நீதிமன்றங்களை மட்டும் இன்னும் திறக்காமல் இருப்பது மிகப்பெரும் வேதனை.முஸ்தகீம் ராஜா, வழக்கறிஞர்,

வழக்கறிஞர் பெருமக்களே! தமிழகம் முழுக்க ஏறக்குறைய 60% பணிகளை தமிழக அரசு துவக்கி விட்டது. பொது போக்குவரத்து வரும் 18ஆம் தேதி முதல் துவக்கிட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால், நீதிமன்றங்களை மட்டும் இன்னும் திறக்காமல் இருப்பது மிகப்பெரும் வேதனை.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களை சுத்தகரிக்கும் பணிகளை துவங்கி இம்மாத இறுதிக்குள் நீதிமன்றங்களை, குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகளை துவக்கிட வழக்கறிஞர் சங்கங்கள் தயவு கூர்ந்து முயற்சி மேற்கொண்டு, இதுகுறித்து மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

கிட்டத்தட்ட 47 நாட்களாக நீதிமன்றங்கள் செயல்படாதது வழக்கறிஞர்களுக்கு, வழக்காடிகளுக்கும் பெரும் சிரமத்தை, கஷ்டங்களை ஏற்படுத்தி உள்ளது, இந்நிலையில் தற்போது தாமதிக்காமல் விரைந்து நீதிமன்றங்களை திறந்து வழக்கு பணிகளை துவக்கினால் ஓரளவு பணிகள் நடைபெற்று ஆறுதலைத்தரும். வழக்கறிஞர் பெருமக்களே, வழக்கறிஞர்கள் சங்கங்களே விரைந்து செயலாற்றி, உடனடியாக நடவடிக்கைகள் எடுங்கள் என பணிவுடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.- முகம்மது முஸ்தகீம் ராஜா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம். 09.05.2020

You may also like...