பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர்

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, பாஜக சார்பில் பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் பாரதமாதா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்க பேரணியாக சென்றனர்.
பாரதமாதா திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவாலயத்தில் முன்புறம் உள்ள கதவு பூட்டி இருந்த நிலையில் பாஜகவினர் அந்த பூட்டை திறக்க சொல்லி அங்கே வேலை செய்யும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணியாளர் பூட்டை திறக்க மறுத்ததால் பாரதமாதா நினைவாலய கதவின் பூட்டை உடைத்து பாரதமாதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாரதமாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கே பி ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்துபேரை கைது செய்தனர். இந்த நிலையில் இவர்களது ஜாமின் மனுவை தர்மபுரி செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐந்து பேரும் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை வந்த து. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறி பால் கனகராஜ் ஆஜராகி, பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதாகவும் பூட்டை உடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். 1947 க்கு முன்பு மாலை அணிவித்து இருந்தால் அவர்கள் தியாகி என்றும் தற்போது குற்றவாளி என்றும் எனவே ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக்
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலேயே கைது செய்யப்பட்டனர் என்றும்,இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கே பி ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரையும் பேரையும் நிபந்தனை ஜாமில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கையெழுத்து இடவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

You may also like...