறப்படுவது நகைப்புக்குரியது.

எந்த வேலையும் செய்யாமல் அரசிடம் உதவித்தொகை பெறும் ஒருவருக்கு கருவூலத்தில் இருந்து பெறும் ஒவ்வொரு பைசாவுக்கும் உழைக்க வேண்டும் என்று நினைக்கும் நீதிபதியை கேலி செய்யும் துணிச்சல் ஏற்பட்டு உள்ளது.

இதுமட்டுமல்ல, அவர் மீது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தற்போது வரை நிலுவையில் உள்ளதையும் அறிந்தேன்.

எனவே அவர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிடப்படுகிறது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடுகிறேன். பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சங்கர் மீது இதுவரை பெற்ற புகார் விவரங்களை பிரமாணப்பத்திரமாக உரிய அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

____

திருநெல்வேலி
மருதூரை சேர்ந்த முருகேசன் மற்றும் வாகை குளத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் ஆகிய இருவரும்
காவல் நிலைய சித்ரவதைக்கு பின் மரணம் அடைந்தது குறித்து அனைத்து ஆவணங்களையும் வரும் 28 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கடந்த 2018 மார்ச் மாதம் திருநெல்வேலி மாவட்டம் மருதூரை சேர்ந்த முருகேசன் மற்றும் வாகை குளத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் ஆகிய இருவரையும் அம்பாசமுத்திரத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் இருவரையும் கொடுமையான முறையில் அடித்துள்ளனர்.

கடுமையாக நான்கு நாட்கள் தாக்கப்பட்டு கால் எலும்புகள் முறிந்து உள்ளது. பின்பும் இருவரையும் இடைவிடாது போலீசார் அடித்த சூழ்நிலையில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். மாணிக்கராஜ் மற்றும் முருகேசன் ஆகியோர் 22 வயதுக்கு உட்பட்டவர்களே.

முருகேசனின் மனைவி கரர்ப்பமாக அப்போது இருந்து உள்ளார் .

திருமணமான ஒரு சில மாதமே ஆன சூழல் நிலையில் அவர் இருந்துள்ளார்.

இது கொடூரமான லாக்கப் மரணம்

சாத்தான் குளம் மரணத்தைவிட இது மோசமானதாக கருதப்படுகிறது.

5 நாட்களும் கடுமையான முறையில் பல போலீசார் இவர்களை தாக்கியுள்ளனர் மேலதிகாரிகள் உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் இதில் குற்றவாளிகள் என கருதப்படுகிறது.

உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம் அப்போதைய நீதிபதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தார்

அந்த உத்தரவில் அவர் இந்த வழக்கை மிக விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார்.

இருப்பினும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை

2020ல் மாஜிஸ்திரேட் விசாரணையின் பொழுது இது லாக்கப் டெத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இது உறுதி செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவு பெற்ற விட்டது

வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்லியும் கூட சிபிசிஐடி போலீசார் இதுவரை இந்த வழக்கை இழுத்து வருகின்றனர்

ஆகவே இந்த வழக்கை சிபிஐ போலீசார் தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.

நீதிபதி முரளி சங்கர் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சிபிசிஐடி போலீசாரை
கடுமையாக
எச்சரித்ததோடு ஏன் நான்கு வருடங்களாக இந்த வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுப்பினார்.

வருகிற 28ஆம் தேதி அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிபதி பிறப்பித்து உள்ளார்.

You may also like...