பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் ஒரு இலட்சம் இழப்பீடு:உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.

[3/10, 20:38] Sekarreporter1: பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் ஒரு இலட்சம் இழப்பீடு:உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் எழிலரசிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.

முன்னாள் விழுப்புரம் மாவட்டம் தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இருந்தை கிராமத்தைச் சார்ந்த ஜெகநாதன் மனைவி சுந்தரி என்பவர் தன் வீடடருகில் உள்ள இராசாமணி மற்றும் அவரது உறவினர்கள் கூட்டாகச் சேர்ந்து, கடந்த 17.12.2017 – அன்று,சுந்தரிக் குடும்பத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், சுந்தரியைத் தரகுறைவாகத் திடடி கொலைவெறியுடன் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். புகார் பெற்ற அப்போதைய திருநாவலூர் காவல் நிலைய சார்வாய்வாளரும் தற்போதைய உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளருமான திருமதி. எழிலரசி என்பவர், பாதிக்கப்பட்ட சுந்தரியிடம் வழக்குப்பதிவு செய்ய, ரூபாய் 5000/- கேட்டுள்ளார். பரம ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரியிடம் கடன் வாங்கிக் கொடுத்த ரூபாய் 2000/- பெற்றுக்கொண்டு, ரூபாய் 3000/- குறைகிறது என்று வழக்குப் பதிவு செய்யவில்லை.

பாதிக்கப்பட்ட சுந்தரி, வழக்குப்பதிவு செய்யவேண்டுமெனக்கோரி அப்போது விழுப்புரம் மாவட்டக்காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்புகிறார். அதன் பிறகும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீண்டும், அதே இராமசாமி மற்றும் சுப்பிரமணி தரப்பினர் அடிதடிக்கலவரம் செய்கின்றனர். இந்த சம்பவத்திற்கு வழக்குப்பதிவு செய்த, திருநாவலூர் காவல் நிலையத்தினர், எதிர்தரப்பினரிடம் பிரதி உபகாரம் பெற்றுக்கொண்டு, சுப்பிரமணியிடம் புகார் மனு பெற்று, சுந்தரியின் மகன் காமராசு மற்றும் சிலரைக் கைது செய்து சிறைப்படுத்துகின்றனர். இந்த நிலையில்,
[3/10, 20:38] Sekarreporter1: இந்த நிலையில், புகாரில் எந்தவொரு தொடர்பும் இல்லாத, புகாரில் பெயரும் இல்லாத சுந்தரியை 08.02.2018- அன்று முன்னிரவு சுமார் 11-30 மணியளவில், தனியாக இருந்த சுந்தரியின் வீட்டுக்குள், சட்டவிரோதமாக நுழைந்து, கன்னத்தில் அறைந்து, தரக்குறைவாகத் திட்டிய காவல் சார்பாய்வாளர் எழிலரசி, சுந்தரியின் அடிவயிற்றில் பூட் காலில் எட்டி உதைத்து, தலைமுடியைப் பிடித்து வெளியில் இழுத்து வந்து காவல் வண்டியில் ஏற்றி, சுமார் நள்ளிரவு 12.00 மணிக்கு திருநாவலூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறார். அடைந்த பிரதிபலனுக்காகவும், காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்ததற்காகவும், அடுத்த நாள் (09.02.2018) முதல் தகவல் அறிக்கையைத் திருத்தம் செய்து சுந்தரியைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார். நீதிமன்றத்தில் பிணை உத்தரவு பெற்று 6 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளி வந்த சுந்தரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

மனுவில் இருதரப்பையும் விசாரணை செய்த, மாநில மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர் நீதியரசர் துரை. ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு, காவல் ஆய்வாளர் எழிலரசி, பெற்ற புகாரில், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து லலித்குமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனவும், ஒரு பெண்ணைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, அர்னேசு குமார் வழக்கில்
உச்சநீதிமன்றம் வழங்கிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனவும் தீர்வு செய்து, பாதிக்கப்பட்ட சுந்தரிக்கு ரூபாய் ஒரு இலட்சத்தை தமிழ்நாடு உள்துறை இழப்பீடாக வழங்கவேண்டும். அந்தத் தொகையை அரசு, அப்போதைய திருநாவலூர் காவல் நிலைய சார்வாய்வாளரும் தற்போதைய உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளருமான திருமதி. எழிலரசி என்பவரிடம் வசூல் செய்து கொள்ள வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

You may also like...